""தலைவர் எதுக்கு முதுகுல எடுத்த எக்ஸ்ரேவை பத்திரிகைகாரங்களை கூப்பிட்டு காண்பிக்கிறார் ?''
""மாற்றுக்கட்சி தலைவர், தலைவரை பார்த்து.. முதுகு எலும்பு
இல்லாதவர்னு சொல்லிட்டாராம்''
""ஸ்கூல் டீச்சரை கல்யாணம் செய்து கொண்டது தப்பா போச்சு'' .
""ஏன் ?''
""ஏகப்பட்ட ஹோம் ஒர்க் கொடுக்கறா'' .
- தீபிகா சாரதி
சென்னை -5
மானேஜர்: "யாரோ பேசறாங்க, என் மனைவி பேசறதா சொல்லி ரிசீவரை கொடுத்துட்டுப் போயிட்டியே?'
பியூன் : "சாரி சார்... ரகுராமன் இருக்கானா ?'ன்னு கேட்டதும், உங்க மேடம்னு நினைச்சிட்டேன் சார் !'
""காசில்லாமல் சாப்பிட்டதுக்குத்தான் மாவாட்டிக் கொடுத்துட்டேனே, எதுக்கு என்னோட போன் நம்பரை கேக்கறீங்க?"
"பயப்படாதய்யா... நீ அருமையா மாவாட்டிருக்கேன்னு சொன்னாங்க; அதான் தேவைப்படும் போது கூப்பிட்டுக்கலாம்னு நம்பர் கேட்டேன்!"
- வி. ரேவதி,
தஞ்சை.
""நம்ம வாழ்க்கைல சந்தோஷம் என்பது ராங் கால் மாதிரி... எப்பவாச்சும் வரும்.. ஆனா கஷ்டம்....''
""நீயே சொல்லு...''
""ஆனா கஷ்டம்ன்றது கம்பெனி கால் மாதிரி... எப்பவும் வரும்....''
""கடவுளே எனக்கு நல்ல வேலை, பெரிய வீடு, காரு இதெல்லாம் குடு..''
""இப்ப நீ உண்டியல்ல போட்டியே அந்த 2 ரூபாய்க்கா இவ்வளவும்
கடவுள்கிட்டே கேட்கிறே ?''
எம் ஏ நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


