தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திரைக்கதிர்

ஸ்ரீகார்த்திக் இயக்கும் படம் "கணம்'. அமலா, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

News image
Updated On :6 பிப்ரவரி 2022, 12:30 am

DIN

ஸ்ரீகார்த்திக் இயக்கும் படம் "கணம்'. அமலா, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் இடம் பெறும் அம்மா பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த அம்மா பாடல்தான் படத்திற்கு ஆதார ஸ்ருதி என்கிறார் இயக்குநர் ஸ்ரீகார்த்திக். அவர் பேசும் போது...

"" அம்மா பாடல்தான் "கணம்' படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான்... இந்தப் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம். இந்தப் பாடலைக் கேட்ட பிறகுதான், அடுத்து எந்தப் பார்வையோடு இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. தெலுங்கில், மறைந்த பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரி எழுதிய பாடலை தமிழுக்கு அப்படியே மாற்றவில்லை. பாடலின் அதே கருவை வைத்துத் தமிழில் மொத்தமாக புதிய வரிகளை உருவாக்கி இருக்கிறோம்'' என்றார்.

-------------------------------------------------

கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கியவர் புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டுமரணம் அடைந்தார். இந்த திடீர் மரணம் தென்னிந்தியா முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்து வெளியான படம் "யுவரத்னா'. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இப்படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கியிருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. புனித் ராஜ்குமார் மரணம் அடைவதற்கு முன்பு கடைசியாக நடித்துள்ள படம் "ஜேம்ஸ்'. இதனை சேத்தன் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் முதல்முறையாக புனித் ராஜ்குமார் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இதை முன்னிட்டு அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக கடந்த குடியரசு தினத்தன்று அவரின் ராணுவ வீரர் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

-------------------------------------------------

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கவிருக்கும் படத்திற்கு "ரேக்ளா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

"வால்டர்' படத்தை இயக்கிய அன்பு இயக்குகிறார். கதையின் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் பணியாற்றும் நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவாவின் நடிப்பில் 58ஆவது படமாக இது உருவாகி வருகிறது.

-------------------------------------------------


இயக்குநர் சுசீந்திரன் டி. இமான் கூட்டணி மீண்டும் இணைகிறது. "பாண்டியநாடு', "ஜீவா', "பாயும் புலி', "மாவீரன் கிட்டு', "நெஞ்சில் துணிவிருந்தால்', "கென்னடி கிளப்' என ஆறு படங்களில் இதுவரை இந்த கூட்டணி இணைந்து பணிபுரிந்து வந்துள்ளது.

இசையமைப்பாளர் டி. இமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் சுசீந்திரன், தான் 7 ஆவது முறையாக டி. இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறு
வதாகவும் தெரிவித்துள்ளார்.

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை, மே 1 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

-------------------------------------------------

விக்ரம், துருவ் நடித்துள்ள "மகான்' படம், பிப்ரவரி 10 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. "பீட்சா', "ஜிகர்தண்டா', "இறைவி', "பேட்ட', "ஜகமே தந்திரம்' படங்களுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் "மகான்'. இதில் விக்ரம், அவரது மகன் துருவ், வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் அமேசான் பிரைமில் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகிறது. தந்தை மகனுக்கு இடையிலான பாசப் போராட்டமும் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் பழிவாங்கலும் நிறைந்த ஆக்ஷன் த்ரில்லராக "மகான்' படம் உருவாகியுள்ளது. இது ஒரே சமயத்தில் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சென்றடைவது மகிழ்ச்சியான விஷயம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.