மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திரைக் கதிர் 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. 1

News image
Updated On :3 ஜூலை 2022, 10:17 am

தினமணி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. 1988-ஆம் ஆண்டு டி.வி. நடிகராக நடிப்புத் துறைக்கு அறிமுகமான ஷாருக்கான், தொடர்ந்து சில ஆண்டுகள் டிவி தொடர்களில் நடித்து வந்தார். 1992-ஆம் ஆண்டு "தீவானா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதே ஆண்டு அவரின் நடிப்பில் மேலும் 3 படங்கள் வெளியாகின. 

மலையாள சினிமா உலகின் மன்னர்களாக வலம் வருபவர்கள் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி. இவர்கள் மூவரும் ஒன்றாக நடித்த படங்கள் அரிதினும் அரிதானவை. அதே சமயம் அவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வதும் மிகவும் அபூர்வம். சமீபத்தில் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி ஆகியோர் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியானது. அந்தப் புகைப்படத்தை வைத்துக் கொண்டாடித் தீர்த்துவிட்டனர் ரசிகர்கள்.

காதலை மையப்படுத்தி எத்தனை படங்கள் வந்தாலும் காதல் என்றவுடன் பெரும்பாலான காதலர்களுக்கு நினைவில் வருவது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான "டைட்டானிக்' படம்தான். அந்தப் பிரமாண்ட கப்பலும், காதலும் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் நிழலாடும். டிசம்பர் 17-ம் தேதி 1997-ல் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் உலகம் முழுவதும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது 
"டைட்டானிக்'.

Story image

ஆலியா பட் அம்மாவாக இருக்கிறார் என்பதுதான் பாலிவுட்டில் புதிய அறிவிப்பு. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ஆலியா, "எங்கள் குழந்தை... விரைவில்" என்கிற கேப்ஷனோடு ரன்பீர் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அதில் இருவரும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் திரையில் தங்கள் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதே பதிவில் ஒரு சிங்க குடும்பத்தின் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார் ஆலியா.  

தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் "சவரக்கத்தி' இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் படம் "டெவில்'. விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். மேலும் இதன் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் மிஷ்கின். இதற்கு முன் பல பாடல்கள் எழுதியுள்ளார், பல பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானது. 

விவாகரத்துக்குப் பிறகு பெரும்பாலும் சமந்தா தனது கடந்தகால வாழ்க்கை குறித்து பேசுவதைத் தவிர்த்து வந்தார். சமந்தா - நாக சைதன்யா இருவரும் பரஸ்பரம் பிரியவிருக்கும் முடிவை தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இவர்களின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் உலவின. அப்படியான வதந்தி ஒன்றுக்கு சமந்தா தற்போது காட்டமாகப் பதிலளித்துள்ளார். அந்தப் பதிவில் "போய் பிள்ளை குட்டியைப் படிக்க வைங்க' என்கிற ரீதியில் பதிலளித்துள்ளார்.

தற்போது சிவராஜ் குமார், இயக்குநர் நெல்சன் ரஜினியை வைத்து எடுக்கவிருக்கும் "ஜெயிலர்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்து சிவராஜ் குமாரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தாலும், படக்குழுவிலிருந்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ரஜினியுடன் நடிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன் என சிவராஜ் குமார் அண்மையில் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.