பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

திரைக் கதிர்

விடுதலை பார்ட் 2 படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியரைக் களமிறக்க வெற்றிமாறன் திட்டமிட்டு வருகிறார்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2023, 6:30 pm


"விடுதலை பார்ட் 2' படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியரைக் களமிறக்க வெற்றிமாறன் திட்டமிட்டு வருகிறார். "அசுரன்' படம் தனக்கு மிகப் பெரிய நற்பெயரைச் சம்பாதித்துக் கொடுத்ததால், மஞ்சு வாரியரும் கிட்டத்தட்ட ஓகே சொன்ன நிலையில், ரஜினி  த.செ.ஞானவேல் இணையும் படத்திலிருந்தும் அம்மணிக்கு அழைப்பு வந்திருக்கிறது. தேதி குழப்பங்களால் இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டுமே செய்ய முடியும் என்கிற நிலையில் இருக்கிறார் மஞ்சு வாரியர். ரஜினியா, வெற்றிமாறனா என்கிற குழப்பத்துக்கு, பத்து நாள்களில் பதில் சொல்வதாகச் சொல்லியிருக்கிறாராம் மஞ்சு வாரியர். 

-----------------------------------------

மகள் ஆசைப்பட்ட காரணத்தினால் இரண்டு மூன்று படங்கள் நடித்த பிறகு அதிதி ஷங்கரை சினிமாவிலிருந்து நிறுத்தி விடலாம் என்று இயக்குநர் ஷங்கர் நினைத்திருந்தார். ஆனால், அதிதி நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால் இன்னும் இரண்டு வருடங்கள் மட்டும் நடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குள் மாப்பிள்ளை பார்த்து மணமுடிக்க வீட்டில் திட்டம் போட்டுவிட்டார்கள். ஓ.கே. சொல்லிவிட்டு அமைதியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அதிதி.

-----------------------------------------

தற்போது அஜித், லண்டனில் பைக் ரைடில் இருக்கிறார். அதை முடித்துவிட்டு மகிழ் திருமேனி இயக்கும் "விடா முயற்சி' படத்தின் படப்பிடிப்பிற்குத் தயாராகவிருக்கிறார். இதற்கிடையில் ராணுவத்திற்கு ட்ரோன்கள் தயாரிக்கும் "தக்ஷா' குழுவிற்கும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருபக்கம் சினிமா, பைக் ரைடு, மற்றொரு பக்கம் நாட்டிற்காக ட்ரோன்கள் தயாரிக்கும் பணிகள் என அடுத்த ஒரு வருடத்திற்குக் கையில் பிடிக்க முடியாதபடி ரொம்பவும் பிஸியாக இருக்கிறார் அஜித்.

-----------------------------------------

"மாமன்னன்' படத்திற்கு முன்னரே, துருவ் விக்ரமின் படத்தை இயக்கி முடித்திருக்க வேண்டும். ஆனால், உதயநிதியின் விருப்பத்தால் "மாமன்னன்' படத்திற்கு பின்னர், துருவின் படம் டேக் ஆஃப் ஆகிறது. "பரியேறும் பெருமாள்' படத்திற்குப் பின் மீண்டும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ், விக்ரமின் மகன் துருவ் விக்ரமை இயக்குகிறார். இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

-----------------------------------------

மாஸ்டர்' படத்துக்குப் பின்னர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் மீண்டும் கைகோத்திருக்கும் படம் "லியோ' . திரைக்கதையை லோகேஷுடன் இணைந்து ரத்னகுமார், தீரஜ் வைத்தி இருவரும் எழுதியுள்ளனர்.  மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த மாதமே படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஆனாலும், காஷ்மீரில் படமாக்கிய போர்ஷன்களில் சில பேட்ச் ஒர்க் இருப்பதால், விஜயைத் தவிர த்ரிஷா உள்பட பலரும் தற்போது காஷ்மிர் சென்றிருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.