தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

சிரி...  சிரி...

''அவர் போலி டாக்டருன்னு எப்படி உறுதியா சொல்றே..''''இட்லி இல்லாவிட்டால் இடியாப்பம் சாப்பிடலாமுன்னு கேட்டா,  நோ.. நோ ஆபரேஷன் சிக்கலாயிடுமுன்னு சொன்னாரே..''

Published On :


''எதுக்கு சிஸ்டர் எக்ஸ்ட்ரா ஊசி போடுறீங்க?''
'' பாக்கி உங்களுக்கு கொடுக்க சில்லறை இல்லைன்னு டாக்டர் இந்த வைட்டமின் ஊசியை போடச் சொல்லிட்டாரு?''


''டாக்டர் .. எனக்கு ஒரே தொடர் கனவா வருது?''
''எப்படி சொல்றீங்க..?''
''கனவில் எபிசோட் நம்பர் போட்டே டெய்லி வருதே டாக்டர்..''


''டாக்டர். தூக்கத்துல நான் ரொம்ப உளர்றேன்ன்னு மிசஸ் சொல்றாங்க..?''
''என்னது தூக்கத்துல கூடவா..''

- சிட்லபாக்கம் எஸ்.மாரிமுத்து,
சென்னை.

''டாக்டர் இன்னும் மாறவேயில்லையா?''
''ஆமாம். இன்றும் அவுன்ஸ் கிளாஸில்தான் மருந்தை அளந்து தர்றாரு..?''
-மஞ்சுதேவன், பெங்களூரு.

''டாக்டர் . தொட்டுப் பார்த்தால் அந்த பேஷண்ட்டுக்கு உடம்பு சுடுது. தெர்மா மீட்டர் வைச்சா நார்மலா இருக்கே எப்படி..?''
''உன்னோட கைபட்டால் எனக்கே உடல் சூடாயிடுமே நந்தினி..''



''அவர் போலி டாக்டருன்னு எப்படி உறுதியா சொல்றே..''
''இட்லி இல்லாவிட்டால் இடியாப்பம் சாப்பிடலாமுன்னு கேட்டா,  நோ.. நோ ஆபரேஷன் சிக்கலாயிடுமுன்னு சொன்னாரே..''



''ஒரு சின்ன சந்தேகம்  டாக்டர் . நானும் என் மனைவியும் ஒரே மாதிரி ஆகாரம்தான் சாப்பிடறோம். ஆனால் அவங்க எடை மட்டும் கூடுதே டாக்டர் 
எப்படி..?''
''இதுவா சின்ன சந்தேகம். பெருத்த சந்தேகம்யா..?''



''டாக்டர். எனக்கு கோபம் வந்துட்டா கை- கால் நடுங்க ஆரம்பிக்குது.. ஏன் சார்..''
''எனக்கு அப்படி இல்லை. என் பெண்டாட்டிக்கு கோபம் வந்துட்டா உடம்பே நடுங்கும்..''



''உங்களுக்கு உடம்புல கொழுப்பு அதிகமாக 
இருக்கும்மா?''
''யோவ் டாக்டரு. என் புருஷன்காரன் அப்படி சொல்லச் சொன்னாரய்யா..?''

- வி.ரேவதி,
தஞ்சாவூர்.

''ஆபரேஷனுக்கு முன்னாடி எப்படி இருந்தீங்க? பின்னாடி எப்படி இருக்கீங்க?''
''ஆபரேஷனுக்கு முன்னாடி சொந்த வீடு இருந்தது. இப்ப வாடகை வீட்டில் இருக்கேன் டாக்டர்..''


''டாக்டர்.. என் கணவருக்கு நீங்க கொடுத்த தூக்க மாத்திரை டோஸ் அதிகம் போலிருக்கு.''
''ஏன் என்னாச்சு..''
''தூக்கத்தில் நடந்து போனவர், இப்போ ஓட ஆரம்பிச்சுட்டாரு..?''

-அ.செந்தில்குமார்,
சூலூர்.

''வைரமூக்குத்தி அலர்ஜி பண்ணுமா டாக்டரம்மா..?''
''எதுக்கு கேட்கறீங்க..?''
''எதிர்வீட்டுக்காரி வாங்கியதால் எனக்கு ஜலதோஷம் பிடிச்சிடுச்சு..!''

-பர்வதவர்த்தினி,
பம்மல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.