அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! மலர்களால் அலங்காரம்!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!உச்ச நீதிமன்றம், நீங்கள் விளையாடும் கார் பொம்மைபோல அல்ல! இபிஎஸ் விமர்சனம்திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள்!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுகோவையில் பறவை காய்ச்சல்: முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்திருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் குழு நீதிபதிகளுடன் ஸ்தானிக பட்டர்கள் ஆலோசனை

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் குழு நீதிபதிகளுடன் ஸ்தானிக பட்டர்கள் ஆலோசனை மேற்கொண்டது தொடர்பாக...

Deepam at Tirupparankundram

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் குழு நீதிபதிகளுடன் ஸ்தானிக பட்டர்கள் ஆலோசனை - டிஎன்எஸ்

Updated On :

​திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக, மதுரை வந்துள்ள உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் குழு நீதிபதிகளை, திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானிக பட்டர்கள் சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

​திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைச் செயல்படுத்துவது மற்றும் திருக்கோயில் நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

​இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை காலை மதுரை வந்தடைந்தனர்.

​விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், "தற்போதுதான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. உத்தரவு நகலை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே எந்தவொரு தகவலையும் தெரிவிக்க முடியும். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வாய்ப்பு உள்ளது" என்றனர்.

​தொடர்ந்து, மதுரை ரெசிடென்சி ஹோட்டலில் தங்கியுள்ள நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரை, திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானிக பட்டர்களான சுவாமிநாதன், ராஜா பட்டர் மற்றும் செல்லப்பா பட்டர் ஆகியோர் இந்து சமய அறநிலையத் துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்து தீபச் சுடரை எடுத்துச் சென்று கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மலை முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Deepam at Tirupparankundram: Sthanika priests hold consultations with the judges of the Supreme Court-appointed steering committee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.