டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சிரி... சிரி...

""எப்பஎல்லாம் சார்  உங்க மனைவிக்கு தலைவலி வருது?''""எங்க சைடு விருந்தாளிங்க வரும்போதெல்லாம்  வந்துடுது டாக்டர்!''

News image
Updated On :19 பிப்ரவரி 2023, 12:30 am

DIN


""எப்பஎல்லாம் சார்  உங்க மனைவிக்கு தலைவலி வருது?''
""எங்க சைடு விருந்தாளிங்க வரும்போதெல்லாம்  வந்துடுது டாக்டர்!''



""என்னோட ஜாதகத்தைப் பார்த்துட்டு ஒரு பிரபல ஜோதிடர்  "பிரமாதமான ஜாதகர் நீங்க"ன்னு சொன்னாரும்மா!''
""ஒண்ணு, உங்க ஜாதகம் தப்பா இருக்கணும். அல்லது அந்த ஜோதிடர் தப்பா இருக்கணும்!''



"" கல்யாணம் ஆனதுலேர்ந்து நான் சோபாவுலயே உட்கார்றது இல்லை!''
""ஏன் சார்''
""ஹி...ஹி...என் மனைவி பேரு, சோபா!''

  

" "அது என்னப்பா ஸ்பெஷல் கட்டிங்'?''
""கட்டிங் பண்ணும்போது ஒரு சொட்டு ரத்தம் கூட வராது சார்!''



""சலூன்ல இன்ஷ்யூரன்ஸ் வசதி உண்டுன்னு போட்டிருக்காங்களே, என்ன அது?''
""அதுக்குப் பேரு தாங்க கிராப் இன்ஷ்யூரன்ஸ்''


- கி.வாசுதேவன்,
தஞ்சை.

""இத்தனை பெரிய அரச மரத்தைப் பார்த்ததும் எனக்கு என்ன தோணுது தெரியுமா?''
""சுற்றி வந்து வணங்க தோணுதா?''
""நாட்டாமையா  மாறி உட்கார தோணுது.''



""இங்கே இரவு நேரத்தில் கரடி உலாவதமே?''
""ஆமாம்.  சிசி டிவி காமிராவில் அதுக்கு  தோன்ற ஆசை இருக்காதா?''



"" செங்கல்பட்டுக்கு பஸ் வந்தா எழுப்புங்கள்.''
""நீங்க காபி குடிக்க நான் எழுப்பணுமா?"
""உங்களுக்கு உப்புமா,  வடை வாங்கித் தர  எழுப்பச் சொல்றேன்.''



""கமைப்பது  அவ்வளவு சிரமமா?''
""உன்னை சமைக்கச்  சொல்றது தான் சிரமம்.''

- பர்வதவர்த்தினி,
சென்னை.

" "அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் பெரிய பண முதலைகளா இருக்காங்களே?''

" "பெரிய அளவுல முதலைப் போட்டுல்ல அந்த இடத்துக்கு வந்திருக்காங்க!''



"" திடீர்னு உடம்பு உப்பிடிச்சே ஏன் டாக்டர்? ''
" "உங்க  உடம்புல உப்பு அதிகமா  இருக்கிறதுதான் சார் காரணம்!''

-வி. ரேவதி,
தஞ்சை.

""டி.வியில் விளம்பரமே இல்லாம சீரியல் போடற சேனல் இருக்குதா?''
""எதுக்கு கேக்கற...?''
""சீரியல் இடைவேளையில் தானே என் மனைவியும், என் அம்மாவும் சண்டை போடறாங்க...!''

-அ.செந்தில்குமார்,  
சூலூர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.