தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

சிரி... சிரி...

""உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை கல்யாணம் பண்ணி குழியில விழுந்துட்டேன்னு சொல்லுவீங்க?''""ஏம்மா தப்பா நினைக்கிற. உன் கன்னத்தில் இருக்கிழ குழியைதான் சொன்னேன்!''

News image
Updated On :26 பிப்ரவரி 2023, 12:30 am


"உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை கல்யாணம் பண்ணி குழியில விழுந்துட்டேன்னு சொல்லுவீங்க?''
"ஏம்மா தப்பா நினைக்கிற. உன் கன்னத்தில் இருக்கிழ குழியைதான் சொன்னேன்!''



"என்னங்க.. என் கனவுல யார் வந்தாலும்  அவங்களுக்கு உடனே கல்யாணம் ஆயிடுது.!''
"உன் கேஸ் பரவாயில்லை. என்னோட கனவுல வர்றவங்களுக்கு உடனடியாக டைவர்ஸ் ஆயிடுதே!''



"நீங்க பொண்ணு வீடா, மாப்பிள்ளை வீடா?''
" நீங்க யார் வீடோ, அதுக்கு மாற்றுவீடு''

-கி.வாசுதேவன்,
தஞ்சை.

"உங்க பொண்ணு 24 மணி நேரமும் ஏதாவது பேசிட்டே இருக்காளே மாமா?''
"தூங்கும்போது பேச மாட்டாளே மாப்பிள்ளை.''
"தூக்கத்திலேயும் ஏதையாவது உளறிக்கிட்டேதான் இருக்காளே!''

-வி.ரேவதி,
தஞ்சை.

"என்னங்க. இந்த ரயிலில் எல்லாமே 2-ஆம் வகுப்பு பெட்டிகள்தானே?''
"இதில் என்ன சந்தேகம்?''
"எல்லாப் பெட்டிகளிலும் 11-ன்னு போட்டிருக்கே. அதான் கேட்டேன்.''

-ப.கணேசன்,
கோட்டுச்சேரி.

"அரசியல்வாதியான உங்க மகன் "டீச்சர் பெண்' வேண்டாமுன்னு ஏன் சொன்னாரு?''
"எப்ப பார்ததாலும் ரிப்போர்ட் அனுப்பிட்டே இருப்பாளாம்!''

-வசு,
திண்டிவனம்.



"தினமும் இப்படி ஒரு சில மணி நேரம் லைப்பரரிக்கு வர்றீங்களே! உங்க மனைவி ஒன்னும் சொல்ல மாட்டாங்களே!''
"ம்ஹீம். அவங்க சொல்லி தான் நானே இங்கே வந்துட்டு போறேன்!''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.


"ஏண்டி. குடிச்சா தொப்பை விழுமா?''
"குடிச்சா நீங்களே விழுந்துடுவீங்க! தொப்பை விழுந்தா என்ன?''




"என் கணவர் கட்டிங்னு சொல்லி காசு வாங்கிட்டு போயி குடிச்சிட்டு வந்துட்டாரு?''
"நீ ஏன் காசு கொடுத்தா?''
" நான் ஹேர் கட்டிங் நினைச்சேன்.''




"என்னங்க. வீடு கட்ட ஆபிஸில் லோன் கேளுங்களேன்.''
"நீ வேற...  இப்ப ஆபிúஸ லோன்லதான்  இருக்கு!''

-தீபிகா சாரதி,
சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.