எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிரி... சிரி...

'பக்கத்து வீட்டு வாழை குலை தள்ளிடுச்சி பார்த்திங்களா?''குலையைத் தொட்டால் கொலை விழும்னு எழுதி வெச்சிருப்பதையும் படிச்சேன்..'

News image
Updated On :13 ஜனவரி 2024, 6:30 pm

DIN


'பக்கத்து வீட்டு வாழை குலை தள்ளிடுச்சி பார்த்திங்களா?'
'குலையைத் தொட்டால் கொலை விழும்னு எழுதி வெச்சிருப்பதையும் படிச்சேன்..'

-அ.செந்தில்குமார்,
சூலூர்.

'அந்த ஓட்டலில் ஒரு தடவைதான் சட்னி, சாம்பார் ஊத்துவாங்க?'
'ஓ..  அப்போ டிப்ஸ் வாங்க மாட்டாங்களா?'



'ஏம்பா? தர்மம் வேணாங்கிறே?'
'ஊசி போன தர்மம் எல்லாம் நான் வாங்கிறது இல்லை தாயி..'

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

'டி.வி மெகா சீரியல் எடுத்த அந்தத் தயாரிப்பாளர் பாவம் இப்போ சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறாரு?'
''பெண்களோட கண்ணீர் சும்மா விடும்மா?'
 




'என் மனைவி தூக்கத்துல எழுந்து சமையல் பண்றா?'
'சரி இதுக்கு போய் நீங்க ஏன் வருத்தப்படறீங்க?'
'அவ என்னை எழுப்பி சாப்பிட சொல்றாளே..'


- தீபிகா சாரதி,
சென்னை.

'மசால் தோசை கேட்டேனே என்ன ஆச்சி..?'
'தோசை மாஸ்டருக்கு வாய்ஸ் மெயில் அனுப்பி இருக்கேன்.  ரெடியானதும் வந்துடும்..'




'நகை மாளிகை கேன்டீனில் போய் என்னடா கேட்டே..?'
'ஹால்மார்க் இட்லி இருக்கான்னு கேட்டேன்...'

-ஏ.நாகராஜன்,
பம்மல்,

'எதுக்கு விமலா பத்து டீ ஸ்பூன் வச்சிருக்கே?'
'சாம்பாருக்கு பத்து டீ ஸ்பூன் மிளகாய் தூள் 
போடணும்னு போட்டிருக்கே அதான்.'




'பூனை  எல்லா பாலையும் குடிக்கற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?'
'இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு பார்த்துக்கிட்டே இருந்தேன்டி'



'அந்த ஹைடெக் திருமணத்தில் அவர் மட்டும் 
இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்காரே..?'
'அவருக்கு இன்னும் ஓ.டி.பி. நம்பர் வரலியாம்..'

- ஏ.எஸ்.கோவிந்தராஜன்,  
சென்னை.



'என்னய்யா இது? டிபன் பிளேட் பக்கவாட்டில் நகருது?'
'அடுத்தவருக்கு பிளேட் ஈர்ப்பு சக்தி இருக்து சார்..'





'பேப்பர் தோசை ஏன் கிழிந்திருக்கு...'
'இது கிழிசல் பேப்பர் தோசை...'




'விரல் காயத்துக்கு பஞ்சு வைச்சி கட்டவா?'
''பஞ்சு மிட்டாய் வைச்சி கட்டு டாடி'



 

'என்னய்யா சர்வர்? சுண்டெலி உட்கார்ந்து மசால் வடை சாப்பிடுது..'
''விரட்ட முடியாதுங்க சார்.. அதுவும் ஒரு பக்கம் சாப்பிட்டுட்டு போகட்டுமே..'



'ரவா தோசையில் எதுக்கு இத்தனை மிளகு..'
'இது பெப்பர் ரவா தோசை..'


-பர்வதவர்த்தினி,
பம்மல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.