மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

சிரி... சிரி...

'உங்களை மறுபடியும் செக் பண்ணணும்.''டாக்டர்.. எத்தனை முறை செக் பண்ணாலும் எங்கிட்ட பணம் இல்லை...'

Published On :

'உங்களை மறுபடியும் செக் பண்ணணும்.'
'டாக்டர்.. எத்தனை முறை செக் பண்ணாலும் எங்கிட்ட பணம் இல்லை...'

-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.

'டாக்டர்.. என் மனைவிக்கு பி.பி.. சுகர் இருக்கு..'
'நியாயப்படி உங்களுக்குதானே வந்திருக்கணும்...'

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

'முதல் பல்லைப் பிடுங்கும்போது வலி தெரியும். அடுத்த பல்லை பிடுங்கும்போது வலி தெரியாது..'
'அப்ப அடுத்த பல்லை முதலில் பிடுங்குங்க டாக்டர்...'



'ஆபரேஷன் பண்ணின்டா நல்லா படிக்க முடியுமா?'
'முடியும்..'
'அப்போ பத்தாம் கிளாஸ் படிக்கிற என் பையனுக்கு ஆபரேஷன் பண்ணுங்க டாக்டர்..'

-தீபிகா சாரதி,
சென்னை.

'இவர் உண்மையிலே டாக்டர் தானாங்கிற சந்தேகமா இருக்கு..'
'ஏன் சார்...'
'நாங்க மெயின் ரோடில்தான் ஆஸ்பத்திரி வச்சிருக்கோம். எதற்காக பைபாஸ் சர்ஜரி பண்ணனும்னு கேக்கறாரு..'

-பண்ருட்டி பரமசிவம்

'ஒரு மாசத்துக்கு உன் மனைவியை சமைக்கச் சொல்லிட்டியா...? ஏன்..'
'டாக்டர் பத்திய சாப்பாடு சாப்பிட சொல்லியிருக்கிறாரு?'



'ஆபிஸில் நைட் டியூட்டி வாங்கிட்டியா.. ஏன்டா..'
'பகல் தூக்கம் உடம்புக்கு ஆகாதுன்னு டாக்டர் சொன்னாரு...?'

-அ.செந்தில்குமார்,
சூலூர்.


'அந்த டாக்டர் ரொம்ப மோசம்..'
'ஏன்...'
'பயங்கரமா தொண்டை கட்டியிருக்குன்னு போனா, ஆபரேஷன் பண்ணி எடுத்துடவான்னு கேக்கறாரு...'

-வி.ரேவதி,
தஞ்சை.


'வாங்க... வாங்க.. இன்னிக்கு வர்ற பேஷன்ட் நீங்கதான்...'
'டாக்டர் நான் வேணா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டுமா.. பீஸூக்கு பணம் கொண்டு வரலை. கடன்தான் சொல்லணும்..'



'தொழிற்சாலைக்கு பக்கத்துல கிளினிக் திறக்காதேன்னு சொன்னனே கேட்டியா...?'
'பாரு. ஆபரேஷன் பண்ணும்போதெல்லாம் சங்கு ஊதுறாங்க..?'

-ஏ.எஸ்.கோவிந்தராஜன்,
சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.