அப்படீங்களா!

இணைய தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆஃப் முதலிடத்தில் உள்ளதால், வாட்ஸ் ஆஃப் செயலி பயன்பாடு இல்லாமல் அறிதிறன் பேசி இல்லை என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்
அப்படீங்களா!

இணைய தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆஃப் முதலிடத்தில் உள்ளதால், வாட்ஸ் ஆஃப் செயலி பயன்பாடு இல்லாமல் அறிதிறன் பேசி இல்லை என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

இதில் பரிமாறப்படும் தனிநபர் தகவல்களை வேறு நபர்கள் பார்வையிட்டால் இக்கட்டான சூழலை ஏற்படுத்திவிடும். ஆகையால், பயனாளர்களின் தகவல் பரிமாற்றம் வெளியே கசியாமல் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு வாட்ஸ் ஆஃப் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதற்காக கடவுச்சொல் பயன்பாட்டை வாட்ஸ் ஆஃப் அறிமுகம் செய்தது. வாட்ஸ் ஆஃப்பில் குறிப்பிட்ட சாட்களையும் லாக் செய்து வைக்கும் சேவையும் வழங்கப்படுகிறது.

இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம். மொத்த 'சேட்' -களுக்கும் ஒரே லாக் செய்யும் சேவையான 'வாட்ஸ் ஆஃப் லாக்'கை பயன்படுத்த, வாட்ஸ் ஆஃப் செட்டிங்ஸ், பிரைவஸி - ஸ்கிரீன் லாக்கை கிளிக் செய்து ஃபேஸ் ஐடி அல்லது கைரேகைப் பதிவு அல்லது எண்களின் லாக்கை உருவாக்கி கொள்ளலாம். எனினும், இந்த லாக் இருந்தாலும், நோட்டிபிகேஷனில் வரும் தகவல்களுக்கு வாட்ஸ் ஆஃப் உள்ளே செல்லாமல் பதில் அளிக்க முடியும்.

இப்போது, 'வாட்ஸ் ஆஃப் சாட் லாக்' கை பயன்படுத்த வாட்ஸ் ஆஃப்புக்குள் சென்று எந்த சாட்டை லாக் செய்ய வேண்டுமோ அதை சிறிது நேரம் அழுத்திவிட்டு, வலது மேல்புறம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து சாட் லாக்கை தேர்வு செய்ய வேண்டும்.

இப்படி தேர்வு செய்யப்படும் சாட்கள் அனைத்தும், சாட் பட்டியலில் முதலில் 'லாக்டு சாட்ஸ்' என காண்பிக்கும். அந்த லாக்டு சாட்களுக்கு வரும் தகவல்களை நோட்டிபிகேஷன் காண்பிக்காது. பயனாளர் வைத்துள்ள ஃபேஸ் ஐடி அல்லது கைரேகைப் பதிவு இல்லாமல் அந்த சாட் தகவல்களை பார்க்கவோ, பதில் அளிக்கவோ முடியாது.

யோசிக்கிறாங்கப்பா!

ஒரு செயலைச் செய்யாதிருக்க ஓராயிரம் காரணம் சொல்லலாம்.

அந்தச் செயலை செய்து முடித்திட மனத்தின்மை ஒன்றே போதும்.

-பொறிஞர் ப.நரசிம்மன், திருச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com