'என்ன பாப்பா.. பையை தூக்கிட்டுப் போறே...''
'எங்கம்மா 4 நாட்டுக் கோழி முட்டை வாங்கி வர சொன்னாங்க..?''
'அது எந்தெந்த நாடுகளுன்னு கேட்டியா..?''
'ஐயோ மறந்துட்டேன் ஆன்ட்டி.. கேட்டுட்டு வர்றேன்...''
-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
'ஓட்டலுக்கு போனால் நான் தோசை சாப்பிட மாட்டேன்...''
'ஏன்...''
'தோசைக்கு அரை கப் மாவு. இட்லிக்கு ஒரு கப் ஆச்சே..''
'ஏம்பா என்னோட காசுல வாங்கிச் சாப்பிட போறேன். எதுக்கு சாப்பிட வேணாமுன்னு சொல்றே..''
'கோவிச்சுக்காதீங்க சார்.. எல்லாம் தீர்ந்து போச்சு. நாளைக்குதான் சார் கடை...''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'இந்த சர்வர் பழைய பேப்பர் வியாபாரம் செய்தவருன்னு எப்படி சொல்றே..''
'பேப்பர் ரோஸ்ட்டுன்னு கேட்டால் எத்தனை கிலோ வேணும்னு கேக்கறாரு..?''
'என்ன ஜோசியரே... சமையல் குறிப்பு கேக்கறீங்க?''
'உங்களுக்கு திருமண யோகம் வந்திருச்சான்னு அதை வைச்சுதானே சொல்ல முடியும்...''
-அ.செந்தில்குமார், சூலூர்.
'என் கூட செல்பி எடுத்துக்கப் போறீங்களா சர்வர்... ஏன்?''
'பத்து ரூபாய்க்கு மேல டிப்ஸ் எடுக்கறவங்கக்கிட்ட செல்பி எடுத்துப்பேன் சார்...''
'காஸ் சிலிண்டர் மேல விலையை எழுதி வெச்சிருக்கீங்களே.. ஏன் சார்..''
'அப்போதான் என் பெண்டாட்டி சமையலை சிக்கனமா சமைப்பாங்க?''
'ஏங்க இனிமே உப்புமா செய்யறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்...''
'வெரி குட்.. ரொம்ப நன்றி...''
'அவசரப்படாதீங்க.. ஆன்லைனில் ஆர்டர் பண்ணிடுவேன்னு சொன்னேன்...''
-பர்வீன் யூனூஸ், சென்னை.
'உன் புருஷன் நல்லா சமைப்பாராடீ...''
'என்ன அப்படி கேட்டுட்டே.. அவரோட சமையல் வாசனையில்தான் தினமும் காலையில் முழிச்சுக்குவேன்டி...''
'ஹோட்டல் முதலாளியே சர்வ் பண்ண வந்துட்டாரா?''
'சர்வருக்கு கிடைக்கிற டிப்ஸை பார்த்துதான்...''
'பேப்பர் ரோஸ்ட்டுக்கு அதிரடி ஆஃபர் மெனு போர்டில் இருக்கே.. என்னப்பா ஆஃபர்..''
'அதே விலைக்கு 20 சதவீதம் எக்ஸ்ட்ரா சார்...''
'சோதிடர் எனக்கு நெருப்பில் கண்டமுன்னு சொல்லிட்டாங்க?''
'பயப்படாதே பத்மா...நீதான் கிச்சன் பக்கமே வர மாட்டியே அப்புறம் எதுக்கு பயம்?
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தை சாப்பிட அடம்பிடிக்கிறதா? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
வா வா பாப்பா !

மெட்ரோ பயணியிடம் நகை, பணம் திருட்டு: பெண் கைது

உடல் எடையைக் குறைக்கும் ஆளி விதைகள்! எவ்வளவு சாப்பிட வேண்டும்?
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


