'மன்னா.. புலவர்களுக்கு பாக்கி வைக்காதீர்கள்...?'
'ஏன் அமைச்சரே...?'
'புகழ்ந்து பாட வந்தவர்கள் இகழ்ந்து பாட ஆரம்பித்துவிட்டார்கள்...'
-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
'தளபதியாரே...இந்தப் போரில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என மன்னர் எதை வைத்து உறுதியாகக் கூறுகிறார்...'
'அமைச்சரே... போர்க் களத்தின் குபேர மூலையில் இருந்து படைகள் கிளம்பியிருப்பதை வைத்துதான்...'
'போர் முடிந்தவுடன் என்ன நடக்கும் தளபதியாரே...'
'எதிரி நாட்டில் சக்ஸஸ் மீட் நடக்கும் மன்னா...'
'அரண்மனையில் களை எடுக்க வேண்டும் என்று சொன்னது குறித்து மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்... மந்திரியாரே...'
'அப்படீன்னா.. அடுத்த மன்னர் யாருன்னு கேக்கறாங்க மன்னா...'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'எங்கள் மன்னர் அடிபட்டு முன்னுக்கு வந்தவர்...'
'எங்கள் மன்னரே அடி மேல் அடி வைத்து
முன்னுக்கு வந்தவர்...'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'போர் தொடங்கும் முன்னரே மன்னர் கையில்
ரத்தம் வழிகிறதே...'
'உறையில் வாள் தலைகீழாக இருந்திருக்கிறது...'
'கப்பம் கட்டாவவிட்டால் எதிரி என்ன செய்வான்...'
'கட்டம் கட்டிவிடுவான் மன்னா...'
'போர் முடிந்தவுடன் மன்னர் ஏன் வேகமாய் சமையலறைக்குள் ஓடுகிறார்...'
'வெற்றிக்கனியை குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டுமாம்...'
'ஆகாயத்தில் பறவை விமானத்தில் பறப்பது போன்ற கனவு கண்டேன். உடம்பில் இவ்ளோ காயமா...?'
'மன்னா.. அப்போ நீங்க தேர் ஓட்டிக் கொண்டிருந்தீர்கள்...'
-அஹமத், சேலம்.
'மன்னருக்கு பெண்ணாசை வந்ததால் ராணிக்கு மண்ணாசை வந்துவிட்டது...'
'என்ன சொல்கிறீர்கள்...'
'ராணி மசக்கையில் மண்ணைத் தின்கிறார்....'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
'எதிரிநாட்டு உளவாளி எப்படி நடமாடினான் சொல்ல முடியுமா?'
'கையில் கத்தியோடுதான் மன்னா...'
-அ.செந்தில்குமார், சூலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘வந்தே மாதரம்’ பாட மறுத்த பெண் கவுன்சிலா்கள்: விசாரணைக் குழு அமைத்தது காங்கிரஸ்

தந்தையைப் போல மகனுக்கும் புற்றுநோய்! கம்போடிய மன்னரின் நிலை என்ன?

மதவாத கருத்துகளை வேட்பாளா்கள் பேசினால் என்ன நடக்கும்? தோ்தல் ஆணையத்திடம் கேரள உயா்நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடே திவாலாகப் போகிறது! மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவளிக்கும் திமுக! - விஜய் பேச்சு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

