பேல் பூரி

'வாழ்க்கை ஒரு புதிர். அனுபவித்தால் இன்பம். ஆராய்ந்தால் துன்பம்.'
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
2 min read

கண்டது

(ஈரோடு அருகேயுள்ள ஊரின் பெயர்)

''சோலார்'

-கு.பாலசுப்பிரமணி, இடையகோட்டை.

(கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள ஊரின் பெயர்)

'பாவக்கல்'

-பொறிஞர் ப.நரசிம்மன், தருமபுரி.

(கோவையில் ஓடிய ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)

'வாழ்க்கை ஒரு புதிர். அனுபவித்தால் இன்பம். ஆராய்ந்தால் துன்பம்.'

-எம்.சுப்பையா, கோவை.

கேட்டது

(மயிலாடுதுறை கடைத் தெருவில் இருவர்..)

'நான்தான் அப்பவே சொன்னேன். அந்த டாக்டர்கிட்ட போனா சுகர் லெவல் குறையுமுன்னு? இப்பவாது நம்பறியா?'

'இப்பவும் நம்பலை. அவரிடம் டோக்கன் வாங்க நாலு தடவை லோ..லோன்னு அலைஞ்சேன். அதுலேயே குறைந்துப் போச்சு...!'

-ஆஷாலட்சுமி, செம்பனார்கோவில்.

(நாகர்கோவில் வடசேரி சந்தையில் இரு பெண்கள்)

'என் வீட்டுக்காரர் இந்தக் கீரைகளைக் கண்டாலே டென்ஷன்

ஆகிடுவார்?'

'கீரைகள் உடம்புக்கு நல்லதுதானே..!'

'அதில்லை. அதை சுத்தம் செய்து, சமையல்

பண்றதுதான் அவருக்குப் பிரச்னை...'

-மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.

(நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இரு பெண்கள் பேசியது)

'கறிவேப்பிலை, முருங்கைக்காய் மலிவா இருக்குன்னுதானே வாங்கிட்டு வந்திருக்காரு? இதுக்குப் போய் உங்க வீட்டுக்காரரைத் திட்டுறே?'

'வீட்டுல முருங்கை மரமும், கறிவேப்பிலை மரமும் வளர்ந்து நிற்குது.. இப்படி வாங்கிட்டு வந்தா திட்டாம என்ன செய்யறது..?'

-நாகஜோதி, நாகப்பட்டினம்.

யோசிக்கிறாங்கப்பா!

இழந்தவன் தேடுவதும்

இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு.

-ச.அரசமதி, தேனி.

மைக்ரோ கதை

ஒரு விமான நிலையத்தில் நின்றிருந்த விமானத்தை துப்புரவுப் பணியாளர் சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது, விமானியின் அறையில், 'விமானம் ஓட்டுவது எப்படி?' என்ற நூலைப் பார்த்தார். முதல் அத்தியாயத்தில் 'விமானத்தை இயக்க சிவப்புப் பொத்தானை அழுத்தவும்' என்றிருக்க, அதன்படியே பணியாளர் செய்ய விமானம் இயங்க ஆரம்பித்தது.

அடுத்த அத்தியாயத்தில், 'விமானத்தை நகர்த்த நீலப் பொத்தானை அழுத்தவும்' என்றிருக்க, பணியாளரும் அவ்வாறே செய்தார். விமானமும் மெதுவாக நகர்ந்தது. குஷியான பணியாளர் மூன்றாவது அத்தியாயத்தில் படித்தபோது, 'விமானம் வானில் பறக்க பச்சை பொத்தானை அழுத்தவும்' என்பதைப் பார்த்து, அவ்வாறே செய்தார். விமானம் மேலெழுந்து வானில் பறக்கத் தொடங்கியது.

சந்தோஷத்தின் உச்சிக்குச் சென்ற பணியாளர் சிறிதுநேரம் கழித்து, விமானத்தைத் தரையிறக்க நினைத்து அடுத்தப் பக்கத்தைப் புரட்டினார். அதில், 'விமானத்தைத் தரையிறக்குவது எப்படி?' என்பதை அறிய பாகம்-2 நூலை படிக்கவும் என்றிருந்தது. துப்புரவுப் பணியாளர் மயக்கம் போட்டு விழுந்தே விட்டார்.

-மா.பெனட் ஜெயசிங், புதுதில்லி.

எஸ்.எம்.எஸ்.

'நமக்கானது என படைக்கப்பட்டிருந்தால்

தள்ளிப் போகுமேத் தவிர, கிடைக்காமல் போகாது'

-தி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

அப்படீங்களா!

இசை இல்லாமல் பொழுதுபோக்கு இல்லை என்றே கூறலாம். அப்படி இசையை மையப்படுத்தும் செயலிகள் ஏராளமாக உள்ளன. இப்போது, புகைப்படங்கள், ரீல்ஸ், விடியோக்களுக்கு பெயர்போன இன்ஸ்டாகிராமில் புரோபைலில் இசையை இணைக்கும் வசதி அறிமுகமாகி உள்ளது.

30 நொடி பாட்டை பயனாளர்கள் இதில் இணைக்கலாம். இதனால் அவர்கள் தங்கள் உணர்வுகளையும், விருப்பங்களையு ம் இசை மூலம் பிறருக்கு தெரியப்படுத்த உதவும்.

இந்த புதிய சேவை இந்தியா மட்டுமல்ல; அனைத்து நாடுகள் இன்ஸ்டா பயனாளர்களுக்கு அறிமுகமாகி உள்ளது.

இந்த சேவையைப் பயன்படுத்த முதலில் இன்ஸ்டாகிராமில் வலது கீழ் பகுதியில் உள்ள புரோபைலை தேர்வு செய்து 'எடிப் புரோபைல் - மியூஸிக் செக்சன்' சென்று விரும்பிய பாடலையோ அல்லது இசையையோ இணைக்கலாம்.

உங்கள் இன்ஸ்டாகிராம் புரோபைலை திறந்தவுடன், அங்குள்ள இசை பொத்தனை பார்த்து அதை கிளிக் செய்து 30 நொடி பாடலை கேட்டு மகிழலாம். இன்ஸ்டாகிராமில் ரீல் போட்டு பழகியவர்கள் இனி புரோபைல் பாடல்களை நேரத்துக்கு ஏற்ப மாற்றி வைத்து லைக்குகளை அள்ளலாம்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.