ரயில் கிளம்பிடுச்சு...
தனக்கு ஆலையில் வேலை இருப்பதால், தனது மனைவியை சென்னைக்கு ரயிலேற்றிவிடுமாறு கார் டிரைவரிடம் கூறினார் தணிகாசலம். கார் டிரைவரும் முதலாளியம்மாவின் பொருள்களை ரயிலில் ஏற்றி, இருக்கையின் கீழும், அருகிலும் வைத்துகொண்டிருக்கும்போதே ரயில் கிளம்பிவிட்டது.
மெதுவாகச் செல்லும்போதே ரயிலில் இருந்து இறங்கிவிடலாம் என்று யோசித்த டிரைவர், ரயில் பெட்டியின் நுழைவுவாயில் அருகே வந்தபோது, முதலாளியம்மா நடைமேடையில் கைப்
பேசியில் பேசிக் கொண்டிருந்தார். முக்கியமான நேரத்தில் கைப்பேசியில் பேசியதால், என்ன நிகழ்ந்தது பார்த்தீர்களா?
-இரா.சிவானந்தம், கோவில்பட்டி.
தொல்லை...
'என்னங்க.. நீங்க வளர்க்கும் குட்டி நாய் ரொம்பத் தொல்லை செய்யுது.. எங்காவது விட்டு வாங்க?' என்று தொல்லை செய்துகொண்டிருந்த மனைவி கமலாவின் பேச்சைக் கேட்டு, மணியும் நாயை காரில் அழைத்துகொண்டு பக்கத்து கிராமத்துக்குச் சென்று விட்டு வந்தார். அவர் வீடு வந்தவுடன் பின்தொடர்ந்து நாயும் வந்துவிட்டது.
'என்ன செய்வது?' என்று யோசித்த மணி மறுநாள் நாயை அழைத்துகொண்டு, பத்து கி.மீ. தள்ளியுள்ள கிராமத்தில் சென்றுவிட்டு விட்டுவேறு வழிகளில் சுற்றிவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது கமலா கைப்பேசியில் அழைத்து, 'என்னங்க.. நாயே வந்துவிட்டது.. நீங்க இன்னும் வரவில்லையே..?' என்று கேட்டார். மணியோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார்.
நம்ம சொந்தமாக இருக்கிறதைப் பிரித்தா இந்த நிலைதான்.
-க.அருச்சுனன், செங்கல்பட்டு.
அவ்வளவுதான்...
ஒரு இளைஞர் வளர்த்த வளர்ப்புக் கிளி ஓயாமல் இருமிக் கொண்டிருந்தது. தான் புகைப்பதால்தான் அதற்கு அந்த நிலை என்று எண்ணி, கிளியின் முன் புகைப்பதை நிறுத்தினார். இருந்தாலும், கிளி இருமிக் கொண்டே இருந்தது.
கிளியை மருத்துவரிடம் இளைஞர் அழைத்துச் சென்றார். மருத்துவரும் பரிசோதித்து, 'இந்தக் கிளிக்கு ஒரு நோயும் இல்லை. புகை பிடிக்கும் தனது எஜமானர் மாதிரி, இருமிப் பார்க்கிறது. அவ்வளவுதான்' என்றார். இளைஞருக்கோ என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தார்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.