சிரி... சிரி...

அம்மா... உங்க மாப்பிள்ளை உப்புமா கேட்டாரு.. நான் உப்பை தேடி எடுத்துவிட்டேன்...
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

'அம்மா... உங்க மாப்பிள்ளை உப்புமா கேட்டாரு.. நான் உப்பை தேடி எடுத்துவிட்டேன்...'

'அப்புறம் வேற என்ன சந்தேகம்...'

'அதுக்குள்ளே எந்த மாவை போடணும்...'



'என்னய்யா.. ஹோட்டலில் தகராறு....'

'சார்... ஃபுல் மீல்ஸ் கேட்டாரு... கொடுத்தேன்.. சாப்பிட்டுட்டு ஃபுல் எங்கேன்னு கேட்கிறார்...'



'பொண்ணு பார்க்க வந்த உன்னை ஏன் வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க...?'

'டீ கொடுத்தேன்.. அதில் சர்க்கரை இல்லைன்னு சொன்னாங்க? நான் சர்க்கரை அதில் கரைந்திருக்குமுன்னு சொன்னேன்.. அன்றைக்கு போனவர்கள்.. ஒரு பதிலும் இல்லை..'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'சுண்டல் ஒரு பிளேட் கொண்டு வரவா சார்..'

'பில் போடாம சும்மா ஒரு கைப்பிடி கொண்டு வா போதும்....'

-பர்வதவர்த்தினி, பம்மல்.



'என்ன அந்த வக்கீல்

ஏப்பம் விட்டுன்னே போறாரே...?'

'அவரு சட்டத்தைக் கரைச்சி குடிச்சாராம்...?'

தீபிகா சாரதி, சென்னை.



'இப்போ தான் டோக்கன் கொடுத்தேன். மறுபடி வந்து கேக்கறீங்களே...?'

'இரும்புச் சத்து குறைவாக இருக்குன்னு என் கணவர் அதை சாப்பிட்டுட்டார் சிஸ்டர்...'

-ஈனோஸ் இப்ராஹீம், சென்னை.



'பேசறவர் எப்போ பேச்சை முடிப்பார்...?'

'இவரிடம் மணிக் கணக்கெல்லாம் கிடையாது. சோடா கணக்குதான்.. மேஜையில் நாலு காலி சோடா இருக்கு.. இன்னொன்னு குடிச்சா நிறுத்திடுவாரு...?'

ரத்னம் மரகதம், கோவை15.



'தோசையும் ஊத்தப்பமும்தான் சார் இருக்கு...'

'அப்போ... ஊத்தப்பம் மாதிரி ரெண்டு தோசை கொண்டு வாப்பா....'



'பழங்கள் எல்லாம் ரொம்ப அதிகமாக விலை சொல்றீங்களே... நிறைய மீந்து அழுகிப் போறதுக்கு விலையை குறைச்சி கொடுக்கலாமே..?'

'அப்படி வீணாய் போறதை ஈடுகட்டவே விலையை கொஞ்சம் அதிகமா வச்சிருக்கேன்... சார்...'



'சர்வர்... இந்த ஃபேனை போடுப்பா...?'

'இட்லியை பிடிச்சுக்கோங்க சார்....'



'ஏம்பா சர்வர்.. சட்னி ஊசிப் போன மாதிரி இருக்கே...?'

'சந்தேகப்படாமல் சாப்பிடுங்க சார்.... நம்ப மாஸ்டரோட கை வாகு.. ஒரு வாரத்துக்கு ஊசாது.... இன்னியோட 4 நாள்தான் சார் ஆகுது..'



'ஃபேமிலி ரோஸ்டா இது... என்னப்பா.. இவ்ளோ சின்னதா இருக்கு...'

'ஸ்மால் பேமிலி ரோஸ்ட் சார்.....'



'நீங்க எழுதின தோசைங்கிற கதையைத் திருப்பி போட்டிருக்காங்களே...?'

'தோசையைத் திருப்பிப் போடுறது இயற்கைதானே சார்...?'

வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com