அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தமிழ்ப் படஉலகில் 'சென்னை பாஷை'

தமிழ்ப் படஉலகில் 'சென்னை பாஷை' குறித்து...

News image
எம்.எஸ்.விசுவநாதன், சந்திரபாபு
Updated On :19 மே 2025, 11:18 am

DIN

* உலகில் உள்ள இசை வகைகளைப் புகுத்தி, தமிழ்ப் படங்களை எளிமைப்படுத்தியவர் எம்.எஸ்.விசுவநாதன்.

'பட்டத்து ராணி' பாடலில் எகிப்திய இசை. 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது..' பாடலில் 'பெர்சியன் இசை. 'பன்சாயி காதல் பறவை' பாடலில் ஜப்பானிய இசை. 'யார் அந்த நிலவு' பாடலில் லத்தீன் இசை. 'கண் போன போக்கில் கால் போகலாமா..' படத்தில் ரஷ்ய இசை. 'முத்தமிட நேரமெப்போ..' பாடலில் மெக்சிகன் இசை போன்ற இசைகளை தமிழ்த் திரையுலகுக்கு அவர் கொண்டு வந்தார்.

'முத்தான முத்தல்லவோ' எனும் பாடலுக்கு அவர் 20 நிமிடங்களில் இசை அமைத்தார். 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடலுக்கு இசையமைக்க அவருக்கு இரண்டு மாதங்கள் ஆகின.

* தமிழ்ப் படஉலகில் 'சென்னை பாஷை' என்னும் ஒன்றை முதன்முதலாக அறிமுகம் செய்தவர் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. 'சகோதரி' என்னும் படத்தில் வந்த பால்காரனைப் பார்த்துதான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிந்துகொண்டனர். ஒரு படத்துக்குத் தரும் 7 நாள்கள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் சந்திரபாபு.

*' கூண்டுக்கிளி' படத்துக்காக, எம்.ஜி.ஆருக்கான டூயட்டுக்காக எழுதப்பட்ட பாடல் அது. எழுத்தாளர் விந்தன் எழுதி, கே.வி.மகாதேவன் இசையமைத்தது. படத்தின் நீளம் கருதி இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா அந்தப் பாடலை படத்தில் வைக்கவில்லை. எம்.ஜி.ஆரை பெரிதும் கவர்ந்த அந்தப் பாடலை 'குலோபகாவலி'யில் வைக்க விரும்பினார். கே.வி.மகாதேவனின் அனுமதி பெற்று, விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையமைக்க, ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய அந்தப் பாடல் சூப்பர் ஹிட். அந்தப் பாடல் என்ன தெரியுமா?

''மயக்கும் மாலை பொழுதே நீ போ! போ! இனிக்கும் இன்ப நிலவே நீ வா! வா!'.

* 'மாட்டுக்கார வேலன்' படத்தை இயக்க முதன்முதலில் டி.ஆர்.ராமண்ணாவை ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவர் இயக்கிவந்த 'சொர்க்கம்' படம் முடிவடையாத நிலையில், எம்.ஜி.ஆரிடம் ப.நீலகண்டன் என்பவரை அறிமுகப்படுத்தி, இயக்க உதவி செய்தார். படம் சூப்பர் ஹிட்.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

*நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்தா மட்டுமல்ல; அவர் எப்போதும் நகைச்சுவை உணர்வோடு வாழ்ந்தவர். அவரது அறுபதாம் திருமணத்துக்கு 'நேரம் ஆகிறது மாலையை மாத்துங்கோ...' என்று சாஸ்திரிகள் கூறியிருக்கிறார். 'அதெல்லாம் முடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. கமல்ஹாசன் வரட்டும். அவர் வந்தவுடன்தான் மாலையை மாற்றுவேன். எனக்கு எல்லாம் கமல் சார்தான். அறுபது வயது வரை என் மனைவி என்னோடு வாழ்ந்துவிட்டாள். ஒரு பத்து நிமிடங்கள் காத்திருக்க மாட்டாளா?'' என்று சொல்லியிருக்கிறார். பின்னர், கமல்ஹாசன் வந்ததும் மாலையை மாற்றியிருக்கிறார்.

-சு.மணிவண்ணன், கீழ்க்கட்டளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.