உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கல்லீரலைப் பாதுகாக்க...

கல்லீரலைப் பாதுகாக்கும் ஆயுர்வேத அணுகுமுறை என்ன?

Published On :30 ஆகஸ்ட் 2026, 10:34 am IST

கல்லீரலில் கொழுப்பு சாதாரணமாகத் தொடங்கி அழற்சி, கல்லீரல் சேதம் மற்றும் ஃபைப்ரோஸிஸ் எனக் கெடாமலிருக்க என்ன செய்யவேண்டும்? கல்லீரலைப் பாதுகாக்கும் ஆயுர்வேத அணுகுமுறை என்ன?

- நாகரத்தினம், திருச்செந்தூர்.

நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கவும், ஊட்டச்சத்துகளைப் பயன்படுத்தவும், மருந்துகள், பல்வேறு வேதிப்பொருள்களை மாற்றியமைக்கவும், பித்த நீரை உருவாக்கவும், உடலின் ஆற்றல் சமநிலையைப் பராமரிக்கவும் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆனால், இன்றைய வாழ்க்கைமுறையில் அதிக உடல் எடை, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு, சர்க்கரை நோய், இன்சுலின் எதிர்ப்பு, அதிக கொழுப்பு உணவு, உடற்பயிற்சியின்மை மற்றும் மதுபானப் பழக்கம் போன்ற காரணங்களால், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அழற்சி மற்றும் கல்லீரல் அணுக்களில் சேதம் ஏற்பட்டு, பின்னர் ஃபைப்ரோசிஸ், சிரோசிஸ் போன்ற தீவிர நிலைகளுக்குக் கொண்டு சென்றுவிடுகிறது.

சாதாரணமாக, கல்லீரலில் சிறிதளவு கொழுப்பு இருக்கலாம். ஆனால், தேவைக்கு அதிகமாக கொழுப்பு கல்லீரல் செல்களில் சேமிக்கத் தொடங்கும்போது FATTY LIVER - கொழுப்பு கல்லீரல் என்று அழைக்கப்படுகிறது. இதில் இரண்டு முக்கிய நிலைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மதுவுடன் தொடர்புடைய கொழுப்பு கல்லீரல்: தொடர்ந்து அல்லது அதிக அளவில் மதுபானம் அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படலாம்.

மதுவுடன் தொடர்பில்லாத கொழுப்பு கல்லீரல்: இது தற்போது அதிகம் காணப்படும் நிலையாகும். உடல் பருமன், அதிகப்படியான கலோரி உணவு, தொப்பை, சர்க்கரை உபாதை போன்றவை முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. இன்றைய மருத்துவத்தில் இதற்கான பெயரிடும் முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், பொது மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் FATTY LIVER NAFLD என்ற சொல் இன்னும் பரவலாகப்பயன்படுத்தப்படுகிறது.

அதிக எண்ணெய், அதிக இனிப்பு, அதிக கலோரி உணவு, ஒழுங்கற்ற உணவு, உடல் உழைப்பின்மை போன்ற உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கக்கூடும். ஆயுர்வேத அணுகுமுறையின்நோக்கம் ஒருகுறிப்பிட்ட உறுப்பை மட்டும் சுத்தம் செய்வதல்ல. மாறாக, உணவு - செரிமானம் - வளர்சிதை மாற்றம் - உடல்எடை - கல்லீரல் செயல்பாடு என்ற முழுமையான அணுகுமுறையில் உடலைப் பார்ப்பதாகும்.

கல்லீரல் பராமரிப்பில் பயன்படுத்தப்படும் சில சிறந்த ஆயுர்வேத மூலிகைகள்:

கடுகுரோஹிணி, நிலவேம்பு, கடுக்காய், பேய்ப்புடல், நெல்லிக்காய், இவை அனைத்தையும் சேர்த்து மாத்திரை வடிவில் தற்சமயம் விற்பனைக்கு வந்துள்ளது. கல்லீரலைப் பாதுகாக்க சில பொன்னான விதிகள்:

செய்யவேண்டியவை:

உடல் எடையைச் சீராகவைத்துக்கொள்ளுங்கள், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், சர்க்கரை மற்றும் இனிப்புப் பானங்களைக் குறையுங்கள், காய்கறி மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை அதிகரியுங்கள், சர்க்கரை நோய் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வையுங்கள்.

மருத்துவர் பரிந்துரைத்தால் LIVER FUNCTION TEST மற்றும் IMAGING பரிசோதனைகளைச் செய்யுங்கள், தேவையற்ற மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸைத் தவிருங்கள், மதுபானத்தைத் தவிர்க்கவும், போதுமான தூக்கம் பெறுங்கள், ஏற்கெனவே FIBR OSIS இருந்தால் முறையான மருத்துவ கண்காணிப்பில் இருங்கள்.

செய்யக் கூடாதவை:

அறிகுறி இல்லை; எனவே பிரச்னை இல்லை என்று நினைக்கக் கூடாது, மருத்துவர் ஆலோசனையின்றி மூலிகை மருந்துகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டாம், அதிக இனிப்புப் பானங்கள் குடிக்கக்கூடாது, தொடர்ச்சியான உட்கார்ந்த வாழ்க்கைமுறையைத் தவிர்க்கவேண்டும், ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளை தானாக நிறுத்தக்கூடாது.

கொழுப்பு கல்லீரலில் இருப்பதாகத் தெரிந்தவர்களுக்குக் கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை அவசியம். கண்கள் அல்லது தோல் மஞ்சள் நிறமாகுதல், வயிறு அதிகமாக வீங்குதல், கால்களில் வீக்கம், தொடர்ந்து வாந்தி, கடுமையான வயிற்றுவலி, காரணம் தெரியாமல் அதிக எடை குறைதல், அதிக சோர்வு, ரத்தப்போக்கு, குழப்பம் அல்லது அதிக தூக்கநிலை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.