த்ரிஷாவின் லைன் அப்!
சினிமாவில் வெள்ளிவிழா ஆண்டை நெருங்குகிறார் த்ரிஷா. 2025-இல் 'விடா முயற்சி', 'குட்பேட் அக்லி', 'தக் லைஃப்', 'ஐடென்டிட்டி' எனப் பல படங்கள் வெளியாகி இருந்தது.
அந்த வரிசையில் இப்போதும் பிஸியாக இருக்கிறார். சிரஞ்சீவியுடன் ஒரு படம், சூர்யாவுடன் 'கருப்பு' தவிர ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட வெப்சிரீஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். த்ரிஷாவின் லைன் அப் குறித்து விசாரித்ததில் கிடைத்தவை.
'கெளதம் மேனன் - சிம்பு கூட்டணியின் 'விண்ணைத் தாண்டி வருவாயா' நிஜமாகவே ஒரு மேஜிக். மறுவெளியீட்டிலும் சாதனை படைத்த படமாகி விட்டதால், த்ரிஷாவும் இந்தப் படத்தை உருவாக்கியது சிறப்பானது.
நான் இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரு படத்தை உருவாக்கும்போது நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், அந்தத் திரைப்படம் எப்படியோ சிறந்ததாக உருவாகிவிடும். அதனால்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என் இதயத்துக்கு நெருக்கமான படம்.
இன்றளவும் ஜெஸ்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரசிகர்களுக்கும், சுற்றத்தவருக்கும் சிறப்பு நன்றிகள். இப்போதும் எனக்கு ஜெஸ்ஸி குறித்து மீம்ஸ்களை அனுப்புகின்றனர். தனிப்பட்ட மெஸ்úஸஜ்களை அனுப்புகின்றனர்' என நெகிழ்ந்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு பேசியிருந்தார்.
த்ரிஷா, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'ஸ்டாலின்' படத்துக்குப் பின் இப்போது 'விஸ்வம்பரா'வில் மீண்டும் இணைந்துள்ளார். ஃபேன்டஸி ஆக்ஷன் படமான இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டாலும், கிராபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. வரும் கோடை விடுமுறையில் திரைக்குக் கொண்டு வருகிறார்கள். இதில் த்ரிஷாவின் தோற்றம் பேசப்படும் என்கிறார்கள்.
தமிழில் சூர்யாவுடன் 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார். 'மெளனம் பேசியதே', 'ஆயுத எழுத்து' 'ஆறு' படங்களுக்குப் பின் த்ரிஷா, சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். 'கருப்பு' படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. ஆர். ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷாவின் ரோல் பேசப்படும் என்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி
ஏற்கெனவே த்ரிஷா நடிப்பில் 'மாசாணி அம்மன்' படத்தைத் தொடங்குவதற்கான பேச்சு எழுந்த சூழலில், இந்தப் படத்துக்குள் த்ரிஷா வந்திருப்பதால் அவரது ரோலை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'கருப்பு' ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.
தீபிகா படுகோனேயின் டயட் ரகசியம்!
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அண்மையில் 40-ஆவது பிறந்தநாளை மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து கொண்டாடினார். அவருக்கு இந்தப் பிறந்தநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது. அவரது கணவர் ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' படம் வசூலில் ரூ. 1000 கோடியைத் தாண்டி இருக்கிறது.
40-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய தீபிகா படுகோனேவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியிருந்தனர். தீபிகா படுகோனே இன்றைக்கும் இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதன் ரகசியம் குறித்துத் தெரிவித்துள்ளார். காலையும், மாலையும் கட்டாயம் உடற்பயிற்சி, தியானம், யோகாவில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களுக்கும் அதனைப் பகிர்ந்துள்ளார்.
கால்களை சுவருக்கு எதிராக மேல்நோக்கி படுக்க வைப்பது உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவது முதல் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது என்று தீபிகா குறிப்பிட்டுள்ளார். இந்த யோகா ஆசனத்தை கர்ப்பமாக இருக்கும்போது கூட செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதே போன்று மற்றொரு ஆசனத்தையும் பகிர்ந்துள்ளார்.
தரையில் கைகளை முன்னோக்கி வைத்து கால்களை நீட்டி இடுப்பை மேல் நோக்கி தூக்கியபடி அந்த ஆசனம் இருக்கிறது. பிட்னஸ் சென்டரில் யாஸ்மின் கராச்சிவாலா, நடிகை தீபிகா படுகோனேவுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குகிறார். நடிகை அனன்யா பாண்டேயுடன் சேர்ந்து கொண்டு இந்த உடற்பயிற்சிகளை ஜிம்மில் அவர் செய்கிறார்.
சாப்பாடு விஷயத்தில் தீபிகா படுகோனே எப்போதும் தென்னிந்திய உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
தினமும் 6 நேரம் உணவு எடுத்துக்கொள்வதாகக் கூறும் தீபிகா படுகோனே, காலையில் இட்லி, தோசை அல்லது உப்புமா சாப்பிடுகிறார். புரோட்டீனுக்காக முட்டை எடுத்துக்கொள்கிறார். மதிய உணவில் பருவகால காய்கறிகளுடன் பருப்பு மற்றும் ரொட்டி சேர்த்துக் கொள்கிறார்.
வறுக்கப்பட்ட மீன் அவரது உணவில் பிரதானமாக இடம் பிடிக்கிறது. ஒரு கிண்ணம் சூப் மற்றும் ரசம் சாதத்துடன் அவரது இரவு உணவு மிகவும் எளிமையாக இருக்கிறது. தீபிகா தனது உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு பல ஆண்டுகளாக நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து வருகிறார்.
'கடுமையான பணிகளுக்கிடையே 5 நிமிடம் கிடைத்தாலும் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்துவிடுவேன்' என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.