உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோடியம் பைகார்பனேட் குறைந்தால்...

என் வயது 78. அதிக சோர்வு, மூச்சுத் திணறல், தலைசுற்றல் ஏற்பட்டதால் உடல் பரிசோதனை செய்தேன்.

News image
Updated On :19 ஜூலை 2026, 4:01 am IST

என் வயது 78. அதிக சோர்வு, மூச்சுத் திணறல், தலைசுற்றல் ஏற்பட்டதால் உடல் பரிசோதனை செய்தேன். சோடியம் பைகார்பனேட் குறைவாக உள்ளது. அதற்கான மாத்திரை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் கூறினார். இது எதனால் உடலில் குறைகிறது? இயற்கையான முறையில் இதை எப்படி உடலில் பெறலாம்?

-அனந்தராமன், சென்னை-40.

சோடியம் பைகார்பனேட் உடலின் அமில - கார சமநிலையைக் காக்கும் இயற்கைக் காவலன். நமது உடலில் ரத்தம், செல்கள், உறுப்புகள் அனைத்தும் சரியான முறையில் செயல்பட, ஒரு குறிப்பிட்ட அமில-கார சமநிலை அவசியம். இந்தச் சமநிலையைப் பாதுகாக்கும் முக்கிய இயற்கைப் பொருள்களில் ஒன்று சோடியம் பைகார்பனேட் ஆகும்.

பெரும்பாலானோர் சோடியம் பைகார்பனேட்டை 'சமையல் சோடா' என்று அறிவார்கள். ஆனால், நமது உடலே தினமும் இதை இயற்கையாக உற்பத்தி செய்து, ரத்தத்தின் பி.எச். அளவை சீராக வைத்திருக்கிறது.

சோடியம் பைகார்பனேட் என்பது ஓர் இயற்கையான காரத்தன்மை கொண்ட உப்பு. இது உடலில் அதிகமாக உருவாகும் அமிலங்களை சமநிலைப்படுத்தும் முக்கியப் பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது. சாதாரணமாக ரத்தத்தின் பி.எச். 7.35 முதல் 7.45 வரை இருக்கவேண்டும். இந்த அளவு மாறினால் இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படும்.

உடலின் சோடியம் பைகார்பனேட்டின் முக்கியப் பணி அமில-கார சமநிலையைப் பாதுகாக்கிறது. உடலில் உணவு செரிமானம், உடற்பயிற்சி, வளர்சிதை மாற்றம் போன்ற செயல்களால் அமிலங்கள் தொடர்ந்து உருவாகின்றன. இந்த அமிலங்களை பைகார்பனேட் நடுநிலையாக்குகிறது. ரத்தம் அதிக அமிலமாக மாறினால், பைகார்பனேட் உடனடியாக அதைச் சமநிலைப்படுத்துகிறது.

நுரையீரல் மற்றும் சிறுநீரகத்துடன் இணைந்து செயல்படுகிறது. நுரையீரல் அதிக கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் தேவையான அளவு பைகார்பனேட்டை மீண்டும் ரத்தத்தில் சேர்க்கிறது. இதனால் உடல் இயல்பான பிஎச்-யை பராமரிக்கிறது.

தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டை பாதுகாக்கிறது. அமிலம் அதிகரித்தால் தசை சோர்வு, பலவீனம் ஏற்படும். பைகார்பனேட் இதைத் தடுக்க உதவுகிறது.

இதயத்தின் இயல்பான துடிப்புக்கு உதவுகிறது. ரத்தத்தின் பிஎச் மாறும்போது இதயத்தின் இயல்பான மின்சார செயல்பாட்டை ஆதரிக்கிறது.

சோடியம் பைகார்பனேட் அளவு ஏன் குறைகிறது? சிறுநீரகங்கள் பைகார்பனேட்டை பாதுகாக்க முடியாதபோது அளவு குறையும். கடுமையான வயிற்றுப்போக்கின்போது உடலில் இருந்து அதிக அளவு பைகார்பனேட் வெளியேறுகிறது. நீரிழிவு நோயில் ஏற்படும் சீட்டோ அசிடோசிஸ் கட்டுப்பாடற்ற நீரிழிவில் அமிலங்கள் அதிகரிப்பதால் பைகார்பனேட் விரைவாகப் பயன்படுத்தப்பட்டு குறைகிறது. கடுமையான தொற்றுகள் -உடலில் அதிக லாக்டிக் அமிலம் உருவாகும்போது பைகார்பனேட் குறையும். நீண்டகாலப்பட்டினி -உடலில் கொழுப்பு எரிவதால் கீர்டோன் அமிலங்கள் உருவாகி பைகார்பனேட் பயன்படுத்தப்படுகிறது. சில மருந்துகள் பைகார்பனேட் அளவை பாதிக்கக்கூடும்.

பைகார்பனேட் குறைந்தால் அதிக சோர்வு, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், தசை பலவீனம், குழப்பமான மனநிலை, இதயத்துடிப்பில் மாறுதல் ஏற்படலாம். அதிகமானால் வாந்தி, ஹார்மோன் கோளாறுகள் ஏற்படலாம்.

பைகார்பனேட் இயற்கையாக எங்கிருந்து கிடைக்கிறது? முக்கியமாக உடலே இதை உருவாக்குகிறது. நேரடியாக அதிக அளவில் உணவில் இருந்து பெறவேண்டிய சத்து அல்ல. ஆனால், உடலில் இயல்பான உற்பத்திக்கு உதவும் உணவுகள்: முருங்கைக்கீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, வெள்ளரிக்காய், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், வாழைப்பழம், மாதுளை, தர்பூசணி, முலாம்பழம், இளநீர், போதுமான தண்ணீர்.

ஆயுர்வேத பார்வையில் தோஷங்களாகிய வாத, பித்த, கபங்களின் சமநிலை, அக்னி எனும் பசித்தீ மற்றும் தாது சமநிலை ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. உடலின் இயல்பான சமநிலைக்கு சீரான செரிமானம், போதுமான நீர்பானம், சத்தான உணவு, ஒழுங்கான உறக்கம், மனஅழுத்தக் கட்டுபாடு அவசியம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.