இசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

பட்டாம்பூச்சிப் பள்ளத்தாக்கு!

மரங்கள், செடிகள், கொடிகள் இருக்கும் இடங்களில் பறந்தபடி நடமாடும் பட்டாம்பூச்சி பலவண்ணங்களில் அழகாகத் தோன்றும்.

Updated On :

மரங்கள், செடிகள், கொடிகள் இருக்கும் இடங்களில் பறந்தபடி நடமாடும் பட்டாம்பூச்சி பலவண்ணங்களில் அழகாகத் தோன்றும். தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் இந்தப் பட்டாம் பூச்சிகள் மலைப்பிரதேசங்கள், பள்ளத்தாக்குகளில் பல்லுயிர்ப் பெருக்கங்களால் நிறைந்திருக்கும்.

நாட்டில் பல இடங்களில் பட்டாம் பூச்சிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவாவில் பலோலம், அகோண்டா கடற்கரைகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்கானது 'பட்டாம்பூச்சிப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது. இது கோவாவின் மறைக்கப்பட்ட ரத்தினம்தான்.

Story image

Zulkarnain

இந்தக் கடற்கரையை 'தேன்நிலவு கடற்கரை' என்றும் அழைப்பர். இந்த அமைப்பே பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட சிறிய குடாவில் உள்ளது. தரை வழியாகச் சென்றால் இதனை எளிதில் அடையலாம். காலையில் படகுச் சவாரி போனால், அதிர்ஷ்டம் இருந்தால் டால்பின்களைக் கண்டுகளிக்கலாம்.

அடர்ந்த வனத்தின் வழியே நடைப்பயணம் மேற்கொண்டால், மரங்களால் ஈர்க்கப்படும் பலவண்ணப் பட்டாம்பூச்சிகளைக் கண்டுகளிக்கலாம். மலை உச்சிப் பூக்களின் மீது பறக்கும் நூற்றுக்கணக்கான வித்தியாசமான பட்டாம் பூச்சிகளைக் காணலாம்.

அவை அழகோ அழகு. இங்குக் கடற்கரை நீர் தாழ் நிலையில் இருக்கும். இந்தச் சூழலில் இங்கு நண்டுகள், தங்கமீன்கள், நட்சத்திர மீன்கள், செம்மீன்கள், கடல்முள்ளெலிகள், ஆமைகள் போன்ற செழிப்பான நீர்வாழ் உயிரினங்களைக் காண சிறந்த இடம். இங்கு சூரிய அஸ்தமனம் தனிச் சிறப்பு. ஆனால், மாலை நேரத்துக்குள் திரும்பிவிடுவது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.