ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

சமணர் சிலை

மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நெற்குன்றம் கிராமத்தில் மண்ணில் புதையுண்ட நிலையில் பத்தாம் நூற்றாண்டுக் கால சமண சமய காலச் சிலையானது காண்போரை வியக்க வைத்து, வணங்கும் நிலையில் உள்ளது.

Published On :24 மே 2026, 8:05 pm IST

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நெற்குன்றம் கிராமத்தில் மண்ணில் புதையுண்ட நிலையில் பத்தாம் நூற்றாண்டுக் கால சமண சமய காலச் சிலையானது காண்போரை வியக்க வைத்து, வணங்கும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து ஸ்தபதி சுந்தரமூர்த்தி கூறியது:

'இந்தக் கிராமத்தில் 10-ஆம் நூற்றாண்டு காலத்தில் சமண சமயத்தார் வழிபட்ட தீர்த்தங்கரர் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட சிலை உள்ளது. தற்சமயம் அந்த சிலையின் பாதி மண்ணில் புதைந்தும், புதர் சூழ்ந்தும் உள்ளது. சிலையின் மேற்புறம் இருவர் சாமரம் வீசிக்கொண்டும் முக்குடை பிண்டிமரம், சிம்மபீடம் உள்ளிட்ட அமைப்புகளுடன் காணப்படுகிறது.

சோழர் காலத்தில் சமண சமய மக்கள் வழிபடும் வகையில் இந்தப் பகுதியில் கோயில் இருந்திருக்கலாம் என்றும், இயற்கை இடர்ப்பாடுகளாலோ, அந்நிய மன்னர்களாலோ படையெடுப்புகளாலோ இந்தச் சிலை சிதைந்து போயிருக்கக் கூடும்.

இந்த சிலையின் அருகே யாரும் செல்லமாட்டார்கள். சிலையை தொட்டாலோ, அந்த வழியாகச் சென்றாலோ வயிற்று வலி வரும் எனக் கூறப்படுவதால் யாரும் செல்லமாட்டார்கள். ஆனால், அது தேவையற்ற வீண்வதந்தியாகும்' என்கிறார் சுந்தரமூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.