காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொழில்முனைவோராக விரும்புகிறீர்களா?

*5  முதல் 8 வகுப்பு வரை படித்தவர்களும் சேரலாம். *கட்டணம், தங்கும் வசதி, உணவு இலவசம். *மத்திய அரசின் சான்றிதழ் பெறலாம். *வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம். *வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெறலாம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:59 am

ச. குமரன்

*5  முதல் 8 வகுப்பு வரை படித்தவர்களும் சேரலாம்.

*கட்டணம், தங்கும் வசதி, உணவு இலவசம்.

*மத்திய அரசின் சான்றிதழ் பெறலாம்.

*வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம்.

*வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெறலாம்.

*தொழிற்கருவிகள் வாங்க வங்கிகளில் கடனுதவி பெற முன்னுரிமை.

நாட்டின் இளைஞர்களுக்கு தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வலுப்படுத்துவதோடு, அவர்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுவதிலும் நேரு யுவ கேந்திரா (என்.ஒய்.கே.) முன்னணியில் உள்ளது. இப்போது இளைஞர்களுக்கு குறுகியகால தொழிற் பயிற்சியை அளிக்க நேரு யுவ கேந்திரா ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பல்வேறு தொழில் பிரிவுகளில் இளமையில் இருந்தே அனுபவப்பூர்வமாக திறன் பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

 இந்த குறுகியகால தொழிற்பயிற்சியில் சேருவதன் மூலம் மத்திய அரசின் சான்றிதழுடன் தங்களது திறமைக்கு அங்கீகாரம் பெற முடியும்.

360 பிரிவுகளில் தொழிற் பயிற்சி:

 தேசிய தொழிற்பயிற்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களில் (ஐ.டி.ஐ.) கொத்தனார், தச்சர், உலோக வேலை, கம்பி கட்டுதல் உள்ளிட்ட 360 தொழிற் பிரிவுகளில் சேரலாம்.

இதுதவிர, பரம்பரையாகவோ அல்லது இந்தத் தலைமுறையில் குறிப்பிட்ட தொழிலில் திறனும், அனுபவமும் பெற்ற

 5  முதல் 8 வகுப்பு வரை படித்தவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம்.

பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு:

இந்த ஆண்டுக்கான தொழிற் பயிற்சி வகுப்புகளில் சேர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 400 பேர் தேர்வு செய்யப்படுவர். இதுதவிர புதுச்சேரியைச் சேர்ந்த 75 மாணவர்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர அனுமதிக்கப்பட உள்ளனர். மொத்த தொழிற்பயிற்சி இடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இந்தப் பயிற்சி வகுப்புகளில் 15 முதல் 40 வயது வரையுள்ளவர்கள் சேரலாம்.

இதுகுறித்த விவரங்களுக்கு புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நேரு யுவ கேந்திராவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களை அணுக வேண்டும்.

உணவு, தங்கும் இடம் இலவசம்:

பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பக் கட்டணம், கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட எந்த வித கட்டணமும் இல்லை.

 செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு தினமும் 3 வேளை தரமான சாப்பாடு, தங்குமிடமும் இலவசமாக வழங்கப்படும்.

தொழிற் பிரிவுகளுக்கு ஏற்ப 20 முதல் 90 நாள்கள் வரை இந்த குறுகிய கால தொழிற்பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி நிறைவடைந்த பின் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மத்திய

தொழிலாளர் நலத்துறை சார்பில் சான்றிதழ் வங்கப்படும்.

அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இந்த சான்றிதழ்களை பதிவு செய்யலாம். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் தொழில் பிரிவுகளில் திறன் மிகுந்த பணியாளராக வேலைவாய்ப்பை எளிதில் பெற முடியும். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இதற்கான வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

உள்நாட்டில் தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்கள், தங்களுக்குத் தேவையான தொழிற் கருவிகள், உபகரணங்கள், இயந்திரங்கள், தளவாடங்களை வாங்கவும், சுயவேலைவாய்ப்புக்கும் வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். என்ன, வேலை தேடும் இளைஞர்களே, நீங்கள் தயாரா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.