வாங்க... இங்கிலீஷ் பேசலாம்: 12
ரொபஸர், அவரது நாய் ஜூலி மற்றும் கணேஷ் வெள்ளம் சூழப்பட்ட சென்னை புறநகர் பகுதியொன்றில் படகில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.


ரொபஸர், அவரது நாய் ஜூலி மற்றும் கணேஷ் வெள்ளம் சூழப்பட்ட சென்னை புறநகர் பகுதியொன்றில் படகில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கணேஷ்: சார்... நாம வகுப்புக்கு போகாம ஏன் போட்ல போறோம்?
புரொபஸர்: நீ எதார்த்தத்தைப் பார்க்கணுமுன்னு தான் கூட்டி வந்தேன். வெளி உலகத்தில பொதுமக்களோட நிலையைப் பார்த்தும் உன் இங்கிலீஷைக் கத்துக்கோ
கணேஷ்: ஓகே சார். அப்பிடீன்னா இந்த வெள்ளத்துக்கு floodingன்னு இன்னிக்கு பேப்பர்ல படிச்சேன். வேற எப்படியெல்லாம் இதைச் சொல்லலாம்?
புரொபஸர்: inundated. இன் அன் டெய்டட் ன்னு உச்சரிக்கணும். ரொம்ப அதிகப்படியான வெள்ளம் வந்தா delugeன்னு சொல்லலாம். உச்சரிப்பு டெல்யூஜ். The city witnessed the worst deluge of the decadeன்னு சொல்லலாம்.
கணேஷ்: அதென்ன சார் decade?
புரொபஸர்: decadeன்னா ஒரு பத்தாண்டு காலம்.
கணேஷ்: அப்பிடீன்னா அஞ்சு வருசம்?
புரொபஸர்: lustrum. 20 வருசங்களை மொத்தமா scoreன்னு சொல்லலாம். ஆனா இந்த ரெண்டையும் நாம் அதிகமா பயன்படுத்துறது இல்ல. ஆனா millennium (மில்லினியம்) கேள்விப்பட்டிருப்பே. ஆயிரம் வருசங்களை மொத்தமா சொல்றது தான் millennium.
கணேஷ்: சார் ஏன் வெள்ளத்துக்கு போய் இவ்வளவு சொற்கள்?
புரொபஸர்: ஆங்கிலத்தோட சிறப்பே அது தான். இதே சொற்களை வேற பொருளிலயும் பயன்படுத்தலாம். இப்போ நீ படிச்சு முடிச்சதும் உனக்கு நிறைய கம்பெனிகளில் இருந்து வேலை வாய்ப்புகள் கிடைக்குதுன்னா நீ சொல்லலாம், I have received a deluge of offers..
ஓர் எதிர்மறையான சொல் எப்படி பாஸிட்டிவாகப் பயன்படுத்தப்படுதுன்னு பார்த்தியா? ஆனா inundateஐ இதே மாதிரி நெகட்டிவான பொருளில் பயன்படுத்துவாங்க. உன்னைப் பத்தி எனக்கு நிறையப் புகார்கள் வருதுன்னா I am inundated with complaints about Ganesh. Floodயும் பாஸிட்டிவா பயன்படுத்தலாம். உனக்கு ஒரு விருது கிடைச்சுதுன்னா நிறையப் பேர் உன்னை வாழ்த்துவாங்க. அதை congratulatory messages flooded in as the news of my award spreadன்னு சொல்லலாம்.
ஜூலி: She flooded my heart with delight
கணேஷ்: அப்படீன்னா?
ஜூலி: அவள் என் இதயத்தை இன்பத்தால் நிறைத்தாள்.
கணேஷ்: இயற்கை பேரிடர்ன்னு சொல்றாங்களே இங்கிலீஷ்லயும் அந்த மாதிரி இப்படியான மழையினாலான ஆபத்துக்கு பெயர் இருக்கா சார்?
ஜூலி: natural calamity, catastrophe, cataclysm, disaster எல்லாமே இதுக்கான சொற்கள் தாம். இப்படி கொட்டோ கொட்டுன்னு பெய்ற மழையை heavy downpourன்னும் சொல்லலாம்.
புரொபஸர்: it rained cats and dogs அப்டீன்னு ஒரு idiomatic expression இருக்கு. கடுமையான மழைன்னு அர்த்தம்.
கணேஷ்: அது ஏன் சார் நாய் பூனையெல்லாம் மழையாக் கொட்டுது? மிருகங்களுக்கும் மழைக்கும் என்ன தொடர்பு?
புரொபஸர்: ஆக்சுவலி இது ரொம்ப பழைய சொற்றொடர். நானூறு வருசங்களுக்கு மேலாக ஆங்கிலத்தில raining cats and dogs இருக்குது. 1710 இல் ஜோனதன் ஸ்விப்ஃட் என்கிற ஆங்கிலேயக் கவிஞர் city showers என்கிற ஒரு கவிதையில் இது பற்றி குறிப்பிடுகிறார். அந்த காலத்தில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட அடுத்த நாள் லண்டன் வீதிகளில் நிறைய நாய், பூனைகளோட பிணங்கள் காணக் கிடைத்ததுன்னு சொல்றார். அதைப் பார்க்கிற மக்கள் மழையோட இந்த மிருகங்களும் வானத்தில் இருந்து சாலைகளில் வந்து விழுந்ததா நெனச்சிருக்கலாம். இம்மாதிரியான நம்பிக்கைகளில் இருந்து இந்த வாக்கியம் உருவாகி இருக்கலாம்.
ஜூலி: இது வெறும் பேத்தல். நீ இதுவரை எப்பயாவது மழை வெள்ளத்தில நாய், பூனைகள் சிக்கி செத்ததைப் பாத்திருக்கியா?
கணேஷ்: இல்லியே...
ஜூலி: நாங்க மனிசங்களை விட புத்திசாலிங்க. புயல் அடிக்கிறதுக்கு ரொம்ப நேரம் முன்னாடியே பூனைகள் போய் எங்கியாவது பதுங்கிடும். நாய்கள் எங்கியாவது உயரமான இடங்களுக்கு போய் பதுங்கிடுவோம். அதனால மழைவெள்ளத்தில் மனிதர்கள் தான் அதிகம் பலியாவாங்க. அதுக்காக its raining humansன்னு எங்கியாவது சொல்றோமா?
கணேஷ்: சரி தானே?
புரொபஸர்: என்ன சரி தானே? ஒரு நாய் சொன்னா உடனே நம்பிடுவியா?
கணேஷ்: அதுக்கில்ல சார். ஜூலி சொல்றதில ஒரு லாஜிக் இருக்கு. சரி ஜூலி, வேறெப்படி இது வந்திருக்க முடியும்? சொல்லேன்...
ஜூலி: நார்வேஜிய மக்களோட புராணக் கதைகளில் புயல் கடவுள் ஓடின் தன் இரு பக்கத்திலும் நாய் மற்றும் ஓநாய்களோட தோன்றுவார். அதே மாதிரி நாட்டுப்புற கதைகளில் வரும் சூனியக்காரிகள் புயல் மழை அடிக்கும் போது ஒரு துடைப்பத்தின் மேல உட்கார்ந்து பறந்து போவாங்க. அப்போ அவங்க பக்கத்தில கறுப்பு பூனைகள் இருக்கும். இந்த ரெண்டு கதையும் சேர்ந்து raining cats and dogs தோன்றியிருக்கலாம். அது மட்டுமில்ல இது cata doxa என்கிற கிரேக்க சொற்களில் இருந்தும் வந்திருக்கலாம். இதுக்கு நம்ப முடியாத என்று அர்த்தம். நாய், பூனை வானத்தில இருந்து கொட்டுறதுன்னா நம்ப முடியாது தானே? அப்படி நம்ப முடியாத அளவு மழை பெய்யுறதை cata doxaன்னு சொல்லி பிறகு அது மருவி cats and dogs ஆகியிருக்கலாம்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...