புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாங்க... இங்கிலீஷ் பேசலாம்: 14

புரொபஸரும் கணேஷும் சென்னை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடக்கிறார்கள். பூங்கா வாயிலில் வேர்க்கடலை விற்கிறவரின் பக்கம் நாய் ஜூலி உட்கார்ந்திருக்கிறது.

News image
Updated On :14 டிசம்பர் 2015, 4:19 pm

ஆர்.அபி​லாஷ்

புரொபஸரும் கணேஷும் சென்னை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடக்கிறார்கள். பூங்கா வாயிலில் வேர்க்கடலை விற்கிறவரின் பக்கம் நாய் ஜூலி உட்கார்ந்திருக்கிறது.

கடலை விற்பவர் ஜூலியிடம்: பெரியவரு உன்னை பாத்துக்க சொல்லியிருக்கிறாரு. வாயில்லா ஜீவன்னு ஒத்துக்கிட்டேன். கடிச்சிடாதே.

ஜூலி: நான் கடிக்க மாட்டேன்.

கடலை விற்பவர்: அதெப்படி நான் நம்பறது? ஐயோ நாய் பேசுது! நீ தானே நாயே பேசினே?

ஜூலி: Yes I did. So whats biting you my talkative caretaker

கடலை விற்பவர்: என்னா சொன்னே?

ஜூலி: உன்னைப் பார்த்தா ஏதோ கவலையா இருக்கிற மாதிரி இருக்கு. ஆழ்மனசில கவலை அரிச்சிக்கிட்டு இருக்கிறதையும் bitingன்னு சொல்வோம்.

கடலை விற்பவர்: இன்னொண்ணு சொன்னியே?

ஜூலி: ற்ஹப்ந்ஹற்ண்ஸ்ங். தொணதொணன்னு பேசிக்கிட்டே இருக்கிறது. Loquaciousன்னும் சொல்லலாம். உச்சரிப்பு லெக்வெய்ஷெஸ். விடாம பேசுறவங்க தான் chatterbox. ஓவரா பேசிக்கிட்டு இருந்தா bigmouth. அற்ப விசயங்களுக்கு எல்லாம் விடாம பேசுறவங்க garrulous.

கடலை விற்பவர்: என் பொண்டாட்டி மாதிரி. முனியம்மா  is garrulous.

ஜூலி: நிறுத்தாம எதையாவது பேசுறவங்களை chattyன்னு சொல்லலாம்.

கடலை விற்பவர்: நீ கூட நல்லாவே பேசுறே

ஜூலி: நான் communicative. அப்பிடீன்னா நினைச்சதை சரளமா சொல்ல முடியறவங்க. நினைச்சதை தயங்காம முன்வந்து சொல்றவங்க forthcoming. நம்ம கிரிக்கெட் வீரர் அஷ்வின் மாதிரி. சில பேரு சுத்தி வளைச்சு அர்த்தமில்லாம பேசிக்கிட்டே போவாங்க. அது rembling. தேவையில்லாம வார்த்தைகளைக் கொட்டுவாங்க சிலர். ஒரு வாக்கியத்தில சொல்றதை நாலு வாக்கியமா இழுப்பாங்க. அது verbose talk. wordyன்னும் சொல்லலாம்.

கடலை விற்பவர்: எல்லாரையும் பத்தி உற்சாகமாப் பாராட்டி பேசுறவங்க?

ஜூலி: Gushing. Effusive. உதாரணமா The ministers came and gushed about the greatness of their chief minister.

கடலை விற்பவர்: குழந்தைங்க எவ்வளவு பேசினாலும் கேட்டுட்டே இருக்கலாம். ஒண்ணுமே புரியாட்டியும் அதுங்க திக்கிப் பேசுறது எவ்வளவு இனிமையா இருக்குது இல்லியா? இங்க இத்தனை குழந்தைங்க கத்தி விளையாடறதை பார்த்தா மனசு உருகிப் போயிடுது.

ஜூலி: அது prattling. சரி இவ்வளவு சொல்லி இருக்கேன். எனக்கு எதனாச்சும் குடு.

கடலைக்காரர் ஜூலிக்கு ஒரு பொட்டலம் கடலை கொடுக்கிறார். ஜூலி சாப்பிடுகிறது.

ஜூலி: it has a nice fresh bite.

கடலை விற்பவர்: திரும்பவும் biteங்கிறே. கடலையை கடிக்க முடியலியா?

ஜூலி: நல்ல புதுசா சமைச்ச வாசனை இருக்குதுன்னு சொன்னேன். biteன்னா அப்படி ஒரு அர்த்தமும் இருக்கு. உதாரணமா the chicken curry had a mouth-watering pepper bite to it.  அதாவது சிக்கன் குழம்பில பெப்பர் வாசனை தூக்கலா நாக்கில எச்சில ஊறுற மாதிரி இருந்துது.

கடலை விற்பவர்: கேட்கவே நல்லா இருக்கே. ஆனா நீ இங்கே இருந்தா கடைக்கு பயந்துகிட்டு யாரும் வர மாட்டாங்களே?

ஜூலி: தேவையில்லாத பயம். இந்த உலகத்திலேயே பயங்கரமான உயிர்க்கொல்லி எது தெரியுமா?

கடலை விற்பவர்: சிங்கம், புலி?

ஜூலி: ம்ஹும்...

கடலை விற்பவர்: யானை?

ஜூலி: இல்லை. சிங்கம் சராசரியா வருசத்துக்கு 100 மனுசங்களைக் கொல்லுது. ஆனால் கொசு வருசத்துக்கு ஆறு லட்சம் பேரைக் கொல்லுது. நத்தை பத்தாயிரம் பேரைக் கொல்லுது. ஆனா நீங்க ஒரு சாதாரண நாயைப் பார்த்து மட்டும் பயப்படுறீங்க. நாய்கள் மீதான இப்படியான அநாவசியமான பயத்தை தான் cynophobiaன்னு சொல்றோம். உச்சரிப்பு சைனோபோபியா.

தூறல் போட ஆரம்பிக்கிறது. காற்று பலமாய் அடிக்கிறது. குளிரில் கடலைக்காரர் கைகளை இறுக்க கட்டிக் கொள்கிறார்.

ஜூலி: The air has quite a bite. Chilly weather isnt it

கடலை விற்பவர்: ஆங்...

ஜூலி: சாரி. குத்துற மாதிரி குளிருவதை biteன்னு சொல்லலாம்.

கடலை விற்பவர்: சில்லின்னியே அது பச்சை மிளகாய் தானே?

ஜூலி: பச்சை மிளகாய் chili. இது chilly.  தாங்க முடியாத குளிர். இந்த மாதிரி சீதோஷ்ண நிலையை nippyvன்னும் சொல்லலாம். நீங்க இன்னிக்கு குடிச்சிட்டு லேட்டா வீட்டுக்கு போனா you get a chilly welcome from your wife. அதாவது நீங்க வந்ததும் மூஞ்சியை தூக்கி வச்சிட்டு உங்களை பார்க்காத மாதிரி கோவமா இருப்பாங்க.

கடலை விற்பவர்: நீ நல்லா சொல்லிக் கொடுக்கிறேப்பா. நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஏன் ஒரு டியூசன் இன்ஸ்டிடுயூட் ஆரம்பிக்கக் கூடாது? 50-50 ஷேர். என்ன சொல்றே?

ஜூலி: எனக்கு எதுக்கு பணம்? (அவ்வழி குதித்து வரும் ஒரு சிவப்பு கவுன் போட்ட பெண் குழந்தையை நோக்கி) hi dear, have a bite

கடலை விற்பவர்: என்னது? அதைக் கடிக்கப் போறியா?

ஜூலி: டிபனுக்கு எதையாவது கொறிக்கிறதை have a biteன்னு சொல்லலாம்.

கடலை விற்பவர்: பாப்பா வா... பக்கத்தில வந்து கடலை வாங்கி துன்னுட்டே இந்த நாய் பேசுறதைக் கேளு.

குழந்தை சந்தேகமாய் நடந்து பக்கத்தில் வருகிறது.

குழந்தை: இந்த நாய் நிஜமாவே பேசுமா?

கடலை விற்பவர்: பின்னே? ஏய் பேசிக் காட்டு

ஜூலி (சத்தமாய்): பவ் வவ் வவ்

குழந்தை பயந்து வீரிட்டலறியபடி ஓடுகிறது.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.