வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இணைய வெளியினிலே!

ஒருவர் தொழிலகத்தில் கோபப்படுகிறார் என்றால், அவருக்கு வீட்டில் இடர்கள் இருக்கலாம். வீட்டில் எதற்கெடுத்தாலும் சினக்கிறார் என்றால், அவருடைய தொழிலகத்தில் இயல்பான சூழல் இல்லாமல் இருக்கலாம்.

News image
Updated On :22 டிசம்பர் 2015, 11:56 am

முக நூலிருந்து...

ஒருவர் தொழிலகத்தில் கோபப்படுகிறார் என்றால், அவருக்கு வீட்டில் இடர்கள் இருக்கலாம். வீட்டில் எதற்கெடுத்தாலும் சினக்கிறார் என்றால், அவருடைய தொழிலகத்தில் இயல்பான சூழல் இல்லாமல் இருக்கலாம். இரண்டு இடங்களிலும் கடித்துக் குதறுகிறார் என்றால் அவருடைய பிரச்சனை அவரேதான்.

- கவிஞர் மகுடேஸ்வரன்.

வீடு ஒழுகாதவனுக்கு - மழை இரவு போல் இதமானது எதுவுமில்லை

எல்லாரிடமும் என்னை நிரூபித்துக் கொண்டிருக்க முடியாது.

அப்படி முயற்சிக்கத் துவங்கினால், பிறகு - அதுவே வாழ்க்கையாகி விடும்

- மப்ரூக்.உல்.

ஊசி ஒன்று தன் ஒரு முனை கூர்மையாக இருப்பதில் பெருமையடைந்தது. ஆனால் தன் மறுமுனை ஓட்டையாக இருப்பதால் அதை அவமானமாகவும் நினைத்தது.

ஒரு நான் அதன் மறுமுனை உடைந்து போனது. காதறந்த நிலையில் அந்த ஊசியைப் பயன்படுத்தியவர் தூக்கியெறிந்தார். அப்போதுதான் அந்த ஊசிக்குத் தான் அவமானமாக நினைத்த மறுமுனையின் முக்கியத்துவம் தெரிந்தது.

ஒருவர் கூர்மையான புத்தியுள்ளவராக இருந்தால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது. கூர்மையான ஊசி தன்னுள் நூலை நுழைத்துக் கொள்ள காது இருப்பதால் தான் அது பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.

காதறந்த ஊசி பயன் இல்லை. அது போல் பிறரைத் தன்னுள் ஏற்றுக் கொள்ளும் அன்பு இருந்தால் மட்டுமே சிறந்தவனாகத் திகழ முடியும்.

- சர்தார் எம்.ஜே.எம்.

சல்மான் கான் குடிச்சிருந்தத நிரூபிக்க முடியல.. நான் ஒரு கட்டிங் போட்டு போனா கூட எங்க வீட்ல கரெக்டா கண்டுபிடிச்சு மிதிக்கிறாய்ங்க..

- பூபதி முருகேஷ்.

குழந்தைகள் எப்போதும் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை..அவர்கள் கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகிறார்கள் என டிவிட்டரில் படித்த ஞாபகம்.

நேற்று டாஸ்மாக் கடை இருக்கும் சாலையொன்றில் ஒருவன் இப்படியான வார்த்தைகளையே தன்நிலை மறந்து பேசிக்கொண்டிருந்தான்.

நாளை நிதானத்தில் இருப்பவர்களும் இப்படியாகவே பாடக் கூடும். பாடியவர்கள் எந்த நிலையில் இருந்து பாடி இருப்பார்கள் என்பது தான் இப்போதைய கேள்வி. உங்களுக்கு பிறக்கப்போகும் மகள் இந்த பாடலைப் பாடாமல் இருக்கக் கடவதாக

- பொன் விமலா.

சுடச் சுட ஒரு வார்த்தை தேவைப் படுகிறது

இந்த பிரபஞ்சத்தின் மீது சூடு போட...

- ஷபி ஷபி

முடுக்கு

வெளியேறும்

வழி தெரியாத

எல்லா உள் நுழைவும்

சூதாட்டமே

இரண்டாம் முறையாக முழுவதும் மூழ்கிய வீட்டில் இப்போது வெள்ளம் வடிந்திருக்கிறது. வீட்டைக் கழுவி சுத்தம் செய்யாமல் விரக்தியோடு நிற்கிறார்கள்.

அது இன்னொரு தடவ மூழ்காதுனு என்ன நிச்சயம் எனும் கேள்வி மிகக் கொடூர வலியுடையது.

-ஈரோடு கதிர்.

வலைத்தளத்திலிருந்து...

எப்பொழுதும் எல்லோருடைய மனதிலும் இப்படி ஒரு தூளி ஆடிக்கொண்டுதான் இருக்கும். அது அம்மாவின் பழைய புடவையில் ஆனதாக இருக்கலாம். ஆலமரத்தின் விழுதாகஇருக்கலாம். மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடாமல் நம்முடைய பால்யத்தை கடந்திருக்கவே முடியாது என்றே நினைக்கிறேன். தாழைநார் கயிற்றாலும் பனைநார் கயிற்றாலும் ஊஞ்சல் கட்டி ஆடுவது ஒரு கலையாகவே இருந்தது. சில இடங்களில் வேல்களை நட்டு இடையில் கயிறு கட்டியும் ஊஞ்சலாடினர்.

ஊஞ்சல் ஆட்டம் என்பது ஒரு கொண்டாட்டம். அதே நேரம் அது ஒரு தவநிலையும் கூட. ஒரு நிறைவான ஊஞ்சலாட்டம் இதை உணர வைத்துவிடும். ஊஞ்சல் மீது அமர்ந்து ஆட ஆடமுதலில் சிரிப்பும் குதூகலமுமாகத் தொடங்கும் ஆட்டம், மெல்ல மெல்ல மனம் ஒருநிலைப்பட்ட தியானம் போல மாறியிருப்பதை உணர முடியும். அதனால்தானோ என்னவோ, ஒரு காலகட்டம் வரை தெருவில், மரத்தடியில் என ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல், வீட்டின் திண்ணை, வரவேற்பறை, மாடியின் பெரிய கூடம், தாழ்வாரம், முற்றம், படுக்கையறை என எல்லா இடங்களிலும் ஆடவும் அலங்காரமாகவும் மாறியிருக்கிறது. சிறுமிகளின் விருப்பத்துக்குரிய பொருளாக இருந்த ஊஞ்சல் அந்த வீட்டின் தலைவனான மூத்த ஆண் அமரும் அடையாளமாக ஒரு காலகட்டத்தில் மாறிப்போனது.

ட்ற்ற்ல்ள்://ள்ஹந்ற்ட்ண்த்ர்ற்ட்ண்.ஜ்ர்ழ்க்ல்ழ்ங்ள்ள்.ஸ்ரீர்ம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.