புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாங்க... இங்கிலீஷ் பேசலாம்: 15

புரொபஸரும் கணேஷும் நாகேஸ்வர ராவ் பார்க்கில் நடக்கிறார்கள். அப்போது அவர்களைப் போல் நடைபழகும் ஓர் இளம்பெண் அவர்களைக் கடந்து ஓடுகிறாள்.

News image
Updated On :22 டிசம்பர் 2015, 11:49 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸரும் கணேஷும் நாகேஸ்வர ராவ் பார்க்கில் நடக்கிறார்கள். அப்போது அவர்களைப் போல் நடைபழகும் ஓர் இளம்பெண் அவர்களைக் கடந்து ஓடுகிறாள்.

கணேஷ்: சார் அந்த பொண்ணு?

புரொபஸர்: அந்த பொண்ணுக்கு என்ன? வர வர நீ பொண்ணுங்களைப் பத்தியே அதிகம் கவலைப்படுறே.

கணேஷ்: இல்ல சார்... அந்த பொண்ணு நம்மளைக் கடந்து ஓடிச்சே அதை எப்படி இங்கிலீஷ்ல சொல்றது?

புரொபஸர்: she ran past us. Outranன்னும் சொல்லலாம். வேலையிலோ விளையாட்டிலோ ஒருவர் நம்மை விடச் சிறப்பாக செயலாற்றினால் அவர் நம்மை outperform செய்கிறார். Outshineன்னும் சொல்வோம்.

கணேஷ்: சார் அதென்ன ran? Run  தானே ஓடுறதுக்கு சொல்லணும்?

புரொபஸர்: குட். ஒரு நல்ல கேள்வி கேட்டிருக்கெ. உனக்கு tense பத்தி சொல்லித் தரதுக்கு டைம் வந்திருச்சு.

கணேஷ்: சார் நாம உட்கார்ந்து பேசலாமே. டயர்ட் ஆகுது

புரொபஸர்: சரி. இந்த தலைமுறையினர் எல்லாருக்கும் சீக்கிரமே டயர்ட் ஆகிடுது. எங்க காலத்தில சும்மா சாதாரணமாவே தினமும் 20, 30 கிலோ மீட்டர் நடப்போம். சரி அதை விடு. நான் இப்போ கடைசியா சொன்னதை இங்கிலீஷ்ல சொல்லு பார்ப்போம்.

கணேஷ்:we walk 20, 30 km in. 

புரொபஸர்: in our times. இல்லாட்டி in our generation. சரி walk என்கிறது நிகழ்காலத்தை சொல்ற ஒரு verb,  அதாவது வினைச்சொல். அதோட கடந்த காலச் சொல் தெரியுமா?

கணேஷ்: தெரியும் சார். Walked.  பள்ளிக்கூடத்தில படிச்சது நினைவிருக்கு. மூணு பகுதியா பிரிச்சு present, past அப்புறம் இன்னொண்ணு போட்டு டீச்சர் சொல்லித் தந்தாங்க. Walk, walked, walked.  மனப்பாடம் பண்ணினோம்.

புரொபஸர்: அந்த மூணாவது தான் past participle.

கணேஷ்: அதென்ன சார் past participle?

புரொபஸர்: அப்புறமா சொல்றேன். சரி run ஓட past tense என்ன?

கணேஷ்: தெரியல சார். மறந்திடுச்சு.

புரொபஸர்: பரவாயில்ல. Ran. Run (present)  ran (past)  run (past participle)

கணேஷ்: ஆமா இப்போ நினைவு வந்திருச்சு. Ran. She ran past us.  சார்... ஒரு சந்தேகம். கிரிக்கெட் கமெண்டிரியில they just

run 2 runs சொல்வாங்களே. அது ஏன் ran இல்லே?

புரொபஸர்: அவங்க அப்படிச் சொல்ல மாட்டாங்க. they just run 2 run.

கணேஷ்: என்ன சார் வித்தியாசம்?

புரொபஸர்: அதுவா? சொல்றேன். அந்த பொண்ணு நம்மை கடந்து ஓடிச்சே அது இன்னிக்கா நேத்தா?

கணேஷ்: என்ன சார் கேள்வி இது? இன்னிக்கு தானே

புரொபஸர்: நீ வெறுமனே she ran past us  என்று சொன்னா படிக்கிறவங்களுக்கு அது கொஞ்ச முன்னாடி தான்னு எப்படித் தெரியும்?

கணேஷ்: todayன்னு சேர்த்துக்கலாம். she ran past us today.

புரொபஸர்: தனியா todayன்னு சேர்த்துக்கிறதுக்கு காரணம் வேணுமே? இல்லாட்டி விசித்திரமா தெரியும்.

கணேஷ்: என்ன பண்றது சார்?

புரொபஸர்:  she has run past usன்னு சொன்னாகேட்கிறவங்களுக்கு கொஞ்ச முன்னே அவ நம்மைத் தாண்டி ஓடினான்னு புரியும்.

கணேஷ்: அதெப்படி எனக்கு அப்பிடி புரியலியே

புரொபஸர்: தெரிஞ்சவங்களுக்கு புரியும்டா. ரெண்டு வாக்கியத்துக்கும் என்ன வித்தியாசம்? சொல்லு.

கணேஷ்: ranன்னுக்கு பதிலா run.

புரொபஸர்: அப்புறம்?

கணேஷ்: ம்...ம்... has சேர்த்திருக்கீங்க. அதெதுக்கு சார்?

புரொபஸர்: has, have, had இது மூணும் துணை வினைச்சொற்கள். Perfect tenseஇல் இதை பயன்படுத்துவோம். ஒவ்வொண்ணையும் தனித்தனியா டைம் வரும் போது சொல்லித் தரேன். அதுக்கு முன்னாடி நீ மேலே சொன்ன வாக்கியத்தோட முழு பொருளையும் தெரிஞ்சிக்கணும்.

கணேஷ்: she has run past us  இல் இதுக்கு மேலே என்ன இருக்கு சார்?

புரொபஸர்: அதில பெரிய தத்துவமே இருக்குடா. நான் இப்போ இந்த வாக்கியத்தை சொல்லி முடிச்சதும் அது என்ன காலத்தில இருக்கு?

கணேஷ்: நிகழ் காலம் சார்

புரொபஸர்: அதான் இல்ல. நிகழ் காலம்னா அது எப்படி முடிஞ்சு போகலாம்? நீ மூச்சை இழுத்து விடுறியே அது நிகழ் காலமா?கடந்த காலமா?

கணேஷ்: சார் நேத்து இல்லாட்டி போன வாரம் இல்லாட்டி போன மாசம் நடந்ததைத் தானே கடந்த காலம்னு சொல்வோம்?

புரொபஸர்: ஆமா சரியாச் சொன்னே. அப்போ நிகழ்காலத்தில அதாவது இப்போ நடந்து முடியறதை, இன்னிக்கு நடந்த கடந்த காலத்தை என்னென்னு சொல்ல?

கணேஷ்: present past நிகழ் கடந்த காலம்

புரொபஸர்: ஹா... ஹா. நீ புதுசா ஒரு வார்த்தை அதுக்கு கண்டுபிடிக்க வேண்டாம். ஏற்கெனவே அதைத் தான் present perfectன்னு சொல்றோம். காலம் என்கிறது ரொம்ப சிக்கலானது. நாம நிகழ்காலத்தில் இருக்கும் போதே அது கடந்த காலம் ஆயிடுது. எதிர்காலத்தை பத்தி நாம யோசிக்கும் போது நாம நிகழ்காலத்தில இருக்கிறோமா? கடந்த காலத்தில இருக்கிறோமா? யோசிச்சு பாரு.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.