சூரிய சக்தியின் பயன்பாட்டினை உணர்ந்து பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
சூரிய சக்தி என்பது விலையில்லாமல் கிடைப்பதாகும். அதைப் பயன்படுத்தி இயங்கும் எந்தக் கருவியும் சுற்றுச்சூழலை நாசமாக்காது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் நான்குபேர் இணைந்து, சூரிய சக்கியில் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கரவாகனத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
சந்திரமோகன், கார்த்திகேயன், பிரதாப், விக்னேஸ்வரன் ஆகிய நான்குபேரும் ஆய்வு செய்து இந்த சாதனையைப் புரிந்துள்ளனர்.
இந்த மூன்று சக்கரவாகனத்தின் மேற்கூறையில் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது.
சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை சேமித்து வைக்க மின்கலம் பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்திற்கு தேவையான மொத்த மின் ஆற்றுலும் 50 வோட் மின்சக்தி கொண்ட சோலார் பேனல் மூலம் கிடைக்கிறது.
மிகக்குறைந்த அளவு மின்சக்தியை ஏற்கும் டிசி மோட்டார்கள் கொண்டு இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக, பேருந்துகளில் பொருத்தப்பட்டுள் வைப்பர் மோட்டார்கள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை இயக்க 12 வோல்ட் மின் அழுத்தம் தேவைப்படுகிறது.
நான்கு சக்கரவானங்களில் உள்ளது போல ஸ்டியரிங் அமைப்பு இதில் இல்லை. மாறாக திசை திருப்பு பட்டன்கள் மைக்ரோ கண்ட்ரோலர்கள் உதவியுடன் வாகனத்தை நான்கு திசையிலும் திருப்புவதற்கு பொருத்தப்பட்டுள்ளன.
இது சுமார் 15 கி.மீ. வேகத்திலிருந்து 20 கி.மீ.வேகம் வரை இயங்கும்.
இது சூரிய சக்தி இல்லாத நேரத்தில் தொடந்து மூன்று மணிநேரம் இயங்கும். பகல் நேரத்தில் சூரிய சக்தி இருக்கும் வேளையில் தொடந்து இயக்கலாம்.
இதை ஒரு நபரே இயக்கிச் செல்லலாம்.
இந்த மின்வாகனத்தைத் தயாரிக்க 16 ஆயிரம் ரூபாய் ஆகிறதாம். இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:
""தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு கையினால் இயக்கும் மூன்று சக்கரவாகனம் மற்றும் பெட்ரோலால் இயங்கக் கூடிய வாகனங்கள் உள்ளன. இந்த சூரிய சக்தி வாகனத்துக்கு பெட்ரோல் செலவு இல்லை'' என்றார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றியவா் ஸ்டாலின்: கி. வீரமணி

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


