
கணினியில் பயன்படுத்தும் இன்புட் டிவைஸ்களில் ஒன்றான மெüஸ்களில் எத்தனையோ புதிய மாடல்கள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் மேஜிக் மெளஸ்.
லேசர் தொழில்நுட்பத்துடன், கம்பியில்லா சுட்டி மென்பொருளாக வந்திருக்கும் இந்த மேஜிக் மெளஸ், பயன்பாட்டாளர்களின் பணியை எளிதாக்குகிறது.
ப்ளூடூத் முறையில் செயல்படும் இந்த மெüஸின் விலை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம்.
ஸ்மார்ட் டேக் ப்ளூடூத் டிராக்கர்
உங்களது சாவி, பர்ஸ், கம்ப்யூட்டர் பை அல்லது வேறு எந்த விலை மதிப்புள்ள பொருளையும், நீங்கள் மறக்காமல், எங்கும் விட்டுவிடாமல் உடன் வைத்திருக்க உதவுகிறது ஸ்மார்ட் டேக் ப்ளூடூத் டிராக்கர்.
சென்ஸôர் தொலைத்தொடர்புடன் இயங்கும் இந்த டேக்கைப் பயன்படுத்த, செல்போனில் ஒரு ப்ரீ ஆப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த ஆப் மூலமாக, உங்களது பொருட்கள் உங்கள் அருகில் இருப்பதை சென்ஸôர் உறுதி செய்யும். ஒரு வேளை நீங்கள் டேக் செய்த பொருள், தொலைத் தொடர்பு எல்லைக்குள் இல்லாவிட்டால், உங்கள் செல்போனில் அலாரம் எழுப்பி, அந்த பொருளைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டும்.
இதில், கார் சாவி, சூட்கேஸ், உங்கள் குழந்தை, வளர்ப்புப் பிராணி என எதை வேண்டும் என்றாலும் டேக் செய்யலாம். மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்கள், அதைக் கழற்றி வைக்கும் இடத்தை மறந்துவிடுவார்கள். கண் பார்வைக் குறைவு என்பதால் அதைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பார்கள். இந்த ஸ்மார்ட் டேக் ப்ளூடூத் டிராக்கரில் மூக்குக் கண்ணாடியை டேக் செய்துவிட்டால், ஒரு நொடிக்குள் மூக்குக் கண்ணாடியைக் கண்டு எடுக்கலாம்.
டிஜிட்டல் தெர்மாமீட்டர்

அறையின் தட்பவெப்பம் முதல், மீன் தொட்டியின் தட்பவெப்பம் வரை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது டிஜிட்டல் தெர்மாமீட்டர்.
இதில் வெப்பநிலையைப் பார்ப்பது எளிதாக இருப்பதால், தற்போது பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது.
லேப்டாப் கூலிங் பேட்

எப்போதும் லேப்-டாப்புடன் வாழ்க்கை நடத்துவோருக்கென்றே உருவாக்கப்பட்டது லேப்டாப் கூலிங் பேட்.
லேப்-டாப்பை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் வெப்பத்தில் இருந்து லேப்-டாப்பையும், தரைப்பகுதியையும் பாதுகாக்க இந்த கூலிங் பேட் பயன்படுகிறது.
எர்கோனோமிக்ஸ் எனப்படும் பயன்படுத்த எளிதான மற்றும் வசதியான வகையில் இந்த கூலிங் பேட் அமைக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம்.
கையடக்க ஸ்கேனர்

வெளியே செல்லும் இடத்தில், உடனடியாக ஓர் ஆவணத்தையோ
அல்லது உங்களது புகைப்படத்தையோ ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் ப்ரவுசிங் சென்டரைத் தேடி அலைய வேண்டாம்.
தற்போது கையடக்க ஸ்கேனர் வந்து விட்டது. விஷனீர் மொபிலிடி கலர் கார்ட்லஸ் ஸ்கேனர் உங்களது அவசியத் தேவையைக் கம்ப்யூட்டரே இல்லாமல் நிறைவேற்றிக் கொடுக்கும் என்பது கூடுதல் செய்தி.
உங்களிடம் ஸ்மார்ட்போன் அல்லது எஸ்டி கார்ட் அல்லது யுஎஸ்பி பிளாஷ் டிரைவ் இருந்தால் போதும், அதனைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்யலாம்.
சார்ஜர் வசதியுள்ள இந்த கையடக்க ஸ்கேனரை, முழுமையாக சார்ஜ்
செய்திருந்தால் 300 பக்கங்கள் வரை ஸ்கேன் செய்ய முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







