தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விவேகானந்தரின் லட்சிய இளைஞன்

உலக வரலாற்றிலேயே ஒரு துறவியை லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அந்தப் பெருமை விவேகானந்தருக்கு மட்டுமே உரித்தானது.

News image
Updated On :14 செப்டம்பர் 2015, 10:52 am

இராம. பரணீதரன்

உலக வரலாற்றிலேயே ஒரு துறவியை லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அந்தப் பெருமை விவேகானந்தருக்கு மட்டுமே உரித்தானது.

பொதுவாக ஆன்மிகத்துக்கும், இளமைக்கும் இடையேயான தூரம் சற்று அதிகம்தான். ஏனெனில் ஆன்மிகம் என்பது முதுமையோடு தொடர்புடைய விஷயம்போல சித்திரிக்கப்பட்டுவிட்டது. மேலும், ஆன்மிகமானது அன்பு, அமைதி, அடக்கத்தைப் போதிக்கும். ஆனால், இளமையோ துள்ளல், வேகம் மிகுந்தது. ஓடும் பாம்பைப் பிடிக்கும் வயது. இப்படி எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரண்டையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்தவர்தான் 

விவேகானந்தர்.

இவர் ஆன்மிகத்தை அன்றாட நடைமுறை வாழ்க்கையோடு சேர்த்து போதித்ததால்தான் இவ்வளவு இளைஞர்கள் இவர் மீதும், இவரின் போதனைகள் மீதும் ஆணித்தரமான நம்பிக்கையை வைத்துள்ளனர். மேலும், இவரின் கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்துவனவாகவும், அவை முற்றிலும் இளைஞர் மற்றும் தேச நலன்குறித்து இருப்பதும் சிறப்புக்குரியது.

""100 இளைஞர்களைத் தாருங்கள்; இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்'' என்று கூறினார் என்றால், எந்த அளவுக்கு இளைஞர்கள் மீது அவர் நம்பிக்கை வைத்திருப்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இப்படி இளைஞர்கள் மீது அளப்பறிய நம்பிக்கை வைத்திருந்த விவேகானந்தரின் இளைஞன்,  ""எஃகை போன்ற தசைகளையும், இரும்பைப் போன்ற நரம்புகளையும், கடலின் அடியாழம் வரை செல்லநேரிடினும், எண்ணிய காரியத்தை கலங்காது முடிக்கும் நெஞ்சுரம் மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும்'' என்கிறார்.

மேலும் அவர் இளைஞர்களை ""சிங்கங்களே, நீங்கள் சிறு நரிகளின் கூச்சலைக் கண்டு அஞ்சாமல் முன்னேறிச் செல்லுங்கள். அப்போதுதான் எண்ணிய காரியத்தில் வெற்றி பெறமுடியும்'' எனக் கூறுகிறார். ""இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் வெற்றி கொள்ளக் கூடிய ஆற்றல் உங்களுக்குள்ளே ஒளிந்துள்ளது'' என இளைஞர்களுக்கு எழுச்சியேற்றுகிறார்.

""இளைஞர்களே, நீங்கள் பக்தி, பிரார்த்தனை மூலம் இறைவனைச் சென்றடைந்து முக்தியடைவதைக் காட்டிலும், கால்பந்தாட்டத்தின் மூலம்கூட பரமாத்மாவை அடைந்துவிடலாம்'' என்கிறார். அதாவது, செய்யும் செயல் எதுவோ அதில் முழு மனதோடு, மன ஒருமைப்பாட்டோடு ஈடுபட்டால், அதன்மூலம் இறைவனையே அடையலாம் என ஒரு புதிய பாதையைக் காட்டினார்.

அந்தப் பாதையைத்தான் இன்றைய இளைஞர்கள் கைக்கொண்டு கல்வி, கலை, அரசியல், விஞ்ஞானம் எனப் பல்வேறு துறைகளில் கொடிகட்டிப் பறந்து, தனக்கும், தான் பிறந்த பொன்னாட்டுக்கும் புகழை உண்டாக்கித் தருகிறார்கள்.

இன்றைய இளைஞர்களை நாம் சாதாரணமாகக் கருத முடியாது. எடுத்த காரியத்தை முடிக்க வேண்டுமென்ற வேகமும், பல்துறை அறிவும், சீரான சிந்தனையாற்றலும் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள்.

இனி, இளைஞர்களின் கையில் இனிய பாரதம் உருவாகி, சுவாமியின் கனவு விரைவில் பலிக்க உள்ளது மகிழ்ச்சியான விஷயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.