தொட்டதுக்கெல்லாம் கொலை பண்ற அளவுக்கு பவர் மின்சாரத்துக்கு மட்டும் தான் இருக்கு.
- நித்திலன்
அவளுக்கு பூப்போன்ற கண்ணீர், அடிக்கடி கோர்த்துக் கொள்கிறாள்..
- மீனம்மா
காய்ந்த மரத்தின் கொப்புகள்... அற்றகுளத்து மீனின் முள்ளெலும்புகள்.
- ராம் சின்னப்பயல்
அந்திக்கருக்கலில் இந்தத் திசை தவறிய பெண் பறவை... தன் கூட்டுக்காய் அலைமோதிக் கரைகிறது. எனக்கதன் கூடும் தெரியும், குஞ்சும் தெரியும், இருந்தும் - எனக்கதன் பாஷை தெரியவில்லை.
-கலாப்ரியா
போதிமரத்தை உருவாக்குவதைக் காட்டிலும் தற்போதைய சுற்றுச்சூழலுக்கு சிறந்தது... "போதிய' மரங்களை உருவாக்குவது.
- ராணி சசிகுமார்
நாம் வலப் பக்கம் போகலாம் என முயற்சிக்கும்போது, இடப் பக்கமாய் இழுத்துக் கொண்டு ஓடுவதற்குப் பெயர்தான் வாழ்க்கை.
- காவேரி
வலைத்தளத்திலிருந்து...
குளிர் கண்ணாடி போட்டிருந்த பூனைக்குட்டி.
""ஏன் குளிர் கண்ணாடி
போட்டிருக்கிறாய்?''
என்று பூனைக்குட்டியிடம்
நான் கேட்கவேயில்லை
ஆயிரம் ரகசியம் அதற்கு இருக்கும்.
அதுவேதான் பீத்திக்கொண்டது...
""பாரேன் பாரேன் ரேபான் டுவெண்டி
தெளசண்ட் ருபீஸ்''
ஒரு பிரபல இளம் நடிகரைப் போல
என் மேசையில் புத்தகங்களை
அலேக்காக தாண்டி
இருகால்களில் நின்று
முகத்தை மட்டும்
திருப்பிக் காட்டியது...
கொஞ்சம் பொறாமையில்,
""எங்கே கிடைத்தது இருபதாயிரம்?''
என மெதுவாய்த்தான் கேட்டேன்.
""உன் விசாரணையை
உன் புருஷனிடம் வைத்துக் கொள்''
என்றது நாக்கை நீட்டி அழகுகாட்டி.
எதற்கும் பாராட்டிக் கைதட்டி
வைத்தேன்,
எந்தப் புற்றில்
எந்தக் குளிர் கண்ணாடியோ?
http://innapira.blogspot.in/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பழ. கருப்பையா பிரசாரம்

கள் விற்பனையை திறந்து, டாஸ்மாக்கை மூடுவோம்: சீமான்

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு காங்கிரஸ் விமா்சனம்

திருமயம் அருகே இளைஞா் கொலை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


