நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 66

புரொபஸர், கணேஷ் மற்றும் ஆண்டாள் எனும் திருநங்கை உணவகத்தில் காப்பி அருந்தியபடி அரட்டையில் மூழ்குகிறார்கள்.

News image
Updated On :20 டிசம்பர் 2016, 7:05 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ் மற்றும் ஆண்டாள் எனும் திருநங்கை உணவகத்தில் காப்பி அருந்தியபடி அரட்டையில் மூழ்குகிறார்கள்.
புரொபஸர் ஆண்டாளை நோக்கி: நீ எப்படி இவ்வளவு புத்திசாலியா இருக்கே? I am impressed. Beauty and brain rarely go together.
ஜூலி: நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கிறேன்
புரொபஸர்: ஏன்? உனக்கு என்ன இப்போ?
ஜூலி: ஜொள்ளு என் தலையில விழுதே. எனக்கு ஜல்ப் புடிச்சுக்கும்
ஆண்டாள்: ஹா... ஹா... ஜூலி you naughty I am impressed
புரொபஸர்: ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கலாய்க்கிறீங்களா?
ஆண்டாள்: இல்ல... இல்ல..  I dont mind you flirting. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?
புரொபஸர் (சற்றே கோபமாக): என்ன?
ஆண்டாள்: மத்த பெண்கள் கிட்ட வழிய தயங்கிறவங்க கூட என்கிட்ட ரொம்ப சுதந்திரமா இருக்காங்க. They dont think twice  
கணேஷ்: சார் அதென்ன think twice  
புரொபஸர் (கோபமாக): நான் இனிமேல் ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன். என்ன வேணும்னாலும்  இவள் கிட்டயே கேட்டுக்கோ.
ஆண்டாள்: ஓகே நானே சொல்றேன். ஒரு விசயத்தை பண்ணனுமுன்னு நெனக்கிறோம். அப்புறம் தயக்கம் வருது. We hesitate அப்படி hesitate  பண்ணாம நினைச்சதை உடனே பண்றது தான் not thinking twice. 
கணேஷ்: சார் hesitate என்ன? ஏன் go togetherன்னு சொன்னீங்க? அப்படீன்னா சேர்ந்து போறது தானே?
புரொபஸர் (மாறாத கோபத்துடன்): இதோ இந்த நாய் கிட்ட கேளு
ஜூலி: நான் இந்த ஆட்டத்துக்கு வரல. I am not taking the bait (ஜூலி ஓர் ஆங்கில நாளிதழை மேஜையில் இருந்து கவ்வி எடுத்து தரையில் வைத்து திறந்து வாசிக்க தொடங்குகிறது. பிறகு சட்டென கணேஷை நிமிர்ந்து பார்த்து) நீ என்ன மீனிங்குன்னு கேட்பே. அதுக்கு முன்னாடி before you jump the gun take the bait  என்றால்?
கணேஷ்: jump the gun என்றால்?
ஜூலி: இதோ இது தான். நான் ஒரு விசயத்தை சொல்லி முடிக்கிறதுக்குள்ளாடி இன்னொரு கேள்வி கேட்கிறியே? இப்போ you jumped the gun.
கணேஷ்: சாரி... இனிமே நான் வந்து...
ஜூலி: சாரியெல்லாம் வேணாம். I dont like to see you cut a sorry figure. சிலர் நம்மை மாட்ட வைக்கிறதுக்காகவே ஒரு கேள்வி கேட்பாங்க. தெரியாத்தனமா பதில் சொல்ல புறப்பட்டால் மாட்டிக்கிடுவோம். அப்போ you take the bait.
கணேஷ்: அப்படீன்னா cut the figureன்னு எதோ சொன்னயே?
ஜூலி: என்னை பேப்பர் படிக்க விடு
ஆண்டாள்: சரி. நான் சொல்றேன் கணேஷ். இன்ற் Cut a sorry figureuன்னா அவமானப்பட்டு எல்லாருடைய கேலிக்கும் இடமாவது. Go together என்பதை ஒன்றாய் சேர்வது எனும் பொருளில் பயன்படுத்தலாம். Liquor and paleo diet dont go together. அதாவது பேலியா டயட்டில் மது அருந்தக் கூடாது. 
ஆண்டாள் புரொபஸரைப் பார்த்து: I am sorry. I didnt mean what I said.
புரொபஸர் முகம் மலர்ந்து அவள் தோளைத் தட்டுகிறார்: No issues. நான் உன்னை என்னோட மாணவியா நினைச்சு தான் பேசினேன்
ஆண்டாள்: ஆனால் உங்க மாணவியை இது போல் சுலபமா தோளைத் தட்டி பேசுவீங்களா? பொதுவாக எல்லாரும் என்கிட்ட அதிக சுதந்திரத்தோட இருக்காங்கன்னு இதைத் தான் மீன் பண்ணுனேன்.
ஜூலி பேப்பரில் பார்த்து படிக்கிறது: Virat Kohli flirts with.
புரொபஸர் (அதிர்ச்சியாக): என்னது கோலியை பத்தியும் இப்படிச் சொல்றாங்களா?
ஜூலி: flirts with balls outside the off stump. அதாவது வைடாக போற பந்தை தேவையில்லாம அடிக்கப் பார்த்து அவுட் ஆகிறாருன்னு சொல்றாங்க. 
புரொபஸர்: Yes. ஆபத்துடன் விளையாடுவது எனும் பொருளிலும் flirtஐப் பயன்படுத்தலாம்.
கணேஷ்: அப்படீன்னா flirthடோட முதல் அர்த்தம்?
ஆண்டாள்: ஜொள்ளு விடறது. 
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.