புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாங்க... இங்கிலீஷ் பேசலாம்...: 24

புரொபஸரும் கணேஷும் சைதாப்பேட்டை சாலையில் பைக்கில் போகிறார்கள். வெயில் கொளுத்துகிறது.

News image
Updated On :23 பிப்ரவரி 2016, 11:53 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸரும் கணேஷும் சைதாப்பேட்டை சாலையில் பைக்கில் போகிறார்கள். வெயில் கொளுத்துகிறது.

புரொபஸர்: ஏன்டா இவ்வளவு ஸ்லோவாப் போறே?

கணேஷ்: சார்... நீங்க வயசானவரு, பயப்படுவீங்கன்னு தான்.

புரொபஸர்: நானா? உன் வயசில நான் புல்லட் எடுத்தா ரோட்டில பறப்பேன். Let her rip, man.

.

கணேஷ்: ripன்னா?

புரொபஸர்: Rip என்கிற சொல்லுக்கு கிழிக்கிறதுன்னு அடிப்படையான அர்த்தம். ஆனால் let rip ன்னா பைக் இல்ல காரை படுவேகமா ஓட்டுறது.

கணேஷ்: சார் என் பைக் உயிரில்லாத எந்திரம் தானே? அதை எப்பிடி நீங்க her ன்னு சொல்லலாம்

புரொபஸர்: நல்ல கேள்வி. உயிரில்லாத பொருட்களை it ன்னு தான் சொல்லணும். ஆனால் வாகனத்தை ஒரு பெண்ணாகக் கற்பனை பண்ணி her ன்னு சொல்றாங்க. சரி her க்கும் she க்கும் என்ன வித்தியாசம்?

கணேஷ்: she ன்னா ஒரு பொண்ணு சார். அதுக்கு மேலே தெரியல.

புரொபஸர்: I love her. She loves me.  ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் ரெண்டாவது வாக்கியத்தில she பயன்படுத்துறோம்?

கணேஷ்: சார்... நம்ம முன்னாடி ஸ்கூட்டியில ஒரு பொண்ணு ரொம்ப நேரமா வழியை மறைச்சிக்கிட்டு போகுது. ஓவர் டேக் பண்ணட்டுமா?

புரொபஸர்: ஏன் அவ முகத்தைப் பார்க்கணுமா? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு.

கணேஷ்: தமிழ்ல சொல்லிப் பார்க்கட்டுமா சார்?

புரொபஸர்: நல்ல ஐடியா. சரி

கணேஷ்: நான் அவளைக் காதலிக்கிறேன். ம்ம்ம்... அடுத்தது அவள் என்னைக் காதலிக்கிறாள். சரியா?

புரொபஸர்: சரி

கணேஷ்: சார் நீங்க கத்துக்குடுத்த இங்கிலீஷ்லயே இது தான் ரொம்ப ஈஸியா இருக்கு

புரொபஸர்: இருக்கும்... இருக்கும். தமிழ்ல இந்த ரெண்டு வாக்கியங்களையும் சொல்லிப் பார். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? "அவளை'க்கும் அவளுக்கும் என்ன வித்தியாசம்?

கணேஷ்: அவளைன்னா என் கண்ணோட்டத்தில சொல்றேன். அவள்னா அவள் என்னை எப்படி பார்க்குறான்னு சொல்றேன். ரைட்டா?

புரொபஸர்: இல்ல. நான் வாக்கிய அமைப்பில அந்த சொற்கள் என்ன நோக்கம் கொண்டிருக்குன்னு கேட்டேன். Sheன்னா அச்சொல் அந்த வாக்கியத்தோட தலைமை சொல் ஆக இருக்குது. இங்கிலீஷ்ல subject. You drive the bike.  இதில வண்டி யாரால ஓடுது?

கணேஷ்: என்னால?

புரொபஸர்: ஒரு வாக்கியத்தில யாரால ஒரு செயல் நடக்குதோ அது அல்லது அவர் தான் subject. புரியுதா?

கணேஷ்: புரியுது

புரொபஸர்: முதல்ல சொன்ன வாக்கியத்தில அந்த பெண்ணால தான் காதல் எனும் செயல் நடக்குது. She loves you. இப்போ இங்க உனக்கு எந்த ரோலும் இல்ல. நீ வெறுமனே அந்தச் செயலினால் பாதிக்கப்பட்டிருக்கே. புரியுதா?

கணேஷ்: அதெப்பிடி சார்? நானும் லவ்வில சம்பந்தப்பட்டிருக்கேனே? என்னைப் புடிச்சு தானே லவ் பண்றா? அது மாதிரி அவ லவ் பண்ணும் போது நான் சந்தோசமா உணர்வேனே?

புரொபஸர்: இந்த கதையெல்லாம் உன் மனசுக்குள்ள இருக்கு. ஆனால் அந்த வாக்கியத்தில நீ என்ன உணர்கிறாய், செய்கிறாய் என்பதெல்லாம் வருதா?

கணேஷ்: இல்ல சார்

புரொபஸர்: நீ வெறும் டம்மி இங்கே. அதனால நீ ஒரு object.

கணேஷ்: objectன்னா பொருள் தானே சார்?

புரொபஸர்: ஆமா. ஒரு விளையாட்டுப் பொருள். பொம்மை. ஒரு வாக்கியத்தில் object எந்த சக்தியும் இல்லாத பொம்மை. I drink coffee. இதில coffee தான் object. I  தான் subject. நான் காப்பியை குடிக்கும் போது காப்பியால அதைத் தடுக்க முடியுமா?

கணேஷ்: இல்ல சார். இப்போ புரியுது

புரொபஸர்: வெரி குட். I, he, she, it, they இதெல்லாம் pronouns. அதாவது பெயர்ச்சொல்லுக்குப் பதிலாக வருகிற சொற்கள். இந்த I - object  இடத்துக்கு வந்தா me ஆகும். He  வந்தால் him ஆகும். she வந்தால் her ஆகும். they வந்தால் them. it  மட்டும் அப்படியே இருக்கும். You love her அந்த her யாரு?

கணேஷ்: She யே தான் சார்.

புரொபஸர்: குட்

கணேஷ்: சார் எனக்கு இந்த subject, object  இல் இன்னும் கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு.

புரொபஸர்: கேளு சொல்றேன்.

கணேஷ்: அடச்சே.

புரொபஸர்: என்ன?

கணேஷ்: அந்த ஸ்கூட்டி பொண்ணு நம்மை கடந்து எங்கயோ போயிட்டா?

புரொபஸர்: நோ பிராப்ளம். நான் அவள் மூஞ்சியைப் பார்த்திட்டேன். நல்லா இல்ல.

கணேஷ்: சார்ர்ர்ர்ர்....

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.