நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்: 43

கணேஷ் புரொபஸரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது இருவரும் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் பின்னால் ஓடி வரும் நாய் ஜூலி அவர்களுடன் சேர்ந்து கொள்கிறது.

News image
Updated On :5 ஜூலை 2016, 11:52 am

ஆர்.அபி​லாஷ்

கணேஷ் புரொபஸரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது இருவரும் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் பின்னால் ஓடி வரும் நாய் ஜூலி அவர்களுடன் சேர்ந்து கொள்கிறது.

கணேஷ்: சார் நீங்க கொஞ்ச முன்னாடி Ratherன்னு ஒரு வார்த்தை பயன்படுத்தினீங்களே, அதுக்கு என்ன மீனிங்?

புரொபஸர்: அதற்கு பதிலான்னு அர்த்தம். நான் வீட்டுக்கு போனதும் என் வீட்டுக்காரி டீ கொண்டு வரட்டுமா இல்ல காபியான்னு கேட்பாள். நான் சொல்வேன் I would rather have coffee. அப்படீன்னா டீயே போதும்னு அர்த்தம்.

ஜூலி: ஆனால் போன வாரம் மாமி உங்க கிட்ட காபியா டீயான்னு கேட்டப்போ நீங்க please rather give me poison சொன்னீங்களே?

புரொபஸர்: அது அப்போ நான் ரொம்ப கோபமா இருந்தேன். அதை ஏன் இப்போ நினைவுபடுத்துற அசடே?

ஜூலி கணேஷிடம்: hey look at that chick

ஜூலி காட்டுகிற திசையில் இளஞ்சிவப்பு டாப்ஸýம் வெள்ளை முக்கால் பேண்டும் அணிந்த ஓர் இளம் பெண் ஆக்டிவா ஸ்கூட்டரில் இருக்கிறாள்.

கணேஷ்: சார் ஏன் பொண்ணுங்களை chickன்னு சொல்றாங்க?

புரொபஸர்: ரொம்ப செக்ஸியான பொண்ணுன்னு பொருள். அது ஒரு கொச்சை வழக்கு. அதை மறந்திரு.

ஜூலி: she is rather hot, isnt it?

புரொபஸர்: ஜூலி ஷட் அப். ரெண்டு பேரும் இந்த பக்கம் திரும்புங்க.

அப்போது அந்த இளம்பெண்

ஜூலியை நோக்கி கையசைத்து ஹாய் என்கிறாள். ஜூலி வால் ஆட்டுகிறது. அந்த பெண் வண்டியில் இருந்து இறங்கி வந்து ஜூலியைத் தடவிக் கொடுக்கிறாள்.

இளம்பெண்: Hi Is this you dog Very cute. He is lovely, cuddly.

ஜூலி குஷியாகி அவளது பாதத்தை நக்கிக் கொடுத்து, வாலை குழைத்து, சுற்றி வருகிறது.

கணேஷ் புரொபஸரிடம் ரகசியமாய்: சார் cuddlyன்னா என்ன?

புரொபஸர்: அழகா க்யூட்டா ஸ்வீட்டா கட்டி அணைக்கிறதுக்கு வாகா இருக்கிறது தான் cuddly

கணேஷ்: ஆஹா

புரொபஸர்: அவள் ஜுலியைத் தானே சொன்னா?

கணேஷ்: யாரை சொன்னா என்ன சார்?

இளம் பெண்: Hi guys

கணேஷ்: ஹை என் பெயர் கணேஷ்

இளம் பெண் அவனுக்கு கைகொடுக்கிறாள்: Glad to meet you

புரொபஸர்: I am not a guy. I am a professor of English

இளம் பெண்: ஓ! சாரி சார். I am Mariam நான் ஒரு HR executive. Nice meeting you.

அப்போது ஜுலியும் எழுந்து இரண்டு கால்களில் நின்று மரியமுக்கு கைகொடுக்கிறது. மரியம் மகிழ்ந்து அதை கட்டி அணைக்கிறாள்.

ஜூலி: You are rather cuddly.

மரியம் ஆச்சரியத்தில் உறைகிறாள். பிறகு சிரிக்கிறாள்.

கணேஷ்: உன்னை விட அவள் அதிக cuddlyன்னு தானே சொன்னே இப்போ?

ஜுலி: இல்ல ஐ மீன் She is very cuddly.. மிக அதிகமாய் என்கிற அர்த்தத்திலும் rather  பயன்படுத்தலாம்.

It is rather hotன்னு சொல்லும் போது ரொம்ப வெக்கையாக இருக்குதுன்னு அர்த்தம்.

மரியம்: ஹெய் ஞ்ன்ஹ்ள் ஜ்ஹண்ற்... ஜ்ஹண்ற் இந்த நாய் இப்போ பேசிச்சு தானே?

கணேஷ்: யெஸ்

மரியம்: வாவ் நான் இப்போ தான் முதன்முதலா பேசுற நாயை பார்க்கிறேன். I have to pinch myself.

கணேஷ்: அப்படீன்னா?

ஜூலி: ஒரு அழகான சிறப்பான அதிசயம் நடக்கும் போது அதை புரிஞ்சிக்கிறதுக்கு சில நொடிகள் ஆகுமே, அது தான் pinching oneself. அதாவது இது கனவா நனவான்னு நம்மையே நாமே கிள்ளிப் பார்க்கிறது.

மரியம் ஜூலியின் காதைச் சொறிந்து விட அது சுகத்தில் முனகுகிறது.

கணேஷ் புரொபஸர் காதருகே சென்று: சார் guysன்னு சொன்னா உங்களுக்கு ஏன் பிடிக்கல?

புரொபஸர்: அது கொச்சையான பதம். பசங்களான்னு சொல்ற மாதிரி இங்கிலீஷ்ல guys. ஆண்களையும் பெண்களையும் சேர்த்து இப்படி பொதுவா அழைக்கிறாங்க. ரொம்ப ஜாலியான நேரங்களில் மரியாதை பார்க்காம சொல்றது.

மரியம்: சாரி... நான் ஒரு flowல அப்பிடி உங்களை அழைச்சிட்டேன்.

புரொபஸர்: இட்ஸ் கே. இந்த guy  என்கிற சொல்லின் பின்னால் ஒரு முக்கியமான வரலாறு இருக்கு தெரியுமா?

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.