விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பல்கலைகழக மானியக்குழுவின் நிதி உதவியுடன் கூடிய, தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தயாரிப்பு பட்டயப் படிப்பு உள்ளது. இது ஓர் ஆண்டு படிப்பாகும். இதில் படிப்பவர்களுக்கு மாதம் தோறும் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் 100சதம் வேலைவாய்ப்பினைத் தரும் படிப்பாகவும் உள்ளது.
இது குறித்து அக்கல்லூரி தாளாளர் ஏ.பி.செல்வராஜனிடம் கேட்டபோது:
""விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிப்பு தொழிலே பிரதானமாக உள்ளது. இந்தத் தொழிலைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் கல்லூரி வேதியியல்துறையும், அலுவலக மேலாண்மைத்துறையும் இணைந்து மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் ஒப்புதலோடு, தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிப்பு சான்றிதழ் படிப்பினை 2000-இல் தொடங்கினோம். இதை விரிவுபடுத்தும் நோக்கத்தில் பட்டாசு ஆலை ஃபோர்மேன்களுக்கு,பட்டாசு பாதுகாப்புப் பயிற்சியை ஒரு மாத சான்றிதழ் படிப்பாக 2003-இல் வழங்கினோம். இந்தப் பயிற்சியின் போது, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, இ.எஸ்.ஐ.மருத்துவமனை துறை, வருங்கால வைப்புநிதித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பயிற்சி அளித்துவந்தனர். மேலும் எங்கள் கல்லூரி வேதியியல்துறையினரும் பயிற்சி அளித்து வந்தனர்.
பின்னர் 2012இல் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சியை வழங்க வேண்டும் என தமிழக அரசு தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறைக்கு உத்திரவிட்டது. அப்போது பயிற்சி அளிக்க அதிகாரிகள் எங்கள் கல்லூரியைச் தேர்வு செய்து, பயிற்சி அளித்து வந்தனர். இதில் 20 தொகுதி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த மாவட்டத்தில் உள்ள இத் தொழிலை மேம்படுத்த வேண்டும் எனவும் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தயாரிப்பு குறித்து பலரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும், இது குறித்து பட்டயப்படிப்பு நடத்த அனுமதியும், நிதியும் வேண்டும் என பல்கலைக்கழக மானியநிதிக்குழுவிற்கு கடிதம் எழுதினோம். எங்கள் கடித்ததை ஏற்று பல்கலைக்கழக மானியநிதிக்குழு ஓர் ஆண்டு பட்டயப்படிப்புக்கு ஒப்புதல் வழங்கி நிதியும் ஒதுக்கீடு செய்தது.
தொடந்து 2015-2016 இல் 33 பேர் இதில் சேர்ந்து படித்து தேர்வு எழுதிவிட்டனர்.
தற்போது 2016-2017 கல்வியாண்டிற்கு சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஓர் ஆண்டு பட்டயப் படிப்பில் முதல் பருவத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசில் என்னென்ன வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்தின் தரம் அறிதல், அவற்றின் தன்மைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பேச்சுத்திறன், மொழித்திறன், வாழ்க்கைக்குத் தேவையான சிந்தனைகள் குறித்தும் பயிற்சி அளிக்கிறோம். தொழிற்சாலைக்கு நேரடியாகச் சென்று 30 நாள் பயிற்சி பெற வேண்டும்.
பருவம் -2இல் வேதியியல் பொருள்கள் எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இ.எஸ்.ஐ. வருங்கால வைப்பு நிதி குறித்தும், முடிவடைந்த பட்டாசின் தர ஆய்வு, மருந்தில் கலப்படம் உள்ளதைக் கண்டுபிடித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த ஓர் ஆண்டு பட்டயப்படிப்பு இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. இந்தப் படிப்பில் படித்தால் சொந்தமாக தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் செய்யலாம். மேலும் பட்டாசு ஆலைகளில் கண்காணிப்பாளர் மற்றும் போர்மேன் வேலைக்குச் செல்லலாம். தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் சான்றிதழ் பெற்று பட்டாசு தயாரித்து வருகின்றனர். இந்த பட்டயப் படிப்பு படித்தால் 100 சதம் வேலைவாய்ப்பு உள்ளது'' என்றார் ஏ.பி.செல்வராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றியவா் ஸ்டாலின்: கி. வீரமணி

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


