வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 46
புரொபஸரும் கணேஷும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்கிறார்கள். வி.ஐ.பி. வருகையை முன்னிட்டு வாகனங்கள் நீண்ட நேரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு ஒருவர் டிபன் விற்கிறார்.


புரொபஸரும் கணேஷும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்கிறார்கள். வி.ஐ.பி. வருகையை முன்னிட்டு வாகனங்கள் நீண்ட நேரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு ஒருவர் டிபன் விற்கிறார்.
டிபன்காரர்: சார் தோசை, இட்லி, பூரி என்ன வேணும் சொல்லுங்க, சூடா எடுத்து வரேன்.
புரொபஸர்: நடுரோட்லையா?
டிபன்காரர்: இந்த டைம்ல டெய்லி இருபது நிமிசம் டிராபிக் ஜாம் ஆகும். இந்த வழியா வர்றவங்க, அந்த கேப்ல டிபன் பண்ணி முடிச்சிருவாங்க. நானே கரெக்டா பத்து இருபதுக்கு இங்க வந்திருவேன். ரெகுலர் கஸ்டமர்ஸ் ஐம்பதுக்கு மேலே இருக்காங்க. எவ்வளவு வேகமா வந்தாலும் இங்க வெயிட் பண்ணித் தான் ஆகணும்.
கணேஷ்: செம தத்துவம் இல்ல சார். கண்ணதாசன், "ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா'ன்னு சொன்ன மாதிரி.
புரொபஸர்: இதுக்கு இங்கிலீஷ்ல ஒரு idiom இருக்கு. Hurry up and wait. அதாவது அவசரமா கிளம்பி வந்து ஒரு இடத்தில் நீண்ட நேரமா காத்திருக்கிறது. (டிபன்காரரை பார்த்து) சரி, எங்களுக்கு ஆளுக்கு ரெண்டு இட்லி.
(டிபன்காரர் கிளம்புகிறார்)
கணேஷ்: சார் இவர் கிளம்பினதை நாம் ப்ங்ஹஸ்ங்ன்னு சொல்றோம் இல்லையா?
புரொபஸர்: ஆமா He left the place
கணேஷ்: departன்னு சொல்லக் கூடாதா?
புரொபஸர்: இல்ல depart என்பது இலக்கியத்தனமான வார்த்தை. அதே போல ஓர் இடத்துக்குப் போவதற்காக கிளம்புவது தான் depart. He departed for Delhi. அதாவது பயணத்தின் துவக்கம். வெறுமனே ஓர் இடத்தை விட்டு நீங்குவதற்கு ப்ங்ஹஸ்ங் தான் சரி.
ஜூலி அப்போது வாயில் ஒரு வடையைத் தூக்கிக் கொண்டு வருகிறது.
புரொபஸர்: ஜூலி, யார் கொடுத்தாங்க?
ஜூலி: சுட்டுட்டேன்
புரொபஸர்: You are hopeless
கணேஷ்: சார் hopelessன்னா அவநம்பிக்கையா இருக்கிறது தானே?
ஜூலி: உதவாக்கரைன்னும் அர்த்தம் உண்டு. Incompetent, inferior, useless...
புரொபஸர்: சரி நான் சொல்ல வந்ததை முடிச்சிடறேன். இந்த டிபார்ட் என்பது லத்தீனில் இருந்து வந்த சொல். லத்தீனில் டிஸ்பர்ச்சர் எனும் சொல்லுக்கு இரண்டாகப்
பிரிவதுன்னு அர்த்தம். அதுக்கு பிறகு இப்போதுள்ள அர்த்தம் வந்தது. De+partன்னு பிரிச்சு பார்த்தால் part எனும் சொல் வருது. Part என்றால் ரெண்டாக உடைவது தான். இப்போ கூட part ways எனும் இடியம் ஆங்கிலத்தில் உண்டு. They parted ways என்றால் இரண்டு பேர் வாழ்க்கையில் வேறுபட்ட விசயங்களைச் செய்ய பிரிந்து செல்வது. அவர்கள் திரும்ப சேராமலே இருக்கலாம்.
கணேஷ்: கலைஞர் - எம்.ஜி.ஆர் மாதிரியா சார்?
புரொபஸர்: Yes. Departக்கு மரணமடைதல் என்கிற அர்த்தமும் உண்டு. MGR departed on 1987.
ஜூலி: வேலையை விடறதும் டிபார்ட் தான் தெரியுமா? Raguram Rajan departed his post as Reserve Bank Governor. சார் வடையில ஏன் ஓட்டை இருக்குன்னு தெரியுமா?
புரொபஸர்: Shut up
டிபன்காரர் கொண்டு வருகிற இட்லியை இருவரும் சுவைக்கிறார்கள்.
கணேஷ்: பிரமாதமா இருக்கு சார். இந்த இட்லிக்காகவே இந்த டைம்ல தினமும் வந்திடலாம் போல இருக்கு.
பக்கத்தில் பைக்கில் அமர்ந்து ஒருவர் பொரித்த சிக்கன் காலை கடித்துக் கொண்டிருக்கிறார். ஜூலி அவர் அருகில் போய் அமர்கிறது. அவர் எலும்பை கொடுக்க அது வாங்கிக் கொள்கிறது.
பைக்காரர் எழுந்து நெட்டி முறிக்கிறார்: அப்பா உட்கார்ர இடத்தில என்னா வலி?
ஜூலி: இதுக்கு இங்கிலீஷ்ல ஒரு தனி சொல் இருக்கு தெரியுமா?
பைக்காரர்: pain in the ass
ஜூலி: இல்ல. அதுக்கு மீனிங் நம்மை தொந்தரவு செய்யும் ஓர் ஆள் அல்லது ஒரு விசயம். The murder at railway station was a pain in the ass for the TN police. ஆனா பின்பக்கம் வலிக்கிறதுக்கு பேர் proctalgia.
பைக்காரர்: ட்ங்ஹ் நாயா பேசிச்சு? இல்ல நான் கனவு கண்டேனா?
ஜூலி புரொபஸரிடம் ஓடுகிறது. சாலையில் வரிசையாக லாரிகளில் தலைவரின் படம் கொண்ட ஆளுயர பதாகைகள் செல்கின்றன. லாரிகள் கடந்ததும் பச்சை விளக்கு எரிகிறது. வாகனங்கள் ஹாரன் ஒலியுடன் நகரத் துவங்குகின்றன.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...