நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 40

ரொபஸர், கணேஷ் மற்றும் புரொபஸரின் கல்லூரிக் கால நண்பர் பக்ஷிராஜன் சேர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

News image
Updated On :13 ஜூன் 2016, 3:30 pm

ஆர்.அபி​லாஷ்

ரொபஸர், கணேஷ் மற்றும் புரொபஸரின் கல்லூரிக் கால நண்பர் பக்ஷிராஜன் சேர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பக்ஷிராஜன் கணேஷிடம்: உங்க வாத்தியார் ரிப்போர்ட்டட் ஸ்பீச்சுக்கான ஒரு செமஸ்டர் பாடத்தையும் எடுத்து முடிச்சிட்டார். இனி நம்ம பிரச்னைக்கு வருவோமா?

புரொபஸர்: சரி, நீ அந்த வாக்கியத்தை திரும்ப படிச்சு காட்டு.

பக்ஷிராஜன் ஆங்கில பத்திரிகை ஒன்றைத் திறந்து கவனமாய் ஒரு பக்கத்தை எடுத்து மடித்து அதை தன் கண்களுக்கு பக்கத்தில் கொண்டு போய் வாசிக்கிறார்: The opposition leader claimed that he will become CM if his party comes to power.

புரொபஸர்: That sounds fine for me.

பக்ஷிராஜன்: That sounds like a bundle of nonsense for me

கணேஷ்: ரெண்டு பேரும் பொறுங்க. அதென்ன சவுண்ட சவுண்டுங்கிறீங்க. சவுண்டுன்னா ஒலி தானே?

புரொபஸர்: நீ சொல்றது சரி தான். நர்ன்ய்க் - ஐ வினைச்சொல்லாகப் பயன்படுத்தும் போது அதோட மீனிங் வேற. உதாரணமா, காலைல என் மனைவி எனக்கு காபி கொடுக்கும் போது அடித்தொண்டையில கடுமையான குரலில் குடிங்க என்றால் that sounds menacing, threatening. அடுத்து என்னைத் திட்டப் போறா என்று அர்த்தம். Sound  என்றால் ஒரு விசயத்தை ஒருவர் சொல்லும் போது நமக்கு அது எதுவாகப் படுகிறது என்று அர்த்தம். நீ தமாஷாய் எதையோ என்னிடம் சொல்கிறாய். நான் சிரிக்கிறேன். ஏனென்றால் That sounded funny for me. எனக்கு ஜோக்காய் படுவது சிலருக்கு ஆபாசமாய், சிலருக்கு பண்பற்றதாகத் தோன்றும். So your joke sounds rude for others. நாளைக்கு ரிசல்ட். இன்னிக்கு உங்கிட்ட ஜெயிச்சிருவியா என்று கேட்கிறேன். கண்டிப்பா சார் என்று சொன்னால் ou sound hopefull.

பக்ஷிராஜன்: Soundக்கு emit அப்படீங்கிற அர்த்தமும் உண்டு. அதாவது my alarm sounded by 6 am. காலையில் ஆறு மணிக்கு என் அலாரம் அடித்தது.

கணேஷ்: அலாரம் எப்படி சார் அடிக்கும்? அதுக்கு கை இருக்கா?

பக்ஷிராஜன்: சரி ஒலி எழுப்பியது. அதே போன்று the ambulance sounded siren as it meandered through the heavy traffic.

கணேஷ்: Meanderன்னா என்ன?

பக்ஷிராஜன்: பாம்பு மாதிரி நெளிஞ்சு வளைஞ்சு போறது.

கணேஷ்: ஆம்புலன்ஸ் எப்படி சார் பாம்பு மாதிரி நெளியும் ? அது நேரே இல்ல போகும்?

பக்ஷிராஜன் (புரொபஸரிடம்): ஸ்ஸ்ஸ் முடியல. தலை வலிக்குது. இவனை நீயே ஹேண்டில் பண்ணு

புரொபஸர்: கணேஷ் ஒரு ஹெவி டிராபிக் இருக்கிற ரோட்டில வாகனங்கள் கிடைக்கிற இண்டு இடுக்கு வழியா எல்லாம் நுழைஞ்சு நுழைஞ்சு போறதை நீ பார்த்ததில்ல?

கணேஷ்: ஆமா சார்.

புரொபஸர்: அதை நீ ஒரு உயரமான இடத்தில் நின்று டாப் ஆங்கிளில் பார்த்தால் வாகனங்கள் பாம்பு மாதிரி நெளிஞ்சு ஓடுறாப்ல தெரியும்

கணேஷ்: ஆமா சார். கரெக்ட்.

புரொபஸர்: Zigzag motionன்னு சொல்வாங்க. அதே போன்று The river snaked through a jungleன்னும் சொல்லலாம். அதாவது ஆறு ஒரு பாம்பாக காடு வழி நெளிந்து வளைந்து ஓடியது. It is a metaphor.  அதாவது உருவகம்.

கணேஷ்: இப்போ புரியுது சார். எங்க தமிழாசிரியர் சொல்வார். கொடியைப் போன்ற இடைன்னா உவமை, கொடி இடைன்னா உருவகம்.

புரொபஸர்: ஆமா இந்த உவமையை தான் ஆங்கிலத்தில் simileன்னு சொல்வோம். உச்சரிப்பு சிமிலி.

பக்ஷிராஜன்: எந்த பொண்ணுக்காவது கொடி மாதிரி அரை அங்குலத்துக்கு இடை இருக்க முடியுமா? அதை ஒத்துக்கிறே, ஆனா நான் meanderன்னு உருவகம் பயன்படுத்தினா தப்பா படுது. ஆங்...

புரொபஸர்: Now we are meandering from the topic

கணேஷ்: அப்படீன்னா?

புரொபஸர்: கவனம் சிதறி தேவையில்லாத விசயத்தைப் பேசுறோம். பக்ஷி அந்த வாக்கியத்தில் உனக்கு என்ன பிரச்னை? சொல்லு.

பக்ஷிராஜன்: சரி அதுக்கு முன்னாடி ஒரு குட்டி தகவல். Meander என்பது பதினாறாவது நூற்றாண்டில் தான் முதன்முதலில் லத்தீனில் இருந்து ஆங்கிலத்துக்கு வருது. மையண்டிரொஸ் (Maiandros) எனும் நதியின் பெயரில் இருந்து அச்சொல் தோன்றியது. இந்த நதி இன்னிக்கும் மெண்டரஸ் எனும் பெயரில் துருக்கி தேசத்தில் ஓடுது.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.