வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 42
புரொபஸர் ஒரு நாள் காலையில் கணேஷுக்குப் போன் செய்து தனக்கு படபடப்பாக இருக்கிறது, ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும்


புரொபஸர் ஒரு நாள் காலையில் கணேஷுக்குப் போன் செய்து தனக்கு படபடப்பாக இருக்கிறது, ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும், அவனால் துணைக்கு வர முடியுமா? எனக் கேட்கிறார். கணேஷ் தன் பைக்கில் அவரை அழைத்துக் கொண்டு ராதா
கிருஷ்ணன் சாலையில் ஆஸ்பத்திரி நோக்கி சென்று கொண்டிருக்கிறான். சிக்னல் வர பைக்கை நிறுத்தி வரிசையில் காத்திருக்கிறார்கள்.
கணேஷ்: சார் இப்போ பரவாயில்லையா?
புரொபஸர்: இப்போ நல்லாவே இருக்கு. இறங்கி சிட்டி சென்டர் வரை ஓடிப் போய் ஷாப்பிங் பண்லாம் போல இருக்கு. I feel up.
கணேஷ்: சார்... அது ஒரு விளம்பர வாசகம் இல்ல?
புரொபஸர்: yes a caption. ச்சே... நான் அப்பிடி சொல்லி இருக்கக் கூடாது.
கணேஷ்: ஏன் சார்?
புரொபஸர்: அது ஒரு கெட்ட வார்த்தை.
கணேஷ்: ஆங்... சார் என்னென்னு சொல்லுங்க சார்... ப்ளீஸ்.
புரொபஸர்: அதெல்லாம் தெரிஞ்சுக்கிற வயசு உனக்கில்ல. ஷட் அப்.
கணேஷ்: நான் எப்படியும் தேடி தெரிஞ்சுப்பேன் சார்.
புரொபஸர்: எப்படியோ போ. நான் upbeatன்னு சொல்லியிருக்கணும்.
கணேஷ்: அதென்ன சார்?
புரொபஸர்: ரொம்ப உற்சாகமா, தன்னம்பிக்கையா உணர்வது. I feel like myself ன்னும் சொல்லலாம். அதாவது இயல்பான ஆரோக்கியத்தோட இருக்கிறதா உணர்வது. I feel my oats ன்னும் ஒரு பிரயோகம் இருக்கு. இதே மீனிங் தான். தான் மட்டுமே பெரிசுங்கிற அலப்பறையோட நடந்துக்கிறதும் feeling ones oats தான் The actor felt his oats after his debut film ran houseful. முதல் படம் ஓடினதும் அந்த ஹீரோ உலகத்திலே தான் தான் பெரிய ஆள் என்கிற நினைப்பில் துள்ளினான்.
கணேஷ்: சார் இதெல்லாம் எப்படி நினைவு வச்சுக்கிறீங்க?
புரொபஸர்: எல்லாத்துக்கும் தொடர்புடைய சொல் ச்ங்ங்ப். அதைப் பத்தி யோசிச்சதும் வரிசையா வந்திடுச்சு. இப்போ எதுக்கு உங்கிட்ட வரிசையா ஒப்பிக்கிறேன்னு நினைச்சே?
கணேஷ்: எனக்கு கத்துக் கொடுக்கிறதுக்கு
புரொபஸர்: சேச்..சே... எனக்கு நினைவு வச்சிக்கிறதுக்காக.
கணேஷ்: ஆனாலும் ஓவர் சார். இப்போ நல்லா பீல் பண்றீங்கன்னா ஏன் காலையில கூப்பிட்டு பீதியைக் கிளப்புனீங்க?
புரொபஸர்: வயசாகுதில்ல. மரணம் தினமும் வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அடிக்கிற மாதிரி பயம். நேத்து ராத்திரி சரியா தூக்கம் இல்ல. Death was knocking my door. I felt it in my bones.
கணேஷ்: அப்படீன்னா?
புரொபஸர்: ஒரு intuition. அதாவது உள்ளுணர்வு. ஏதோ பிரச்சனை வரப் போகுது, கெட்டது நடக்கப் போகுதுங்கிற உணர்வு, அது தான் feel in the bones. ஆனா இப்போ I am good. I am full of beans.
கணேஷ்: பீன்ஸா?
புரொபஸர்: நீ சாப்பிடுற பீன்ஸ் இல்ல. இது காப்பி கொட்டை. Coffee beans.காப்பி சாப்பிட்டா ஜிவ்வுன்னு இருக்குமில்ல. அது தான் full of beans. உற்சாகமா, மனம் முழுக்க துள்ளலா இருக்கிறது. Lively, energetic, bursting with energyன்னு சொல்லலாம்.
கணேஷ்: சார் விராத் கோலி மாதிரியா?
புரொபஸர்: ஆமா. இந்த சிக்னல் முடியவே மாட்டேங்குது. I feel this is going to take eternity.
கணேஷ்: eternity?
புரொபஸர்: முடிவே இல்லாத காலம். டெலி சீரியல் மாதிரி.
கணேஷ்: சார் feel like ன்னு சொல்லக் கூடாதா?
புரொபஸர்: இல்ல. Feel like ன்னா திடீர்னு நமக்கு எதோ ஒண்ணைச் செய்யணுமுன்னு தோணுமே?
கணேஷ்: டென்சனா இருக்கும் போது போய் ஒரு தம் அடிச்சுட்டு வரலாமுன்னு.
புரொபஸர்: அந்த பழக்கம் வேறயா உனக்கு?
கணேஷ்: சும்மா சொன்னேன் சார்.
புரொபஸர்: சும்மான்னா ஒகே. I felt like having a smoke. So I strolled out. Stroll out ன்னா சாவகாசமா நடந்து போறது.
கணேஷ்: சார் இந்த சிக்னல் முடிய மாட்டேங்குது. பதினைஞ்சு நிமிஷமாச்சு. நான் போய் கேட்டு வரேன்.
(கணேஷ் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு போக்குவரத்து காவலரிடம் போகிறான்)
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...