நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உணவுத் தொழில்களில்... ஓராயிரம் வாய்ப்புகள்...!

மனிதன் உயிர் வாழ அடிப்படையான தேவை உணவு. உணவை உற்பத்தி செய்து கொடுத்து பொருளீட்டுவதும் இப்போது பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது.

News image
Updated On :31 மே 2016, 8:23 am

ஜெ. வீரநாதன்

மனிதன் உயிர் வாழ அடிப்படையான தேவை உணவு. உணவை உற்பத்தி செய்து கொடுத்து பொருளீட்டுவதும் இப்போது பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது.

இந்த உணவகத்தொழிலில் வேலை வாய்ப்புகளும், சுயதொழில் வாய்ப்புகளும் பலதரப்பட்ட நிலைகளில் கிடைக்கின்றன. வழக்கமாக நமது நகரங்களில் காணப்படும், கையேந்தி பவன் என்று அன்புடன் குறிப்பிடப்படும் தள்ளுவண்டிக் கடைகளிலிருந்து மிக உயர்தரமானதாகக் கருதப்படும் ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் வரையிலும் உணவகத் தொழில் மேற்கொள்ளப்படு

கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், தொழில் என்ற வகையில், இதில் உள்ள பிரிவுகளாவன :

உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்தல்: எடுத்துக்காட்டாக கோவில்பட்டி நகரத்தில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாயிலிருந்து, நாக்பூர் நகரத்து ஹல்திராம்ஸ் வரையிலும் உள்ள தயாரிப்புகள். நொறுக்குத்தீனி வகை உணவுப் பொருட்கள் தயாரிப்பது இந்தப் பிரிவில் அமைகின்றன. தயாரிப்புப் பொருளின் தன்மை, அளவு, விநியோகிக்கப்படும் பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முதலீடும், தயாரிப்பு செலவும் அடங்குகின்றன. தொடக்கத்தில் உற்பத்தி செய்யப்படும் பகுதிக்கு அருகிலேயே விற்பனை செய்து, தரமான தயாரிப்பு என்ற பெயர் வாங்கிவிட்டு, பிறகு பெரிய அளவில் தயாரித்து பிற பகுதிகளுக்கு அனுப்பலாம்.  ஏற்றுமதியும் செய்யலாம்.

உணவுப் பொருட்களைத் தயாரித்துப் பரிமாறுதல்: துவக்கத்தில் சிறிய அளவிலான உணவகத்தைத் துவக்கி தரமான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்து பரிமாறி, நல்ல பெயர் வாங்கிவிட்டு உணவகத்தைப் பெரிது படுத்தலாம். அல்லது திருமணம் போன்ற விழாக்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்கும் பணியையும் மேற்கொள்ளலாம். கடுமையான பணி மேற்கொள்ளும் மன நிலையில் உள்ள நல்ல நபர்கள் அடங்கிய குழு தேவை.

உணவுப் பொருட்களைத் தயாரித்து விநியோகித்தல்: பரிமாறுவதற்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை, வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று விநியோகித்தல் என்பது மூன்றாவது பிரிவில் வருகின்றது. இதில் தயாரிப்பு ஓர் இடம்;  உண்பது அதே நகரத்தில் உள்ள வேறு ஓர் இடம் என்று அமைகிறது. உணவு தேவைப்படுவோருக்கு, அவர்களுக்குத் தேவையான உணவை, தேவையான அளவு தயாரித்துக் கொடுப்பது பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

தயாரிக்கப்படும் உணவு நேரடியாக வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்கப்படுகின்றன. முதலில் குடும்பத் தொழிலாக ஆரம்பித்து பிறகு ஒரு சில நபர்களை கூட்டுச் சேர்த்து அல்லது பணியில் அமர்த்தி நல்ல தொழிலாக நடத்தலாம். தரமான உணவை சரியான நேரத்திற்குக் கொடுப்பது இந்தப் பகுதியில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

தற்காலிக இடங்களில் விற்பனை செய்தல்: தற்போது பெருமளவில் நடைமுறையில் உள்ள உணவு விற்பனை இந்த வகையில் நடைபெறுகிறது. குறிப்பாக பணியிடங்களில் வேலை செய்பவர்களின் மதிய உணவிற்கான தேவை அதிகமாகி வருகிறது.

இதற்காக பலதரப்பட்ட உணவு வகைகளைச் சமைத்து, பாத்திரங்களில் வைத்து அல்லது பொட்டலங்களாக்கி அவற்றை சிறிய மாருதி ஆம்னி போன்ற வாகனங்களில் வைத்து எடுத்துச் சென்று, அந்தந்த பகுதிகளில் தற்காலிக கடைகளாக நிறுத்தி விற்பனை செய்கின்றனர். சுய உதவிக்குழுக்களாக இன்று இந்த வகையில் உணவு விற்பனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Story image

 இவை தவிர,

 பழங்கள், காய்கறிகளைப் பாதுகாத்தல், அவற்றிலிருந்து ஜூஸ், ஜாம்ஸ், ஜெல்லி போன்றவற்றைத் தயாரித்தல், விற்பனை செய்தல்.

 பால், பால் பொருட்கள், ஐஸ் க்ரீம், பாலை அடிப்படையாகக் கொண்ட இனிப்புகளைத் தயாரிப்பது, விற்பனை செய்வது.

 உணவுக்குச் சுவையூட்டும் மசாலாப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் தயாரிப்பது, விற்பனை செய்வது,

 பேக்கரி தயாரிப்புப் பொருட்களான ரொட்டி, பிஸ்கெட்,  கேக் போன்றவற்றைத் தயாரிப்பது, விற்பனை செய்வது.

 மீன், இறைச்சி போன்றவற்றைப் பதப்படுத்துவது, அவை தொடர்பான உணவுகளைத் தயாரிப்பது, விற்பனை செய்வது.

 தானியங்களை அடிப்படையாகக் கொண்ட மாவு மில், அரவை மில், எண்ணெய் தயாரிப்பது, விற்பனை செய்வது.

 பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத்  (ரெடிமேட் சப்பாத்தி, புரோட்டா உட்பட) தயாரிப்பது, விற்பனை செய்வது.

 குளிர்பானங்கள், சுவையூட்டப்பட்ட தண்ணீர் போன்றவற்றைத் தயாரிப்பது, விற்பனை செய்வது

 இந்த உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல உலோக - பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், பாத்திரங்களைத் தயாரிப்பது, விற்பனை செய்வது உட்பட, அனைத்தும் உணவுத் தயாரிப்புத் தொழிலில் உள்ளடங்குவனவாகும்.

 தற்போது இந்த உணவுத் தொழிலை சொல்லிக் கொடுக்க ஏராளமான பயிலகங்கள் வந்துவிட்டன. சான்றிதழ், பட்டயம், பட்டம், முதுநிலை பட்டம் என்று பல நிலைகளில் பாடப்பிரிவுகள் உள்ளன.

 பணியிடங்களிலும், தலைமை உணவு தயாரிப்பாளரிலிருந்து, உணவு பரிமாறுபவர் வரையிலும் பல்வேறு தகுதிகளில் பணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 இந்தியாவில் தற்போது சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான, ஆண்டிற்கு 11 சதவீத வளர்ச்சியைக் கொண்டதாக உள்ளது இந்த உணவுத் தொழில்.

பெரிய அளவில் உணவுத் தயாரிப்புத் தொழில் பற்றிய செய்திகளை http:www.makeinindia.comsectorfood-processing என்ற வலைதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 

பலதரப்பட்ட வேலை மற்றும் சுயதொழில் வாய்ப்புகளைத் தருவதான இந்த உணவுத் தொழிலில்  உங்களுடைய திறமை, முதலீடு போன்றவற்றிற்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்து எடுங்கள். வாழ்க்கையில் வெல்லுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.