நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 59

புரொபஸரும் கணேஷும் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். புரொபஸர் cheese off என்றால் போரடிப்பது,

News image
Updated On :2 நவம்பர் 2016, 6:37 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸரும் கணேஷும் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். புரொபஸர் cheese off என்றால் போரடிப்பது, வெறுப்படைவது எனப் பொருள் என்கிறார்.
கணேஷ்: சார் சீஸ் என்றால் பாலாடைக் கட்டி தானே? அது ரொம்ப சுவையான உணவு. அப்புறம் ஏன் இப்படி நெகட்டிவ்வான அர்த்தத்தில் பயன்படுத்துறாங்க?
புரொபஸர்: நல்ல கேள்வி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒருவருடைய செயல் அடுத்தவருக்கு எரிச்சலூட்டினால் cheese it என கோபமாய் சொல்வார்கள். அதற்கு நிறுத்து என பொருள். அதில் இருந்து cheesedக்கு இந்த நெகட்டிவ் பொருள் வந்திருக்கலாம். இந்த சீஸ் என்பதன் மூலச் சொல் எந்த மொழியில் இருக்கிறது சொல் பார்க்கலாம்.
கணேஷ்: என்ன வழக்கம் போல லத்தீன், பிரஞ்சு இல்லாட்டி கிரேக்கமாக இருக்கும்.
புரொபஸர்: அதான் இல்ல. சிஸ் எனும் உருது சொல்லில் இருந்து தான் cheese Be ஆங்கிலத்துக்குப் போனது.
கணேஷ்: வாவ்!
அப்போது பேட்ஸ்மேன் அடித்த சிக்ஸர் பந்து பார்வையாளர்களை நோக்கி பறந்து வருகிறது. அது புரொபஸரின் மடியில் வந்து விழுகிறது. அவர் அதைக் கையில் எடுத்துப் பார்க்கிறார். அருகில் இருக்கும் இளம்பெண் பந்தை தன்னிடம் தருமாறு கெஞ்சி கேட்கிறாள். அவர் கொடுக்க, அவள் பந்தைத் தூக்கி காண்பித்தவாறு துள்ளுகிறாள். அவள் தான் பந்தை பிடித்தாள் என நம்பி காமிரா அவளைக் காண்பிக்க, பார்வையாளர்களும் அவளைப் பாராட்டி கைதட்டுகிறார்கள்.
அப்பெண் பாராட்டுகளில் நனைந்தபடி புரொபஸரிடம்: Thanks a lot.
புரொபஸர்: You are welcome.
கணேஷ்: சார் 13 விதங்களில் தேங்க் யூ சொல்ல முடியும் என்று சொன்னீங்களே?
புரொபஸர்: ஆமா!
கணேஷ்: தாங்க்யூவை வேறெப்படிச் சொல்ல முடியும்?
புரொபஸர்: ஒன்னு, Thanks a lot.
கணேஷ்: அதான் சொல்லியாச்சே!
புரொபஸர்: அடுத்தது, Thanks very much, thank you very much, thank you so much
கணேஷ்: நாலாச்சு
புரொபஸர்: Thanks a bunch, Much obliged. இந்த much obliged  ரொம்ப சீரியசான ஒரு நன்றி நவிலல்.
கணேஷ்: அதென்ன சார் obliged?
புரொபஸர்: மிகவும் கடன்பட்டிருக்கிறேன் என அர்த்தம். அதே போல ஒருவர் நமது வேண்டுகோளுக்கு இணங்க செயல்பட்டால் he is obliging us.
கணேஷ்: புரியல சார்.
புரொபஸர்: பரீட்சையில நீ உன் பக்கத்தில இருக்கிற பையன்கிட்ட அவன் பேப்பரை காட்ட கெஞ்சுறே. அவன் ஒத்துக்கிட்டு காட்டினான்னா he obliges you.
கணேஷ்: ஓ சரி, மிச்ச ஏழு வகை தாங்க்ஸையும் சொல்லிடுங்க.
புரொபஸர்: வர்ன் You saved my life. I owe you big time. இது ரெண்டையும் ஒருவர் நமக்கு ஆபத்துக் காலத்தில் முக்கியமான உதவி செய்யும் போது சொல்ல வேண்டும்.
கணேஷ்: ஞாபகம் வச்சுக்கிறேன்.

அப்போது விராத் கோலியின் கேட்சை எதிரணி பீல்டர் தவற விடுகிறார். பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.
கணேஷ்: இப்போது கோலி அந்த கேட்சை விட்ட பீல்டரிடம் வர்ன் You saved my life  என்று சொல்லலாம் இல்லையா சார்?
புரொபஸர்: யெஸ். ஆனா I owe you big time மட்டும் கூடாது.
கணேஷ்: ஏன்?
புரொபஸர்: அப்படிச் சொல்லி அதை நேரடி அர்த்தத்தில் எடுத்துக்கிட்டா பிறகு அந்த பீல்டர் பேட்டிங் செய்யும் போது கேட்ச் கொடுத்தா அதை கோலி பிடிக்கக் கூடாது.
கணேஷ்: ஐயய்யோ. சரி மிச்சத்த சொல்லுங்க.
புரொபஸர்: Cheers.
கணேஷ்: சியர்ஸ் இதுக்கும் சொல்லலாமா?
புரொபஸர்: தாராளமா. ஆனா அந்த பொண்ணுகிட்ட சொன்னா அறை விழும்.
கணேஷ்: வேணாம். நீங்க அடுத்த நாலும் சொல்லுங்க.
புரொபஸர்: you shouldnt have. இதை நீ ஒருத்தர் உனக்கு எதிர்பாராமல் ஒரு பரிசு தரும் போது சொல்லணும். எதிர்பார்க்கவே இல்ல, ரொம்ப நல்லா இருக்கு எனும் அர்த்தம் கொண்டது you shouldnt have.
கணேஷ்: ஆனால் இதையும் நேரடி மீனிங்ல எடுத்துக்கிட்டா
புரொபஸர்: கொடுத்த பரிசை திரும்ப வாங்கிப்பாங்க. சரி எனக்குப் பசிக்குது. போய் சாப்பிட எதாச்சும் வாங்கி வா.

(கணேஷ் பாப்கார்ன், சமோசா விற்கும் இடத்தை நோக்கி போகிறான்)
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.