நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 63

புரொபஸர் கணேஷ் மற்றும் நாய் ஜூலி நீச்சல் குளக்கரையில் அமர்ந்திருக்கிறார்கள்.

News image
Updated On :29 நவம்பர் 2016, 6:41 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர் கணேஷ் மற்றும் நாய் ஜூலி நீச்சல் குளக்கரையில் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது அங்கு ஒரு அழகிய திருநங்கை வந்து அவர்கள் அருகே அமர்கிறாள். அவள் கணேஷை நோக்கி புன்னகைக்கிறாள்.
கணேஷ் அவளை நோக்கி புன்னகைக்கிறான். அவள் அவனைக் கவனியாமல் ஜூலியை வருடித் தருகிறாள். ஜூலி கொட்டாவி விட்டுக் கொண்டு மல்லாந்து படுக்கிறது. படுத்தபடி அவளுக்கு கை கொடுக்கிறது. அவள் அதன் கையைப் பற்றி குலுக்குகிறாள்.

ஜுலி: Hi handsome.
கணேஷ்: Hi handsome hi handsomeன்னு ஒரு டிவி விளம்பரம் வருமே. அது நினைவு வந்துச்சு
புரொபஸர்: அப்படி ஒரு விளம்பரம் வருதா என்ன?
ஜூலி: மாமா நீங்க காலையில தினமும் தேய்சுக்கிறீங்களே.. அந்த fair and handsome cream அதோட விளம்பரம்.
புரொபஸர்: வாயை மூடு. நாய் நாயோட இடத்தில இருக்கணும்.
திருநங்கை: wow...
கணேஷ்: என்னாச்சுங்க மேடம்?
திருநங்கை: இது ஏதாச்சும் மேஜிக் நாயா?
கணேஷ்: இது எங்க ஸ்பெஷல் டிரெயினிங். இது மாதிரி நிறைய நாய்களைப் பேசுறதுக்கு டிரெயின் பண்ணியிருக்கிறோம்.
ஜூலி: நம்பாதீங்க. நானே தான் பேச கத்துக்கிட்டேன். நான் சிட்டி ரோபோ ரஜினி போல. 
புரொபஸர் பெருமையாய்: என் இங்கிலிஷ் வகுப்புகளைக் கவனிச்சு தான் ஜூலி பேச துவங்கிச்சு. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடுங்கற மாதிரி... சாரி என் பேரு புரொபஸர். Nice to meet you.
திருநங்கை: ஹை... என் பேரு ஆண்டாள். நான் ஒரு boutique இல் மேனேஜரா இருக்கேன்.
ஜூலி: நீ ஆண்டாள் என்றால் நான் திருப்பாவை.
புரொபஸர்:  Shut up Julie.
ஆண்டாள்: You got such a handsome dog.
ஜூலி வாலாட்டுகிறது.
புரொபஸர்: இந்த handsome என்ற சொல்லோட உண்மையான வரலாறு தெரிஞ்சா நீ ஆச்சரியப்படுவே. பதினாலாவது   
நூற்றாண்டில handsome என்றால் கைக்கு அடக்கமான, பயன்படுத்தத் தோதானது எனப் பொருள். அப்படித் தான் hand +  some = handsome உருவானது. அதன் பிறகு பொருத்தமான விசயங்களுக்கு hansome பயன்படுத்த தொடங்கினாங்க. அது மயங்கி நல்ல வடிவம், பார்க்க இனிமையான விசயங்களுக்கு அச்சொல் பயன்பட்டது. நவீன ஆங்கிலத்தில் அழகான ஆண்களுக்கான தனித்த சொல்லாக அது மருவி விட்டது.
ஆண்டாள்: I think it is a fair etymological evolution.
புரொபஸர்: எப்படிச் சொல்றே?
ஆண்டாள்: அழகான ஆண்கள் கைக்கு அடக்கமாக இருக்கணும் எனும் அர்த்தத்தில். 
புரொபஸர்: ஹா... ஹா...
ஜூலி: I reckon you are handsome too dear.
ஆண்டாள்: ஆனால்... நான் ஆண் இல்லையே
ஜூலி: பார்க்க நேரடியாய் அழகாய் இல்லாமல், ஆனால் கம்பீரமாய் எடுப்பாய் தோன்றும் பெண்களை handsome எனச் சொல்லலாம்.
புரொபஸர்: உண்மை தான்!
ஆண்டாள்: Oh I am flattered.
கணேஷ்: சார் நான் ஒருமுறை தேர்தல் பற்றின ஒரு பத்திரிகை அறிக்கையில் he won by a handsome margin என படிச்சதா ஞாபகம்.
புரொபஸர்: கணிசமான எனும் பொருளிலும் handsomeஐப் பயன்படுத்தலாம். கிரிக்கெட்ல Indian team got a substantial lead against England in the second test at Rajkot. 
ஆண்டாள்: என்னோட பாஸ் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். அவர் எதற்கெடுத்தாலும் handsome பயன்படுத்துவார். You did a handsome job. We need to make handsome profit this month இப்படி எதுக்கு எடுத்தாலும்.
புரொபஸர்: அமெரிக்கர்கள் handsomeஐ அதிகம், சிறப்பான எனும் பொருளில் பயன்படுத்துவார்கள்.
ஜூலி வெயிலில் படுத்திருப்பது பார்த்து ஆண்டாள்: அங்க ரொம்ப வெயில். ஜூலி இங்க என் பக்கத்துல வா.
ஜூலி வந்து அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொள்கிறது.
ஜூலி: Shall I compare thee to a summers day Thou art more lovely and temperate
ஆண்டாள்: Unbelievable நீ கவிதையெல்லாம் சொல்லுவியா?
புரொபஸர்: அது ஷேக்ஸ்பியர் கவிதை. Sonnet 18. அது போகட்டும். Thee என்றால் என்னவெனத் தெரியுமா?
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.