நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 81

புரொபஸர், கணேஷ் மற்றும் அவர்கள் சமீபத்தில் சந்தித்த Long Silver John  எனும் நண்பருமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 6:17 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ் மற்றும் அவர்கள் சமீபத்தில் சந்தித்த Long Silver John  எனும் நண்பருமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது Long Silver John தான் வளர்க்கும் செல்லக்கிளியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். அதன் பெயர் Captain Flint. அந்த கிளி ஒரு கற்பனை உலகில் வாழ்கிறது. தான் ஒரு கப்பலில் இருப்பதாய் நம்புகிறது. அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் கர்ய்ஞ் நண்ப்ஸ்ங்ழ் ஒர்ட்ய் ‘Long Silver John ‘right on the money’ எனும் சொலவடையைப் பயன்படுத்துகிறார். அதன் பொருள் என்ன என பின்னர் கணேஷிடம் விளக்குகிறார்.

Long Silver John: நான் சொல்கிற ஒரு விசயத்தை நீ ஆமோதிக்கிறாய். உதாரணமாய் தமிழ்நாட்டின் முதல்வர் எங்கிருக்கிறார்? நீ அவர் தில்லியில் இருக்கிறார் எனச் சொல்கிறாய். நான் right on the money என்கிறேன். அப்படி என்றால் கரெக்டா சொன்னே என்று அர்த்தம். இதற்கு சமானமான பிற சொலவடைகள் on the mark, on target மற்றும் on the spot. 
கணேஷ்: right ok. அதென்ன money?
புரொபஸர்: நான் சொல்கிறேன். இந்த idiom குதிரைப் பந்தயத்தில் இருந்து உருவாகியிருக்கலாம் என்கிறார்கள். ஒரு பந்தயம் கட்டின குதிரை ஜெயித்தது என்றால் run in the money என்பார்கள். அதுவே தோற்று விட்டதென்றால் the horse ran out of the money. இதில் இருந்து தான் right on the money தோன்றியிருக்க வேண்டும். 
Long Silver John: எனக்குத் தெரிந்து இதற்கு இன்னொரு கதை இருக்கிறது. அது இன்னும் சாத்தியமாக தோன்றுகிறது.
கணேஷ்: அதென்ன?
புரொபஸர்: I am curious too. Go on.
Long Silver John: அதாவது கிரிக்கெட்டில் பந்து வீசுகிற பவுலர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பந்து சரியாக விழுந்து துள்ளும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி பிட்சில் சரியான length இல் அவர்கள் பந்தை வீச வைப்பதற்காக பயிற்சியாளர்கள் பிட்சில் ஒரு நாணயத்தை அந்த இடத்தில் வைப்பார்கள். அதன் பிறகு பவுலர்களை அந்த நாணயத்தில் சரியாய் படும்படி வீசச் சொல்வார்கள். சரியாக நாணயத்தில் படும்படி வீசுபவர்கள் பாராட்டப்படுவார்கள். They are right onthe money. இப்போது கூட கிரிக்கெட்டில் ஒரு பவுலர் சரியான லைன் மற்றும் லென்த்தில் வீசும் போது வர்ணனையாளர்கள் he is right on the money என்பார்கள்.
கணேஷ்: அதான் நான் அப்பவே இதை எங்கேயோ டிவியில கேட்டிருக்கிறதா சொன்னேன்.
Long Silver John: கரெக்ட். ரவி சாஸ்திரி தன் வர்ணனையில் அடிக்கடி பயன்படுத்துவார்.
கிளி Captain Flint மீண்டும் டிவியில் தோன்றும் நயன்தாராவை நோக்கி டொக் டொக் என கொத்துகிறது.
Long Silver John: Captain Flint stop this lunacy right now.
Captain Flint (கோபமாய்): இந்த பெண்ணை இந்த பெட்டியில் இருந்து உடனே வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் I will make you kiss the gunners daughter.
கணேஷ்: அதென்ன lunacy.
Long Silver John: lunatic கேள்விப்பட்டிருக்கிறாயா?
கணேஷ்: இல்லை.
Long Silver John: அது கொஞ்சம் பழைய வார்த்தை. Lunacy என்றால் பைத்தியம். Lunatic என்றால் பைத்தியக்காரன். என் கிளி பெண் என்பதால் பைத்தியக்காரி. 
புரொபஸர்: அது ஒரு சுவாரஸ்யமான வார்த்தை. உனக்கு ஒண்ணு தெரியுமா? முன்பு பெüர்ணமி நாளில் மக்களுக்கு மூளை குழம்பும் என நம்பினார்கள். மனநலம் குன்றியவர்களுக்கு முழுநிலவின் போது பித்து அதிகமாகும் என்றார்கள். Lunar eclipse தெரியுமில்லையா?
கணேஷ்: ஆமா சார் சந்திர கிரகணம்.
புரொபஸர்: Lunar என்கிற சொல் நிலவைக் குறிப்பதனால் தான் சந்திர கிரகணத்தை lunar eclipse என்கிறார்கள். இதே காரணத்தால் தான் மனநலம் குன்றியவர்களுக்கு lunatic என்ற பெயர் ஏற்பட்டது. (Long Silver John ஐ நோக்கி) என்ன கிளிக்கு போய் இப்படி ஒரு பெயர்?
Long Silver John: Treasure Island நாவலில் லாங் சில்வர் ஜான் தனக்கு பிடிக்காத கடற்கொள்ளையர் தலைவனின் பெயரான Captain Flint என்பதை தன் கிளிக்கு சூட்டுவான். நானும் அப்பெயரை இதற்கு வைத்தேன்.
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.