நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்  - 82

News image
Updated On :11 ஏப்ரல் 2017, 5:40 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ் மற்றும் Long John Silver பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  Long John Silver தனது கிளியை அறிமுகப்படுத்துகிறார். அதன் பெயர் Captain Flint.

கணேஷ்: சார்... எனக்கு ரெண்டு சந்தேகங்கள்.
புரொபஸர்: ம்... ம்...
கணேஷ்: ரெண்டுமே கிஸ்ஸிங் பற்றி...
புரொபஸர்: என்னது?
கணேஷ்: ஆமா.
புரொபஸர்: நான் இதில அதாரிட்டி இல்ல. படிக்கிற வயசில நாக்கை பற்றி அக்கறை கொள்ளலாம். உதடுகளை பற்றி அல்ல.
கணேஷ்: அப்படி இல்ல. இதுவும் படிப்பு சம்பந்தமா தான். சார் Kissing the gunners daughter என்று ஒரு சொற்றொடரை கேட்டேன்.
Captain Flint: நான் தான் சொன்னேன். நீ எங்கிட்டயே கேட்கலாமே தம்பி?
கணேஷ்: ஷட் அப். (புரொபஸரை நோக்கி) நீங்க சொல்லுங்க சார்.
புரொபஸர்: t means a kind of punishment. Flogging. சாட்டையடி தண்டனை.
கணேஷ்: ஐயோ...
புரொபஸர்: ஆமா.
கணேஷ்: நான் என்னமோ கிளுகிளுப்பா இருக்குமுன்னு நெனச்சேன்.
புரொபஸர்: its a jocular expression. அதாவது நகைச்சுவையான சொலவடை, ஆனால் பொருள் சீரியஸானது. போலீஸ்காரர்கள் லாடம் அடிப்பது என்று சொல்வார்களே. குதிரைக்கு லாடம் அடிப்பதை நினைவுபடுத்தும் பாணியில் கைதியின் பாதங்களில் லட்டியால அடிப்பதால் அந்த expression தோன்றியது.
கணேஷ்: ஆனால் ஏன் சார் kissdaughteruன்னு சம்பந்தமில்லாம வருது.
புரொபஸர்: அதான் எனக்கு தெரியல.
Captain Flint: தம்பி உன் சந்தேகத்தை நான் நிவர்த்தி பண்றேன்.
கணேஷ்: சார்... இந்தக் கிளியை என்னை தம்பின்னு அழைக்க வேணாமுன்னு சொல்லுங்க. ஒரு கிளி என்னை அப்படி கூப்பிடறது கேவலமா இருக்கு.
Captain Flint: தம்பி எனக்கு என்ன வயசிருக்குமுன்னு நெனக்கிறே? உன் வயசுக்கு 200 மடங்கு.
கணேஷ்: என்னது?
Captain Flint: ஆமா. அக்பரோட அரசவையில் நான் இருந்தேன். அதன் பிறகு மும்தாஜுக்கு செல்லக்கிளியாக இருந்தேன். அதன் பிறகு பல வருடங்களில் வனாந்தரங்களில் பறந்து திரிந்தேன். என் வாழ்க்கையின் ஆக மகிழ்ச்சியான காலம் அது. அதன் பிறகு மெளண்ட்பேட்டன் என்னை வைத்திருந்தார். அவர் மனைவி லேடி மெளண்ட்பேட்டன் என்னை நேருவுக்குப் பரிசளித்தார். அப்படியே கைமாறி கைமாறி வந்து இந்த கிராதகனிடம் அகப்பட்டுக் கொண்டேன். எனக்குத் தெரியாதது, இந்த உலகத்தில ஒண்ணுமே இல்ல.
கணேஷ்: சரி சொல்லித் தொலை.
Captain Flint: To kiss a gunners daughter என்பது ஒரு naval expression. அதாவது மாலுமிகள் பயன்படுத்தும் ஒரு ண்க்ண்ர்ம். என்னை சிறு வயதில் இருந்து வளர்ந்த கேப்டன் பிளிண்ட் ஒரு கொடூரமான கடற்கொள்ளையர் தலைவன். அவர் அடிக்கடி தனக்குப் பிடிக்காதவர்களுக்கு ஒரு தண்டனை அளிப்பார். அவர்களைப் பீரங்கியில் மல்லாக்க கட்டி வைத்து முதுகில் சாட்டையால் அடித்தே கொல்வார். தண்டனை பெறுபவன் இவ்வாறு நின்று அடிவாங்குவதைப் பார்க்க ஒரு பெண்ணை அணைத்து முத்தமிடுவது போல் இருக்கும். Daughter என்பது பீரங்கியை இயக்குபவன். ஈஹன்ஞ்ட்ற்ங்ழ் அவனது மகள். இப்போது புரிகிறதா?
கணேஷ்: செம...
Captain Flint: செம்மை என்கிற செவ்வியல் தமிழ்ச் சொல் மருவித் தான் செம தோன்றியதா? நிறைய இளைஞர்கள் இன்று இதைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறேன்.
கணேஷ்: எனக்குத் தெரியாது. I hate Tamil.
Captain Flint: உன் தாய் மொழியை உயிருக்குயிராக நேசிக்க வேண்டும். Otherwise I must make you marry and hug the gunners daughter.
கணேஷ்: வேண்டாங்க கிளிக்கா. நான் பேச்சிலராவே இருந்துக்கறேன்.
Captain Flint: You know a French kiss?
கணேஷ்: இல்லக்கா எனக்கு கேர்ள் பிரண்டே இல்ல. ஆனா அது தான் என் ரெண்டாவது டவுட். பிரஞ்சுக்காரங்க தான் அதைக் கண்டுபிடிச்சாங்களா?
Captain Flint: அப்படித் தான் நம்பப்படுது. முதலாம் உலகப் போரில் பிரான்ஸூக்கு போய் வந்த இங்கிலாந்து படைவீரர்கள் பிரான்ஸ் மக்கள் ஆவேசமாய் காதலிப்பது பார்த்து காதலுடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் Frenchஐ அடைமொழியாக்கினர். French letters  கேள்விப்பட்டிருக்கியா?
கணேஷ்: இல்லை.
Captain Flint: ஆணுறை. Syphilis எனும் பால்வினை நோய்க்கு French pox என் பெயர் வந்தது. அதை விடு. Kiss of death கேள்விப்பட்டிருக்கியா?

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.