நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 84

புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

News image
Updated On :25 ஏப்ரல் 2017, 5:32 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Captain Flint: என்னை வெளியே அழைச்சிட்டு போவியா? அப்படீன்னா இன்னும் நிறைய கிஸ்ஸிங் இடியம்ஸ் சொல்லித் தரேன்.
(கணேஷ் சில்வரிடம் சென்று பேசுகிறான்)
Silver: No dont take her out. She will go bananas. அந்த கிளி she got a screw loose.
கணேஷ்: அப்படீன்னா லூஸா?
Silver: ஆமா.
கணேஷ்: அப்படீன்னா வாழைப்பழம் கொடுத்தா சரியாகிடுமா?
Silver: ஆமா. இல்ல... இல்ல. Go bananas என்றால் ஓவரா இமோஷனல் ஆகி விசித்திரமா நடந்துக்கிறது.
கணேஷ்: ஓ... நான் நினைச்சேன் கிளிக்கு பைத்தியமுன்னு. I thought she has gone nuts.
Silver: Not exactly. See if you say she has gone nuts. அதுக்கு பைத்தியமுன்னு அர்த்தம். ஆனால் கேப்டன் பிளிண்ட் இன்னும் அந்த நிலைக்கு வரலே.
கணேஷ்: அப்படீன்னா screw looseன்னு சொன்னீங்க?
Silver: தப்பா சொல்லிட்டேன். I am getting nervous. I am blabbering. அதை வெளியே அழைச்சிட்டு போகாதே. சொல்லீட்டேன்.
கணேஷ்: blabbering என்றால்?
Silver: உளறுவது.
கணேஷ்: நார்மலா இருக்கிறவங்க உளறுவாங்களா?
Silver: அப்படீன்னா you say I am out of my mind. That I am crazy.
கணேஷ்: சேச்..சே...
Silver: கவனி. That parrot அது ... it is away with the fairies.
கணேஷ்: பேசாம தமிழ்லயே சொல்லிடுங்க.
Silver: Fairiesன்னா என்ன? தேவதைகள். தேவதைகள் எங்கிருக்கும் வானத்தில. இந்த கிளி அது மாதிரி வானத்தில கற்பனையில் மிதக்குது. நிஜ உலகத்தில
இல்லை. அது தான் away with the fairies. லைட்டா லூசா இருக்கிறவங்க, கற்பனை உலகத்தில் எப்போதும் இருக்கிறவங்களை அப்படிச் சொல்லலாம். You
understand?
கணேஷ்: ஓகே. ஆனால் அது ஒரு பறவை. பறவைன்னா வானத்தில் பறக்கணும். அதை நீங்க கூண்டில பூட்டி வச்சிருக்கீங்க. வீட்டு மனைவி மாதிரி தினமும்
டிவி பார்த்து கிளிக்கு கொஞ்சம் மனப்பிரமை வந்திருக்கலாம். அவ்வளவு தான்.
Silver: You cannot let her out. அந்த கிளி ஒரு கப்பலில் இருக்கிறதா நம்புது. வெளியே போனா அதுக்கு பித்து பிடிச்சிரும். You understand?
Captain Flint  விசிலடித்து கணேஷை அழைக்கிறது. அவன் அருகே போகிறான்.
Captain Flint: இன்னும் பக்கத்தில வா.
(கணேஷ் போகிறான்)
Captain Flint: என்ன என்னை வெளியே விட்டா நான் கத்தி கலாட்டா பண்ணுவேன்னு சொல்றானா? நம்பாதே. He is off his rocker. 
கணேஷ்: ஆங்?
Captain Flint: ஆமா. You know what a rocker is
கணேஷ்: Rocking chair
Captain Flint: கரெக்ட். ஒருத்தர் ராக்கிங் செயரில் இருந்து ஆடினபடியே இருக்கிறார். திடீர்னு தன் சமநிலையை இழந்து விழுந்து விடுகிறார். அதே போல நாம்
நமது மனதின் சமநிலையை இழப்பது தான் off ones rocker.
புரொபஸர்: I dont agree. இந்த இடியம் ஐரோப்பாவில் தொழில்புரட்சி நடந்த போது தோன்றியது. அப்போது தான் பல எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. Rocker
arm என்பது ஒரு முக்கியமான எந்திர பாகம். அது திடீரென்று பழுதானால் எந்திரம் நின்று விடும். குறிப்பாக ரயில் எந்திரம். அப்போது it is off the rocker
என்பார்கள். Off the rail என்றும் சொல்வார்கள். இதில் இருந்து தான் ஒருவருக்கு பைத்தியம் பிடிப்பதை இப்படிச் சொல்லும் வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
கணேஷ்: எனக்கென்னவோ Captain Flint சொல்வது தான் சரி எனப் படுது. அது இன்னும் கவித்துவமாக இருக்குது.
புரொபஸர்: எப்படியோ போ.
Captain Flint: Whatever Silver is mad. He has rats in the attic. You get me
கணேஷ்: இல்லை. Attic என்றால் மச்சு அறை தானே இந்த கட்டடத்து மச்சில் நிறைய எலிகளா?
Captain Flint: சொல்றேன்.
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.