வாங்க இங்கிலீஷ் பேசலாம்! 99
புரொபஸர், கணேஷ், கிளி Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டுக்கு செல்கிறார்கள்.


புரொபஸர், கணேஷ், கிளி Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கே புரொபஸரின் மனைவி மீனாட்சியிடம் அரட்டை அடிக்கிறார்கள். அப்போது மீனாட்சி ‘‘nuts” என்கிறார். அது ஒரு வியப்பொலி எனக் கூறும் புரொபஸர் அதற்கு பின்னால் ஒரு கதை உண்டு என்கிறார். என்ன கதை?
புரொபஸர்: இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம். ஜெர்மனி உலகையே விழுங்கி விடும் என மக்கள் அஞ்சினர். அப்போது ஜெர்மானிய அரசு தன்னிடம் சரணடையும்படி அமெரிக்காவுக்கு ஆணையிட்டது. இதை அறிய வந்த அமெரிக்க படைத்தலைவர் மெக் ஆலிப் ஒற்றை வார்த்தையில் ஒரு கடிதம் அனுப்பினார். அது இப்படி இருந்தது: To the German commander Nuts The American Commander அவ்வளவு தான். இந்த விசயம் தீ போல பரவ மக்களுக்கு இந்த பதில் வெகுவாக பிடித்துப் போயிற்று. அப்படித் தான் கோபத்தை அல்லது அதிர்ச்சியைக் காட்டும் வியப்பொலியாக nuts எனும் சொல் ஆங்கிலத்தில் பரவலான புழக்கத்துக்கு வந்தது.
மீனாட்சி: Yes. நானும் அந்த அமெரிக்க படைத்தளபதி போல ரொம்ப துணிச்சலானவள். ஒரு வார்த்தையினால் உலகப்போர் வரலாற்றையே உங்களுக்கு நினைவுபடுத்திட்டேன் பார்த்தீங்களா?
புரொபஸர்: அப்படீன்னா நீ என்னை ஜெர்மனியோட ஒப்பிடுறியா?
மீனாட்சி: Holy cow! நான் அப்படிச் சொல்லவே இல்லியே?
புரொபஸர்: பின்னே?
கணேஷ்: Hold on. சந்து கேப்ல சைக்கிள் விடுறீங்களே ரெண்டு பேரும். அதென்ன cow?
புரொபஸர்: அதுவும் ஒரு food interjection.உணவின் பெயரிலான ஒரு வியப்பொலி. இது ரொம்ப பிரசித்தமானது அமெரிக்காவில் பேட்மேன் சீரியல் டிவியில் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த 1960களில் தான் அந்த சீரியலில் பேட்மேனோடு வரும் ராபின் “Holy mackerel, Batman’’, “Holy cow, Batman” என உணவுப்பொருட்களை வைத்து வியப்பொலிகளை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் மட்டுமே இது போல் முன்னூறுக்கும் மேற்பட்ட வியப்பொலிகளை புதிதாய் சொல்லி இருக்கிறார். இதில் holy cow பற்றிக் கொண்டது.
மீனாட்சி டி.வி பார்ப்பதில் மும்முரமாகிறார்.
மீனாட்சி: ஜூலியை எப்பிடியும் வெளியேத்திருவாங்க... பாரேன்.
கணேஷ்: ஏது நம்ம ஜூலியையா?
மீனாட்சி: You are so outdated Ganesh. அப்பப்ப டிவியும் பாரேன்.
புரொபஸர்: சரியான expression outdated இல்ல. You could say, Ganesh is behind the times. ஆனால் அப்படி அவன் இருக்கிறது தான் சரி. இங்க அப்பப்ப பரபரப்பா பேசப்படற ஒவ்வொண்ணையும் மும்முரமா கவனிக்க ஆரம்பிச்சா பைத்தியம் பிடிச்சிரும்.
மீனாட்சி: ஏன் outdatedஇல் என்ன தப்பு?
புரொபஸர்: Outdated, obsolete ஆகிய சொற்களைப் பொருட்களுக்கு பயன்படுத்தலாம். He holds outdated / obsolete views. The equipment we use is outdated. அதாவது காலாவதியான என்று அர்த்தம். ஆனால் இதே பொருளை மனிதர்களுக்குப் பொருத்த முடியாது. ஏனென்றால் மனிதர்கள் காலாவதி ஆவதில்லை. அதற்குப் பதிலாய் behind the times என்று சொல்லலாம். Ganesh is behind the times when it comes to following reality shows.
Captain Flint: What about old - fashioned?
புரொபஸர்: Old - fashioned என்றால் பழமையான என்று அர்த்தம். உதாரணமா, என் மச்சினன் இருக்கானே, அதாவது மீனாட்சியோட தம்பி, நெத்தியில பட்டைய போட்டுட்டு பழமா இருப்பான். பெரிய சாஃப்ட்வேர் என்ஜினியர். ஆனா பூனை குறுக்கே வந்ததுன்னா வீட்டுக்கு திரும்பிப் போய் தொழுவத்தில இருக்கிற பசுவைக் கும்பிட்டு தான் வெளியே போவான்.
மீனாட்சி: சுத்தப் பொய். (கோபமாய்) You have no bloody business to comment on him. (மீண்டும் டிவியை கவனிக்கிறார்)
புரொபஸர்: Don't you know this whole show is scripted.
மீனாட்சி: இருக்கட்டுமே. But I love this drama. சரி உங்களுக்கு எப்படித் தெரியும்?
கணேஷ்: அதென்ன scripted?
புரொபஸர்: ரெண்டு பேரும் ஒரே சமயத்தில கேட்டா எப்பிடி? மொத்தமும் பிளான் பண்ணித் தான் பண்ணுறாங்க. அது தான் scripted. என்னோட சில நண்பர்கள் டிவி சேனல்களில் வேலை பார்க்கிறாங்க. So I heard it on the grapevine.
கணேஷ்: Grape B?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...