நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்! 102

புரொபஸர், கணேஷ், கிளி Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் புரொபஸரின் மனைவி மீனாட்சியுடன்

News image
Updated On :29 ஆகஸ்ட் 2017, 5:32 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், கிளி Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் புரொபஸரின் மனைவி மீனாட்சியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். Through the grapevine எனும் expression எப்படி ஆங்கிலத்தில் தோன்றியது என்பதை கிளி Captain Flint கணேஷுக்கு விளக்குகிறது. 

புரொபஸர்:  நான் ஒரு சின்ன விஷயத்தை நடுவில் சொல்லலாமா?
Captain Flint: நான் சொல்ல வந்ததை நீங்க ஹைஜேக் பண்ணாம இருந்தா சரி!
கணேஷ்: சார்... எனக்கொரு சந்தேகம்?
புரொபஸர்: Please don't jump the gun. என்னைச்  சொல்ல விடுங்க.
Captain Flint: சொல்லுங்க...  சொல்லுங்க
மீனாட்சி: என்னிக்காவது உங்க வகுப்பில மாணவர்களை பேச விட்டிருக்கீங்களா?
புரொபஸர் (கோபமாய்): உனக்குத் தெரியுமா? நான் எவ்வளவு democratic ஆக  வகுப்பில இருப்பேன் தெரியுமா? அதெப்பிடி நீ அப்பிடி சொல்லலாம்?
மீனாட்சி: ஓகே...  ஓகே...  I was just teasing. Don't eat my head off now.
புரொபஸர்:  இல்ல நான் இனி பேசல...
கணேஷ்: கோச்சுக்காதீங்க சார். சொல்லுங்க.
புரொபஸர் (செருமியபடி): சாமுவல் மோர்ஸ் 1844இல் தந்திக் கருவியைக் கண்டுபிடித்து பயன்படுத்துகிறார். ஆனால் through the  grapevine எனும் வழக்காறு பயன்பாட்டில் வர கூடுதலாய் 8 வருடங்கள் ஆகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்...
மீனாட்சி:  grapevine பழங்காலம் தொட்டே இருக்கிறது.
புரொபஸர்: ஆமா. அந்த காலத்தில் திராட்சைத் தோட்டங்களின் மறைவில் மக்களும் தோட்டப் பணியாளர்களும் புரளி பேசிக் கொள்வார்கள். ஆனால் அப்போதெல்லாம் இந்த வழக்காறு தோன்றவில்லை. 
Captain Flint: Correct. தந்திக் கருவியின் கம்பிகள், அதாவது கேபிள்கள், பார்க்க கம்புகளில் சுற்றிப் படர்ந்த திராட்சைக் கொடிகள் போல் இருப்பதாய் மக்களுக்குத் தோன்றியது. இந்த தந்தி வழியாக மிக வேகமாய் செய்தி பரவுவதையும் மக்கள் கவனித்தார்கள். முன்பு இதே போல் செய்தி பரவியது அது கிசுகிசுவாக இருக்கும் போதே. அதுவும் திராட்சைக் கொடிகளின் மறைவின் பேசப்பட்ட கிசுகிசுக்கள்.  மக்கள் ரெண்டையும் முடிச்சுப் போட்டு through the grapevine எனும் சொற்றொடரை உருவாக்கினார்கள்.
கணேஷ்:  செம  சார்... நான் என் சந்தேகத்தை ...
புரொபஸர்:  கேளுடா 
கணேஷ்:  ஹைஜேக் என்றால் கடத்துறது தானே?
புரொபஸர்: ஆமா
கணேஷ்:  அப்போ kidnap என்றால்?
புரொபஸர்:  மனிதர்களை கடத்துவது kidnap.  அதுவும் பணயத் தொகைக்காக.  ஆனால் ஹைஜேக் என்பது வாகனங்களைக் கடத்தி தமது தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்துவது.  உதாரணமாய், ஒரு விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் செல்லும் போது அதன் உள்ளிருக்கும் பயணிகள் kidnap செய்யப்படுகிறார்கள்.  ஆனால் இங்கே அழுத்தம் விமானம் கடத்தப்பட்டதற்கே என்பதால் நாம் the aircraft was hijacked என்று சொல்வோம்.
கணேஷ்: சார் kid என்றால் குழந்தை தானே? அப்படியென்றால்...
புரொபஸர்: Good observation. ஆரம்பத்தில் அதாவது 17வது நூற்றாண்டில் குழந்தைகளைக் கடத்துவதை தான் kidnap என சொல்ல ஆரம்பித்தார்கள்.  அதாவது அப்போது அமெரிக்க காலனிகளில் வேலை செய்ய அடிமைகள் தேவைப்பட்டார்கள்.  இதற்காய் கறுப்பர்களின் குழந்தைகளை கடத்தி விற்றார்கள்.  அப்படித் தான் இச்சொல் உருவாகி இருக்க வேண்டும்.
கணேஷ்: அப்படீன்னா nap? பிடிப்பது என அர்த்தமா?
புரொபஸர்:  Nap என்றால் குட்டித் தூக்கம்.  ஆனால் இங்கே இது அந்த nap அல்ல. Nab எனும் சொல் இங்கே nap ஆக மருவி பயன்பட்டது. Nab என்றால் பிடிப்பது. நாளிதழ்களில் குற்றவாளிகளை காவலர்கள் கைது செய்வதை police nabbed the offenders என எழுதுவார்கள்.
மீனாட்சி:  Allow me to hijack this interesting discussion.
கணேஷ்: நீங்க ஹைஜேக் பண்ணப் போறீங்களா?
மீனாட்சி: அப்படி இல்ல. ஒரு விவாதத்தை அதன் நோக்கத்துக்கு மாறாக இன்னொருவர் கையில் எடுப்பதையும் ஹைஜேக் என்பார்கள். சரி இந்த ஹைஜேக் எனும் சொல் எப்படி வந்திருக்கக் கூடும் என்பதற்கு பின்னால் ஒரு கதை உண்டு. நேற்று ஒரு பத்திரிகையில் படிச்சேன்.
கணேஷ்: என்னங்க?
மீனாட்சி: 1920 முதல் 1933 வரை அமெரிக்காவில் சாராயம் உற்பத்தி பண்ணுவதோ, விற்பனை பண்ணுவதோ குடிப்பதோ தடை செய்யப்பட்டிருந்தது. அப்போது கள்ளச்சாராயத் தொழில் கொழித்தது. அதோடே இந்த கள்ளச்சாராயம் விற்கும் கும்பல்கள் இடையே தொழில் போட்டியும் அதனாலான மோதல்களும் ஏற்பட்டன. ஒரு கள்ளச்சாராய கடத்தல்காரர் தன் வண்டியில் சரக்கை எடுத்துப் போகும் போது எதிரணிக்காரர் வழிமறித்து துப்பாக்கியை நீட்டி ‘hi Jack’ என்பார். இவர் பயந்து போய் சரக்கை ஒப்படைத்து விடுவார். பின்னர் இதுவே மருவி  hi jackந் ஆனது.
கணேஷ்: Jack என்றால்?
 (இனியும் பேசுவோம்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.