வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 68
புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி ஒரு ஏடிஎம் வாயிலில் பணம் எடுக்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.


புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி ஒரு ஏடிஎம் வாயிலில் பணம் எடுக்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் வரிசையில் நிற்கும் முதியவர் ஒருவர் பணத்துக்காகத் தான் pillar to post ஓட வேண்டி வந்ததாகச் சொல்கிறார். அதன் பொருள் என்ன? என கணேஷ் புரொபஸரிடம் கேட்கிறான்.
புரொபஸர்: From pillar to post என்பதற்கு ஒரு பொருள் சாரே சொன்னது: தெருத்தெருவா அலையறது. ஓர் அரசு அலுவலகத்தில் ஒரு வேலையை முடிப்பதற்காய் விண்ணப்ப படிவத்துடன் திரிவதையும் I ran from pillar to post to get my pan card என்று சொல்லலாம். இந்த idiomம்க்கு இன்னொரு பொருளும் உண்டு. ஊர் ஊராய் மாறிப் போக நேர்வதையும் அப்படிச் சொல்லாம். நான் சிறுவனாய் இருக்கும்போது, என் அப்பா தபால்துறையில் கிளார்க்காக இருந்தார். அடிக்கடி இடம் மாற்றுவார்கள். So we kept moving from pillar to post, from Coimbatore to Tirunelveli to Chennai, year after year.
ஜூலி: நேற்றைய பேப்பரில் ஸ்ருதி ஹாசன், கெளதமி பற்றின ஒரு குறிப்பிலும் இந்த from pillar to post வந்திருந்தது.
கணேஷ்: ஸ்ருதியை அப்படி அலைய விட்டது யாரு?
ஜூலி: ஹி... ஹி... அந்த அர்த்தத்தில் இல்லை. ஒரு புரளி வேகமாய் மக்களிடையே பரவுவதையும் from pillar to post என சொல்லலாம். The gossip about Shruti Haasan quickly went from pillar to post என்று செய்தியில் எழுதியிருக்கிறார்கள்.
முதியவர்(திரும்பி): Sorry to interrupt. ஸ்ருதி ஹாசன்னு ஏதோ சொன்னீங்களே?
புரொபஸர்: அந்த நடிகை பற்றின ஒரு கிசுகிசுவை உதாரணத்துக்கு சொன்னாங்க. வேறொண்ணுமில்ல.
முதியவர்: ஓ Gossipனு எதுவோ பேசினீங்களே... அதனால கேட்டேன்.
புரொபஸர்: உங்க வயசுக்கு கிசுகிசுவெல்லாம் கவனிக்க மாட்டீங்கன்னு நெனச்சேன்.
முதியவர்: ஹா... ஹா... That was my bread and butter.
கணேஷ்: கிசுகிசுவுக்கும் ரொட்டிக்கும் என்ன உறவு? புரியலையே...
புரொபஸர்: He means his livelihood depended on gossip. Right.
முதியவர்: ஆமா. என் ஜீவனம் அதை நம்பி ஓடியது. நான் நாற்பது வருசம் ஒரு நாளிதழில் வேலை பார்த்தேன். இருபத்தைஞ்சு வருடங்கள் பல பேரை பற்றி கிசுகிசுக்கள் எழுதினேன். அதனால தான் நீங்க பேசினப்ப it aroused my curiosity.
புரொபஸர்: Very interesting.
முதியவர்: Gossiping எனும் சொல்லோட
ஆதிமூலத்தை தெரிஞ்சுக்கிட்டா இன்னும் ஆச்சரியப்படுவீங்க.
ஜூலி: Go ahead.
முதியவர்: இப்போ யாரு பேசினது (கணேஷிடம்) தம்பி நீயா?
கணேஷ்: எங்களோட நாய் ஜூலி. அது ஒரு மேஜிக் நாய். அது அடிக்கடி பேசும்.
முதியவர்: வாவ். என்னால நம்ப முடியவில்லை. I am awestruck.
ஜூலி: Please go ahead. You aroused my curiosity.
கணேஷ்: ஏன் ஜூலி அவர் சொன்னதையே நீயும் திரும்ப சொல்றே?
ஜூலி: இல்லையே...
கணேஷ்: அவர் தான் கொஞ்ச முன்னாடி எங்களை பார்த்து You aroused my curiosity அப்டீன்னு
சொன்னாரே...
ஜூலி: அதுவா that was in a different sense. உங்கள் பேச்சு என்னுடைய ஆர்வத்தை தூண்டியது எனும் பொருளில் அவர் பயன்படுத்தினார். ஆனால் நான் சொன்னது வேற மீனிங்கில். நீங்க சொல்வது பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அதனால் தொடர்ந்து சொல்லுங்கள் என வேண்டுவதும் கூட you aroused my curiosity தான். இதையே இன்னும் லோக்கலா சொல்றதுன்னா I am all ears. I am abuzz. I am all goggly. That yanked my attention என்றெல்லாம் வரும்.
முதியவர்: ஓகே.. ஓகே... நான் சொல்ல வந்ததை முடிச்சுடறேன். Gossip எனும் சொல் 13ஆம் நூற்றாண்டில் இருந்தே புழக்கத்தில் இருக்கிறது. அதாவது Godsibb எனும் சொல்லாக, சொந்தக்காரர்கள் எனும் பொருளில்.
கணேஷ்: சொந்தக்காரர்கள் எனும் சொல் எப்படி
கிசுகிசு என மாறியது?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...