வாங்க இங்கிலீஷ் பேசலாம்-69
புரொபஸரும் கணேஷும் ஏடிஎம் வரிசையில் நிற்கும் போது ஒரு முதியவரைச் சந்திக்கிறார்கள்.


புரொபஸரும் கணேஷும் ஏடிஎம் வரிசையில் நிற்கும் போது ஒரு முதியவரைச் சந்திக்கிறார்கள். அவர் அவர்களுக்கு gossip எனும் சொல் எப்படி உறவினர்கள் எனும் சொல்லில் இருந்து மருவி இன்றைய வடிவம் பெற்றது எனக் கூறுகிறார்.
முதியவர்: ஐரோப்பிய சமூகத்தில் முன்பு godparenting எனும் வழக்கம் இருந்தது. அதாவது ஒரு குழந்தை பிறந்ததும் அதன் உறவுக்காரர்களில் ஒருவர் அக்குழந்தையை மானசீகமாய் தத்து எடுத்துக் கொள்வார். அக்குழந்தையின் எல்லா வளர்ச்சி கட்டங்களிலும் தனி அக்கறை எடுத்துக் கொள்வார். 13ஆம் நூற்றாண்டில் இப்படியான நெருக்கமான உறவினர் எனும் அர்த்தத்தில் godsibb எனும் சொல் புழங்கியது. இந்த உறவுக்காரர்கள் ஏதாவது விசேஷங்களின் போது சந்தித்தால் முதலில் என்ன செய்வார்கள் எனத் தெரியுமில்லையா?
கணேஷ்: ஊர் வம்பு.
முதியவர்: ஆமா... ஆமா. அந்த காலத்திலேயும் அப்படித்தான். இப்படி வம்பு பேசறதே உறவுக்காரங்க வேலையாப் போனதினால், நாட்பட அச்சொல் மருவி உறவுக்காரர் என்றாலே கிசுகிசு எனும் பொருள் ஏற்பட்டது. அப்படித் தான் Godsibb, gossip ஆனது.
கணேஷ் உடனே இதை தன் போனில் உள்ள முகநூலில் பகிர்கிறான்: செம பாயிண்ட் சார். நிறைய பேர் லைக் பண்ணுறாங்க. இந்த பாருங்க பத்து பேரு LOL.
ஜூலி: லொள்.
கணேஷ்: அந்த லொள் இல்ல லூசு. இது laugh out loud. இது இப்போ புதுசா இண்டெர்நெட்ல உருவாகி இருக்கிற வார்த்தை.
புரொபஸர்: Acronymன்னு சொல்லலாம்.
கணேஷ்: அதென்ன சார் acronym?
புரொபஸர்: ஒரு நீண்ட பெயரின் வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை கூட்டி ஒரு புது பெயராக உச்சரிப்பது. உதாரணமா, NASA. - National Aeronautics and Space Administration.
கணேஷ்: அப்படீன்னா BBC?
முதியவர்: I think it is an abbreviation.
புரொபஸர்: இல்ல சார்... தப்பு.
முதியவர்: சார் நான் சொல்றது தான் சரி.
ஜூலி: நிறுத்துங்க முதல்ல. எல்லாமே abbreviation தான்.
முதியவர்: அப்படீன்னா என்ன சொல்ல வர்றே?
ஜூலி: எதைச் சுருக்கி ஒரு பெயராக்கினாலும் அது abbreviation. Abbreviationஇல் ரெண்டு வகை. Acronym மற்றும் initialism. சுருக்கி ஒரு பெயரா படிக்க முடிஞ்சா அது acronym. NATO என்கிறதை நீங்க ஒரு பெயரா வாசிக்க முடியும். LOL கூட அப்படித் தான். ஆனால் SBI என்கிறதை ஒரு பெயரா வாசிக்க முடியாது. தனித் தனி எழுத்தா தான் உச்சரிக்கணும். அதனால அது initialism. BBC கூட எழுத்துக்களாய் உச்சரிக்க வேண்டியது. அதுவும் initialism. ஆனால் எல்லாமே abbreviation என்கிற வகைக்குள் வரும்.
முதியவர்: கரெக்ட் . இப்போ நினைவு வந்திடுச்சு. சின்ன வயசில ஸ்கூல்ல படிச்சது.
ஜூலி: ம்க்கும்...
முதியவர்: இந்த LOL எல்லாம் சேட்டிங்கின் போது நீங்க பயன்படுத்துறது தானே? It means 'ha... ha.'
கணேஷ்: நான் பயன்படுத்துறது இல்ல.
முதியவர்: ஏன்?
கணேஷ்: எனக்கு அதோட அர்த்தமே இத்தனை நாளா புரிஞ்சது இல்ல. எதுக்கு எல்லாரும் லொள் லொள்னு குரைக்கிறாங்கன்னு நெனச்சுப்பேன்.
முதியவர்: இந்த பல்லில்லாத வயசில எனக்கே இதெல்லாம் புரியுது. நீ என்னடான்னா சுத்த கர்நாடகம் போ. தம்பி இது பேரு தான் e-laughing. அதாவது இணையத்துக்குள்ளே சிரிச்சிக்கிறது. Virtual laughing. இதில ஒரு சுவாரஸ்யமான விசயம் இருக்கு. நீ மட்டுமில்ல பல பேரு இந்த LOL-இன் அர்த்தம் புரியாம தான் பயன்படுத்தி வராங்க.
கணேஷ்: என்னை மாதிரி புதுசா கத்துக்கிறவங்களா இருக்கும் சார்.
முதியவர்: இல்லையே. டேவிட் காமரூன் கேள்விப்பட்டிருக்கியா? இங்கிலாந்தோட முன்னாள் பிரதமர்.
கணேஷ்: ஆமா.
முதியவர்: ஆமா. அவர் வந்து தன்னோட பக்கத்து வீட்டு பெண்ணான ரெபக்கா புரூக்ஸுக்கு...
கணேஷ்: ஓ!
முதியவர்: இருடா. ரெபக்கா ஒரு பத்திரிகையாளர். கேமரூன் அவங்களுக்கு அடிக்கடி மெஸேஜ் அனுப்புவார். அப்போதெல்லாம் LOL என்று முடிப்பார். அவங்களுக்கு ஒரே குழப்பம். ஏன்னா அப்படி அந்த மேஸேஜில் காமெடியா எதுவும் இருக்காது.
கணேஷ்: அப்புறம் ஏன் அப்படி எழுதினார்?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...