நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 89

புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

News image
Updated On :2 ஜூன் 2017, 7:29 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Captain Flint: சொல் மானிடா என் ஆங்கிலத்தில் என்ன குற்றம் கண்டாய்?
கணேஷ்: வாட்? தமிழ்ல சொல்லு. அப்போது தான் புரியும்.
Captain Flint: நான் என்ன தப்பா சொல்லிட்டேன்பா?
கணேஷ்: அதுவா Krishna Devaraya was a catholic king என்று சொன்னே இல்ல?
Captain Flint: ஆமா. அதுக்கு?
கணேஷ்: Krishna Devaraya ஓர் இந்து. அவர் கத்தோலிக்கர் அல்ல.
Captain Flint: தம்பி doubting Thomas, ஒரு விசயத்தின் ஆழ அகலம் ஆராயாம தப்பு கண்டுபிடிக்க முயலக் கூடாது. Catholic என்பதற்கு ரெண்டு அர்த்தங்கள்
உண்டு தெரியுமா?
கணேஷ்: அப்படீன்னா கிருஷ்ண தேவராயர் இந்து இல்லையா?
Captain Flint: நீ கொஞ்ச நேரம் வாயை மூடி காதைத் திறப்பாயா?
கணேஷ்: சரிங்க.
Captain Flint: Catholic என்பதை முதல் எழுத்து பெரிய எழுத்தாக எழுதினால் அது கத்தோலிக்க மதத்தை குறிக்கும். இல்லாவிட்டால், அதாவது முதல் எழுத்து
சின்ன ‘c’ என்றால், குறிப்பிட்ட நபர் பலதரப்பட்ட ஆர்வங்கள் கொண்டவர், திறந்த மனம் கொண்டவர் என பொருள் வரும். உதாரணமாய், முகலாய பேரரசர்
அக்பர் பரந்த மனத்துடன் எல்லா மதங்களையும் ஊக்கப்படுத்தினார். அவர் இந்துக்கள் மீதான ஜிஸ்யா வரியை ஒழித்தார். இந்து வேதங்கள், இதிகாசங்களை
பாரசீக மொழிக்கு மொழிபெயர்த்தார். இந்துக்களை தன் அமைச்சர்களாக நியமித்தார். 
கணேஷ்: வாவ்!
Captain Flint: ஆம், அதனால் Akbar was a catholic king. 
கணேஷ்: எப்படி கத்தோலிக்க மதத்துக்கு இப்படி ஓர் அர்த்தம் வந்தது?
Captain Flint: நல்ல கேள்வி பையா. Katholikos எனும் கிரேக்க சொல்லில் இருந்து catholic தோன்றியது. அச்சொல்லுக்கு உலகம் தழுவிய, முழுமையான என
அர்த்தங்கள் உண்டு. பதினாறாம் நூற்றாண்டில் ரோமன் திருச்சபையில் இருந்து கலகம் செய்து Protestant கிறித்துவர்கள் தோன்றினார்கள். சரி, இனிமேல்
உலகம் முழுக்க நாம் இருக்கும் கிறித்துவர்கள் நாம் மட்டுமே என பொருள்பட நம் மதத்தின் பெயரை மாற்ற வேண்டும் என ரோமன் கிறித்துவர்கள் முடிவு
செய்து Catholic என தம்மை அழைக்க ஆரம்பித்தனர். அதாவது நாங்கள் இந்த கலகத்தால் தனிமைப்படவில்லை;  நாங்கள் உலகப் பொதுவான மதம் என
தெரிவிக்க அப்பெயரை எடுத்துக் கொண்டனர். அதனால் தான் அனைத்தையும் பரந்த மனதுடன் ஏற்றுக் கொள்கிறவர்களை catholic என அழைக்கிறோம். சரி
உன்னோட அடுத்த கேள்வி என்ன?
கணேஷ்: என் நண்பர் ஒருத்தர் தில்லிக்கு குடிபெயர்ந்தார்.
Captain Flint: சரி.
கணேஷ்: அவர் அதைப் பற்றி பேஸ்புக்கில் எழுதும் போது I am translated from my familiar surroundings to the alien Delhi atmosphere என்றார். Translation
என்றால் மொழிபெயர்ப்பது தானே? அதை எப்படி இடம் பெயர்வதற்கு பயன்படுத்தலாம்?
Captain Flint: Translate என்ற சொல் translat  என்ற லத்தீன் சொல்லில் இருந்து வருகிறது. இதன் பொருள் ஒன்றை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு
எடுத்துச் செல்லுதல். ஆக, translate என்றால் அதன் அசலான அர்த்தத்தில் மொழிபெயர்ப்பு என்றில்லை. வெறும் பார்சல் சர்வீஸ் தான். அதனால் தான் ஓர்
இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு நகர்த்துவதை இன்றும் translate என அழைக்கிறோம். உன் நண்பரின் பயன்பாடு சரி தான். திருச்சபையில் ஒரு
பிஷப்பை இடம் மாற்றுவதை translate  எனச் சொல்கிறார்கள். ஒரு புனிதரின் எலும்புத் துண்டு, துணி போன்றவற்றை relic என்பார்கள். தமிழில் திருப்பண்டம்.
இந்த relic- ஐ இடம் மாற்றுவதற்கும் translate தான். உதாரணமாய் Buddhas relic was translated to the museum in London.
கணேஷ்: சரி என்னை ஏன் doubting Thomas  என்று திட்டினாய்?
கிளி: முதலில் நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணுவாயா?
கணேஷ்: என்ன?
கிளி: என்னை இந்த சிறையில் இருந்து காப்பாற்றி, இந்த கொள்ளைக்கப்பலில் இருந்து வெளி உலகுக்கு கொண்டு விடுவாயா?
கணேஷ்: கண்டிப்பாக.
(கணேஷ் கிளியை கூண்டைத் திறந்து எடுத்து புரொபஸரிடம் செல்கிறான்)
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.