வாங்க இங்கிலீஷ் பேசலாம் 90
புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கணேஷ் Captain
Flint அதன் கூண்டுடன் தூக்கி செல்கிறான்.
Captain Flint: ப்ளீஸ், ப்ளீஸ் என்னைக் கடலில் மூழ்கடிச்சு கொன்னுடாதே!
கணேஷ்: அது நீ எனக்கு ஒழுங்கா பதில் சொல்றதை பொறுத்தது. சரி என்னை ஏன் doubting Thomasன்னு சொன்னே?
Captain Flint: அதுவா? தாமஸ் ஏசு கிறிஸ்துவுடைய சீடர்களுள் ஒருவர். அவர் ஒரு பகுத்தறிவாளர். எதையும் நேரில் கண்டு உணராமல் நம்பமாட்டார்.
சிலுவையில் அறையப்பட்ட கர்த்தர் உயிர்த்தெழுந்த பின் தாமஸைத் தவிர பிற சீடர்களுக்கு காட்சியளித்தார். இதைக் கேள்விப்பட்ட தாமஸ் கர்த்தரின்
உயிர்த்தெழுதல் ஒரு கட்டுக்கதை, அவர் உண்மையில் தன் முன் தோன்றினால் அவரது காயங்களைத் தொட்டுப் பார்த்த பின்னர் மட்டுமே நம்புவேன் எனக்
கூறினார். அடுத்த முறை தாமஸ் பிற சீடர்களுடன் இருக்கும் போது கர்த்தர் தோன்றினார். தாமûஸ நோக்கி தன் காயங்களைக் காட்டி தொட்டு உறுதி
செய்யுமாறு வேண்டினார். தாமஸ் சோதித்துப் பார்த்து வியப்படைந்தார். இது தான் விவிலியம் சொல்லும் கதை. கடவுளையே நம்பத் தயங்கியவர் தாமஸ். அதேபோல எந்த ஒரு விசயத்தையும் நிரூபணம் இருந்தால் தான், அனுபவவயப்பட்டு அறிந்தால் மட்டும் தான் நம்புவேன் என பிடிவாதம் பிடிக்கிறவர்களை doubting Thomas என கிண்டலாகச் சொல்வார்கள்.
கணேஷ்: ஓ... இது தான் அர்த்தமா? அதிகமா சந்தேகப்படுறவங்களைப் பற்றிய சொல் என நினைத்தேன்.
Captain Flint: இன்று துடுக்குத்தனமாய் அதிக கேள்விகள் கேட் பவர்களை doubting Thomas என அழைக்கிறார்கள். ஆனால் உண்மையான பொருள் இது தான்.
இப்படியானவர்களுக்கு இன்னொரு சொல்லும் வழக்கில் உள்ளது.
கணேஷ்: என்ன?
Captain Flint: Skeptic.
கணேஷ்: நான் இதை எங்கேயோ முன்பு கேள்விப்பட்டிருக்கிறேனே?
Captain Flint: எங்கே?
கணேஷ்: ஆங்... ஞாபகம் வந்திருச்சு. கடவுள் உண்டா? இல்லையா? என்கிறது பற்றி எனக்கும் என் கேர்ள் பிரண்டுக்கும் ஒரு விவாதம் வந்தது. கடைசியில்...
Captain Flint: என்னாச்சு?
கணேஷ்: அவள் சொன்னாள் கணேஷ் நீ ஒரு skeptic. உங்கிட்ட பேசறது வேஸ்ட். நான் திரும்பவும் என்னை நியாயப்படுத்தினேன். அவள் கேட்டாள் சரி ஓகே, நீ
என்னை நம்புறியா? என் காதலை நம்புறியா? நான் ஒரு நிமிஷம் யோசிச்சேன். அவள் நான் யோசிக்கிறதை பார்த்து பேக்கை தூக்கி என் மூஞ்சியில அடிச்சிட்டு
போயிட்டா. இன்னும் என்கிட்ட பேசல.
Captain Flint: She is right.
கணேஷ்: இல்ல. யோசிக்காம எப்படி தடாலடியா சொல்றது? அது முட்டாள்
தனம் இல்லையா?
Captain Flint: பழங்கால கிரேக்கத்தில் உன்னை மாதிரி தீவிரமா எல்லாத்தையும் சந்தேகப்படுறவங்க இருந்தாங்க. Sophists. இவங்க அடிப்படையில் மக்களுக்கு
விவாதம் செய்யவும் தத்துவம் பழகவும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள். ஆனால் இவர்கள் சில நேரம் ஓர் அபத்தமான விசயத்தை ரொம்ப புத்திசாலித்தனமாக
விவாதித்து நிறுவ முயல்வார்கள். உதாரணமா, ஜார்ஜியஸ் எனும் சோபிஸ்ட், "இந்த உலகில் ஒன்றுமே இல்லை அப்படி எதாவது இருந்தாலும் நம்மால் அறிய
முடியாது. அறிந்தாலும் நம்மால் மொழி வழியாக வெளிப்படுத்த முடியாது'' என்றார்.
கணேஷ்: இந்த வாதம் சரி தானே?
Captain Flint: Stupid. ஒன்றுமே இல்லை அனைத்தும் மாயை என்பது கூட இருக்கலாம். ஆனால் அப்படி ஏதாவது இருந்தாலும் நம்மால் அறிய முடியாது என தான் முதலில் சொன்னதை அவர் இரண்டாவதாய் மறுக்கிறார். அப்படி அறிய முடிந்தாலும் அதை சொல்ல முடியாது என இரண்டாவது சொன்னதை
மூன்றாவதாய் மறுக்கிறார். கடைசியில் பார்த்தால் நம்மால் அறியவோ சொல்லவோ முடியாது என்பதற்காய் ஒன்றுமே இல்லை என எப்படிக் கூற முடியும்?
கணேஷ்: கரெக்ட். உனக்கு செம மூளை Flint.
Captain Flint: Thank you. இப்படி புத்திசாலித்தனமா ஆனால் முட்டாள்தனமாக விவாதிப்பதை இப்போதும் sophism, sophist argument என அழைக்கிறார்கள்.
இந்த சோபிஸ்டுகள் எல்லாவற்றையும் மறுக்கும் ஒரு தத்துவத்தை உருவாக்கினார்கள் skepticism. கி.பி ஐந்தாம் நூற்றாண்டிலே இந்த தத்துவம் அழியத் தொடங்கியது. ஆனால் இவர்களின் நினைவாக இப்போதும் எதை எடுத்தாலும் சந்தேக்கிற சாம்பிராணிகளை ள்ந்ங்ல்ற்ண்ஸ்ரீ என அழைக்
கிறோம்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...